சென்னை: உத்தரப்பிரதேசம், தமிழ்நாட்டை விட அதிகப்படியான சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூலித்திருப்பதாகச் சமீபத்தில் வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை நாட்டின் வளர்ச்சிப் பாதையில் முக்கிய திருப்புமுனையாகச் சிலர் கூறிவந்தனர், உத்தரப்பிரதேசம் பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாட்டை முந்திவிட்டதாகவும் கருதுகின்றனர்.
இதேபோல் ஜிஎஸ்டி வரி வசூல் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்களுக்குச் சாதகமாக அமையும் என்ற அச்சமும் நிலவி வருகிறது. ஆனால் இது இரண்டுமே பெரிய உருட்டு என்பதைத் தான் உண்மையான ஜிஎஸ்டி தரவுகள் சொல்கிறது.

ஏற்கனவே ராமர் கோயில் உத்தர பிரதேசம் மாநிலத்தின் பொருளாதாரம் புதிய உச்சத்தை அடையப்போவதாகக் கூறப்பட்ட நிலையில் ஜிஎஸ்டி வரி வசூல் அளவீட்டில் ஏற்பட்ட மாற்றம், உத்தரப்பிரதேசம் பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாட்டை முந்திவிட்டதாக வெளியான கருத்துக்குக் கூடுதல் வலு சேர்த்தது. ஆனால் உண்மை என்ன..? வாங்க டீடைல்லா செல்றேன்.
ஏப்ரல் மாத டேட்டா: ஜிஎஸ்டி வரி 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் இந்தியா முழுவதும் பயன்பாட்டுக்கு வந்தது. இந்த நிலையில் 2024 ஏப்ரல் மாதத்தில் உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் ஜிஎஸ்டி வரி வசூல் 12,290 கோடியாக இருந்த நிலையில், தமிழ்நாடு அரசு 12,210 கோடி ரூபாய் வரி வசூலித்துள்ளது.
ஒரேயொரு மாதம்: இந்த ஒரு நம்பரை மட்டும் வைத்துக்கொண்டு உத்தரப்பிரதேசம் முன்னேறிவிட்டது என நம்பிவிட முடியாது, கூடாது. ஏனெனில், ஒரு நிதியாண்டு மார்ச் மாதத்துடன் முடிவடைவதால், ஏப்ரல் மாத வரி வசூல் மற்ற மாதங்களை விட சற்று அதிகமாக இருக்கும், இதன் வாயிலாகவே உத்தர பிரதேசம் தமிழ்நாட்டை முந்தியது. ஆனால் அடுத்த மே மாதமே வரி வசூலில் மீண்டும் தமிழ்நாடு முதலிடத்தை பிடித்துள்ளது.
TN மற்றும் UP இடைவெளி: கடந்த ஆறு ஆண்டுகளில் (2018-19 முதல் 2023-24 வரை) ஜிஎஸ்டி வரி வசூலில், தமிழ்நாடு மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்கள் இடையே உள்ள வரி வசூல் இடைவெளி அதிகரித்துள்ளது. 2018-19ஆம் ஆண்டில் இருந்த 13% வித்தியாசம், 2023-24ஆம் ஆண்டில் 16% ஆக அதிகரித்துள்ளது.
சராசரி அளவை கூட தொடவில்லை: அதே நேரத்தில், 2018-19 முதல் 2023-24 வரையிலான காலகட்டத்தில் இந்தியாவின் ஜிஎஸ்டி வசூல் சராசரியாக ஆண்டுதோறும் 11.7% வளர்ச்சியடைந்துள்ளது. உத்தரப்பிரதேசம், பீகார், மேற்கு வங்காளம், மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய ஆறு அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்களில், ஐந்து மாநிலங்கள் தேசிய சராசரி வளர்ச்சியைக் கூட எட்டவில்லை.
மகாராஷ்டிரா மட்டுமே இந்த ஐந்து மாநிலங்களில் விதிவிலக்காக இருந்து வருகிறது, மகாராஷ்டிரா எப்போதும் பொருளாதார ரீதியாக முன்னேறிய மாநிலமாகவே இருந்து வருகிறது.
21 மாநிலங்கள்: 2023-24ஆம் ஆண்டில் மொத்த ஜிஎஸ்டி வரி வசூலில் 70 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பங்கீடு மட்டும் 96% ஆக உள்ளது முக்கியமான விஷயமாகும். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், உத்தரப்பிரதேசம் இந்த ஒரு மாதத்தில் மட்டும் தான் தமிழ்நாட்டை விட அதிக ஜிஎஸ்டி வரி வசூலித்துள்ளது.
ஜிஎஸ்டி அறிமுகம் செய்த போது அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலங்கள் அதிகப்படியான ஜிஎஸ்டி வரி வசூல் அதிமாக இருக்கும் என பேசப்பட்டது. ஆனால் தற்போது அதிக மக்கள் தொகை கொண்ட உத்தர பிரதேசம், பீகார், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகியவை தான் வரி வசூலில் பின்தங்கியுள்ளது.
இதற்கு மாறாக குஜராத், மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு போன்ற ஒப்பீட்டளவில் சிறிய மக்கள்தொகை கொண்டு, அதிக தொழிற்துறை கொண்ட மாநிலங்கள் தான் ஜிஎஸ்டி வரி வசூலில் முன்னோடியாக உள்ளது.
சிங்கிள்ஸ்: ஜிஎஸ்டி வரி வசூல் அளவீட்டை மட்டும் பார்க்காமல், மொத்த வரி வசூலை, மக்கள் தொகையும் சேர்த்துக் கணக்கிடுவது அவசியமாகும், இதுகுறித்து ஷாக்கிங் தகவலும் கிடைத்துள்ளது.
2023-24 இல், தமிழ்நாட்டின் மக்கள்தொகை உத்தர பிரதேசத்தின் மூன்றில் ஒரு பங்காக இருந்தது, ஆனால் அதன் ஜிஎஸ்டி வசூல் சுமார் 16% அதிகமாக இருந்தது. தனிநபர் அடிப்படையில், தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி உ.பி.யை விட 3.7 மடங்கு அதிகம். டெல்லி மற்றும் மகாராஷ்டிராவின் தனிநபர் ஜிஎஸ்டி உ.பி.யை விட 7.2 மற்றும் 5.8 மடங்கு அதிகம்.
ஈ-வே பில்: ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையில், 50,000 ரூபாய் மதிப்பிற்கு மேற்பட்ட பொருட்களைக் கொண்டு செல்லும் போது சரக்கு போக்குவரத்து வாகனங்கள் ஈ-வே பில்களை (e-way bills) கட்டாயம் வைத்திருக்க வேண்டும். ஒவ்வொரு மாநிலமும் மூன்று வகையான ஈ-வே பில் தகவல்களை மெயின்டெயின் செய்கிறது.
1. மாநிலத்திற்குள் பொருட்கள் கொண்டு செல்வது, 2. மாநிலத்திற்கு வெளியே செல்லும் பொருட்கள், 3. வெளி மாநிலத்திலிருந்து வரும் பொருட்கள். இந்த வகைகளில் 2வது மற்றும் 3வது பிரிவு பில்களை வைத்து எந்த மாநிலங்கள் அதிகம் "ஏற்றுமதி" செய்கின்றன (net exporters) எந்த மாநிலங்கள் அதிகம் "இறக்குமதி" செய்கின்றன (net importers) என்பதை எளிதாக அறிய முடியும்.
ஏற்றுமதி - இறக்குமதி:
ஜிஎஸ்டி வசூலில் சுமார் 96% பங்கு வகிக்கும் 21 மாநிலங்கள் கொண்ட பட்டியலில், குஜராத் மாநிலம் அதிக அளவில் "ஏற்றுமதி" செய்த மாநிலமாக முதலிடத்தில் உள்ளது. இதனைத் தொடர்ந்து மகாராஷ்டிரா மற்றும் கனிம வளம் நிறைந்த ஒடிசா மாநிலங்கள் முதல் 3 இடத்தில் உள்ளன. மறுபுறம், உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்கள் அதிக அளவில் "இறக்குமதி" செய்யும் மாநிலங்களாகப் பின்தங்கியுள்ளன.
ஒரு மாநிலத்தின் மக்களின் வருமான அளவு, அம்மாநிலத்தின் நுகர்வு (consumption) அளவோடு நேரடியாகத் தொடர்புடையது. அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்கள், தங்கள் மக்களின் வருமானத்தை உயர்த்துவதற்கான திட்டங்களை உருவாக்க வேண்டும். இதன் அடிப்படையில் தான் தனிநபர் வருமானம், தனிநபர் நுகர்வு, தனிநபர் வரி கணக்கீட்டில் ஒரு மாநிலம் முன்னேற முடியும்.
More From GoodReturns

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!



Click it and Unblock the Notifications