சீக்கிரம் புக் பண்ணுங்க.. இந்த முன்னணி கம்பெனி கார்களின் விலை 2024ல் கூடப்போகுது!

சென்னை: மாருதி சுசூகி, மஹிந்திரா, ஹூண்டாய், டாடா போன்ற கார் நிறுவனங்கள் தங்களது கார்களின் விலையை இந்தாண்டு உயர்த்தக்கூடும் எனத் தெரிகிறது. மூலப்பொருள்கள் விலை உயர்வு, பணவீக்கம் போன்ற காரணங்களால் இந்த விலை உயர்வு இருக்கும். 2023ம் ஆண்டு ஏப்ரலில் மாருதி சுசூகி 0.8 சதவீதம் விலையை உயர்த்தியது. இந்நிலையில் டாடா மோட்டார்ஸ் தனது கார் விலையை ஏற்றப்போவதாக அறிவித்துள்ளது. ஆனால் எவ்வளவு சதவீதம் உயர்வு இருக்கும் என்பதைத் தெரிவிக்கவில்லை.

2024ம் ஆண்டு ஜனவரி மாதம், Audi நிறுவனம் 2 சதவீதம் அளவுக்கு விலையை உயர்த்துகிறது. "ஆவ்டி இந்தியா" நிறுவன சிஇஓ பல்பீர் சிங் தில்லான், இதுபற்றி கூறுகையில், ஆவ்டி பிராண்டுக்கு பிரீமியம் அந்தஸ்து இருப்பதால் கார் விலையை அதிகரிப்பதால் பாதிப்பு வராது என கருதுகிறோம். தயாரிப்பு மற்றும் செயல்பாடு செலவீனங்கள் அதிகரித்து இருப்பதால் நாங்கள் விலை உயர்வைச் செய்ய வேண்டியிருக்கிறது.

சீக்கிரம் புக் பண்ணுங்க.. இந்த முன்னணி கம்பெனி கார்களின் விலை 2024ல் கூடப்போகுது!

மஹிந்திரா இப்போ எஸ்யூவிக்களைதான் விற்பனை செய்து வருகிறது. அதன் விலையும் உயர்கிறது. எவ்வளவு என்று தெரியவில்லை. இதேபோன்று ஹூண்டாய், எம்ஜி மோட்டார்ஸும் கார் விலை உயர்வை அறிவிக்க உள்ளன. பிஎம்டபிள்யூ, போக்ஸ்வேகன், ஸ்கோடா, மெர்சிடஸ் பென்ஸ், வால்வோ, நிஸான், ஹோண்டா ஆகிய நிறுவனங்கள் தங்களது கார் விலையில் 2 முதல் 3 சதவீதம் உயர்த்தியுள்ளன. அதிக அம்சங்களுடன் (features) அறிமுகப்படுத்தபடும் கார்களின் விலை கணிசமாக அதிகரிக்கப்படுகிறது.

மூலப்பொருட்களின் விலையேற்றத்தால் மாருதி விலை உயர்வை நோக்கி தள்ளப்பட்டுள்ளது. டாடா மோட்டார்ஸின் நிலைமையும் இதுதான். டாடாவின் எலக்ட்ரிக் வாகனங்களின் விலையும் அதிகரிக்கிறது. பயணிகள் கார் மற்றும் எலக்ட்ரிக் வாகனங்களின் விலை ஜனவரியில் அதிகரிக்கப்படும். எவ்வளவு உயர்வு இருக்கும் என்ற விவரம் விரைவில் தெரியப்படுத்தப்படும் என்று டாடா மோட்டார்ஸின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

2023 ஆண்டு இறுதியில் விற்பனையை அதிகரிப்பதற்காக தங்களது கார் விலையில் ரூ.3 லட்சம் வரை தள்ளுபடி தந்து ஹூண்டாய், டாடா, மஹிந்திரா, கியா போன்ற நிறுவனங்கள் அறிவித்தன. இந்த தள்ளுபடி 2023 மாடல் கார்களுக்கு ஜனவரி, பிப்ரவரி மாதங்களிலும் தொடரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படிச் செய்யவில்லை. கார்களின் விலை அதிகரிக்கப் போவதாக வெளியான தகவலால் கார் விரும்பிகள் பெருத்த ஏமாற்றத்தை அடைந்துள்ளனர். ஆனால் இந்த விலை ஏற்றத்தால் தங்களது விற்பனை எந்தளவுக்கும் பாதிக்காது என்று கார் நிறுவனங்கள் தெரிவித்தன. ஏனெனில் எவ்வளவு விலை ஏறினாலும் கார் விற்பனை தொடர்ந்து அதிகரித்துதான் வருகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+