10 கிராம் தங்கத்தோட விலை வெறும் 88 ரூபாய் தான்.. டைம் மெஷின் கிடைச்சா நல்லா இருக்குமே..!

தங்கம் உலகிலேயே அதிக மதிப்பு கொண்ட உலோகம். இந்தியாவில் தங்கம் நமது கலாச்சாரத்தோடும் வாழ்வியலோடும் கலந்திருக்கும் ஒரு பொருள். குழந்தை பிறப்பு, காதுகுத்து, திருமணம், பிறந்தநாள் , பண்டிகை நாட்கள் என தங்கம் வாங்குவதற்கு நமக்கு பல காரணங்கள் இருக்கின்றன. தங்கத்தின் விலை ஏறும் போதெல்லாம் சாமானிய மக்கள் பாதிக்கப்படுவதற்கு இதுவும் ஒரு காரணமாகும்.
தங்கம் கடந்த 1947 ஆம் ஆண்டில் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது ஒரு கிராமின் விலை 8 ரூபாய் தான் தெரியுமா?.

10 கிராம் தங்கத்தோட விலை வெறும் 88 ரூபாய் தான்.. டைம் மெஷின் கிடைச்சா நல்லா இருக்குமே..!

24 கேரட் கொண்ட 10 கிராம் தங்கத்தின் விலை 88 .62 ரூபாய் ஆகும். இந்தியா சுதந்திரம் அடைந்ததற்கு பிறகு இந்த 7 தசாப்தங்களிலும் தங்கத்தின் விலை வளர்ச்சி பாதையில் தான் இருந்திருக்கிறது. 1950 ஆம் ஆண்டில் 24 கேரட் கொண்ட 10 கிராம் தங்கத்தின் விலை 99 ரூபாய். அதுவே 2024 ஆம் ஆண்டான தற்போது 70 ஆயிரத்து 370 ரூபாய் என்ற அளவை எட்டியுள்ளது. அதாவது 750 மடங்கு தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.

1950 ஆம் ஆண்டில் 24 கேரட் கொண்ட 10 கிராம் தங்கத்தின் விலை 99 ரூபாய், பத்து ஆண்டுகளில் அதாவது 1960 இல் 111 ரூபாய் என உயர்ந்தது. 1970 ஆம் ஆண்டில் 184 ரூபாய் என அதிகரித்தது ,1980 ஆம் ஆண்டில் ஆயிரம் ரூபாயை கடந்து பத்து கிராம் தங்கத்தின் விலை 1330 ரூபாய் என்றானது. தங்கத்தின் விலை முதல் முறையாக 1985 ஆம் ஆண்டில் 2130 ரூபாய் என்ற அளவினை கடந்தது.

1990 ஆம் ஆண்டில் பத்து கிராம் தங்கத்தின் விலை 3200 ஆகும். 1995இல் இது 4,680 என்ற அளவை எட்டியது 2000 ஆம் ஆண்டின் 24 கேரட் கொண்ட 10 கிராம் தங்கத்தின் விலை 4400 ஆகும்.

2005 ஆம் ஆண்டில் 7000 ரூபாய், 2010 ஆம் ஆண்டில் 18,000 ரூபாய் என்ற அளவை எட்டியது. 2015 ஆம் ஆண்டு இந்தியாவில் 24 கேரட் கொண்ட 10 கிராம் தங்கத்தின் விலை 26 ,343 ரூபாய். 2020 ஆம் ஆண்டில் இது 48,651 ரூபாய் என அதிகரித்தது. தற்போது 70,370 (ஆகஸ்ட் 5ஆம் தேதி நிலவரம்) ரூபாய் ஆகும். 2000 ஆம் ஆண்டுக்கு பிறகு தங்கத்தின் விலை வேகமான வளர்ச்சியை கண்டது.

2000 ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை தங்கத்தின் விலை 17 மடங்கு அதிகரித்துள்ளது. கலாச்சார ரீதியாகவும் முதலீட்டு பார்வையிலும் தங்கம் முக்கியமான ஒரு பொருளாக பார்க்கப்படுகிறது. சர்வதேச அளவிலும் கூட தங்கம் தான் பாதுகாப்பான முதலீடாக இருக்கிறது. பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகளும் தங்கத்தை வாங்கி கையிருப்பாக வைத்து கொள்கின்றன. இந்தியா பெருமளவிலான தங்கத்தை இறக்குமதி செய்வதால் சர்வதேச போக்குக்கு ஏற்ப அதன் விலையும் நாளுக்கு நாள் மாறுகிறது.

Story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+