யெஸ் பேங்கின் இந்த பரிதாப நிலைக்கு காரணம் என்ன.. ஏன் வங்கி முடங்கியது.. சில காரணங்கள் இதோ!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் இருக்கும் யெஸ் பேங்க், கடன் சுமையில் இருந்து மீட்டெடுக்கும் பொருட்டும் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த வங்கியினை நிர்வகிக்க எஸ்பிஐயின் முன்னாள் அலுவலரான பிரஷாந்த் குமார் தற்போது நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் அடுத்த உத்தரவு வரும் வரையில் வங்கியில் டெபாசிட் வைத்திருப்பவர்கள் அதிலிருந்து 50,000 ரூபாய் வரையில் மட்டுமே பணம் எடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

சிக்கலில் போன் பே.. காரணம் யெஸ் பேங்க்!சிக்கலில் போன் பே.. காரணம் யெஸ் பேங்க்!

முடக்கத்திற்கு காரணம் என்ன?

முடக்கத்திற்கு காரணம் என்ன?

எனினும் மருத்துவ செலவு மற்றும் திருமணம் உள்ளிட்ட பல அவசர தேவைகளுக்கு வங்கி மேலாளார் அனுமதியுடன் 5 லட்சம் வரை பெற்றுக்கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது. ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கைக்கு என்ன காரணம். அதுவும் ஒரு தனியார் வங்கியினை தனது கட்டுபாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது ஏன் வாருங்கள் பார்க்கலாம்.

மோசமடைந்து வரும் நிதி நிலை

மோசமடைந்து வரும் நிதி நிலை

மிக மோசமான நிதி நிலை, சாத்தியமான கடன் இழப்புகள், சரியான நேரத்தில் கூடுதல் நிதி மூலதனத்தை திரட்ட இயலாமை. அதிகரித்து வரும் வாராக்கடன் விகிதம் உள்ளிட்ட பலவற்றால் கடந்த சில ஆண்டுகளாகவே யெஸ் பேங்கின் நிதி நிலைமை மிக மோசமான நிலையை அடைந்தது. மேலும் மோசமடைந்து வரும் நிதி பிரச்சனையினால் வைப்புத் தொகையை திரும்ப பெறுதலும் அதிகரித்து வந்தது. இப்படி ஒரு மோசமான நிலையில் இவ்வங்கி கடந்த நான்கு காலாண்டுகளிலும் தொடர்ந்து நஷ்டத்தினையே கண்டு வந்தது கவனிக்கதக்கது.

ஆளுகை சிக்கல்

ஆளுகை சிக்கல்

ஒரு புறம் நிதி சிக்கலில் சிக்கித் தவித்து வந்த யெஸ் பேங்கில், கடுமையான நிர்வாக சிக்கல்களையும், நடைமுறை சிக்கல்களையும் சந்தித்துள்ளது. இது வங்கியின் சரிவுக்கு மேலும் வழிவகுத்துள்ளதாக கூறப்படுகிறது. உதாரணத்துக்கு 2018 - 2019-ல் வாரக்கடன் விகிதம் 3,277 கோடி ரூபாய்க்கு குறைவாக அறிக்கை செய்தது. இந்த செய்கையானது முன்னாள் துணை ஆளுநராக இருந்த ஆர் காந்தியை வங்கிக்கு அனுப்ப ரிசர்வ் வங்கியை தூண்டியதாகவும் கூறப்படுகிறது.

தவறான உத்தரவாதம்

தவறான உத்தரவாதம்

இருப்பு நிலை மற்றும் பணப்புழக்கத்தை வலுப்படுத்த வங்கியின் நிர்வாகம் தொடர்ந்து முயற்சி எடுத்து வருவதாகவும், இதற்காக பல்வேறு முதலீட்டாளர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும், அவை வெற்றி பெற வாய்ப்புள்ளதாகவும் வங்கி நிர்வாகம் ரிசர்வ் வங்கியிடம் சுட்டி காட்டியதாக அறிக்கைகள் கூறுகின்றன. ஆனால் உண்மையில் வங்கி உயிர் வாழவும் வளரவும் தேவையான, எந்தவொரு உறுதியான திட்டமும் இல்லை என்றும் கூறப்படுகிறது.

தீவிரமற்ற முதலீட்டாளர்கள்

தீவிரமற்ற முதலீட்டாளர்கள்

இந்த ஆண்டு பிப்ரவரியில் பங்கு சந்தையில் தாக்கல் செய்யப்பட்டதன் படி, மூலதனத்தை ஊக்குவிப்பதற்கான வாய்ப்புகளை ஆராய்வதற்காக வங்கி ஒரு சில தனியார் பங்கு நிறுவனங்களுடன் ஈடுபட்டிருந்தது. ஆனால் இந்த முதலீட்டாளர்கள் ரிசர்வ் வங்கியின் மூத்த அதிகாரிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. எனினும் பலவேறு காரணங்களுக்காக அவர்கள் வங்கியில் எந்த மூலதனத்தையும் உட்செலுத்த வில்லை. ஆக இந்த செயல் முதலீட்டாளர்கள் மூலதனத்தை வங்கியில் செலுத்த தீவிரமாக இல்லை என்பதையே காட்டுகிறது.

மறுமலர்ச்சி இல்லை

மறுமலர்ச்சி இல்லை

சரியான மூலதனம் கிடைக்காமையால் சரியான மறுமலர்ச்சிக்கு வழியில்லாமலேயே போனது. இது ஒரு நம்பகரமான மறுமலர்ச்சி திட்டத்தினை உருவாக்க வங்கியின் நிர்வாகத்திற்கு போதுமான வாய்ப்பை இது வழங்கவில்லை. ஆகவே வங்கி இந்த அளவுக்கு மேலும் முடங்க இது வாய்ப்பாக அமைந்தது.

பணம் வெளியேற்றம்

பணம் வெளியேற்றம்

வங்கி வழக்கமான பணப்புழக்கதினை எதிர்கொண்டது. மேலும் வாடிக்கையாளர்கள் வைப்புத் தொகையை திரும்ப பெறுவதை வங்கி கண்டதாகவும் கூறியுள்ளது. உண்மையில் வைப்பு தொகை என்பது ரொட்டி அல்லது வெண்ணெய் போன்றாகும். இந்த வங்கி 2019 செப்டம்பர் மாதத்தில் 2.09 லட்சம் கோடி ரூபாய் வைப்பு தொகையை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

dO you know the reason of yes bank collapse: please check here?

You know why did yes bank collapse? According to the sources many financial position, governance issues, and false assurance, non -serious investors, no market – led revival in sight and outflow of liquidity.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X