நரேந்திர மோடி தலைமையிலான கடந்த 10 ஆண்டு ஆட்சியில், ஸ்மால் மற்றும் மிட்கேப் பங்குகள் (SMID) தாறுமாறான வளர்ச்சியைக் கண்டுள்ளது. மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட 670க்கும் மேற்பட்ட பங்குகள் Multibagger லாபத்தை கொடுத்துள்ளது.
மும்பை பங்குச்சந்தையின் மொத்த சந்தை மதிப்பு 440 லட்சம் கோடி ரூபாய் வரையில் வேகமாக உயர மிக முக்கியமான காரணங்களில் ஒன்று ஸ்மால் மற்றும் மிட்கேப் பங்குகளின் (SMID) அதிரடியான வளர்ச்சியும், ஐபிஓ-வும் தான்.

NDA கூட்டணி 3வது முறையாகத் தொடர்ந்து ஆட்சியைப் பிடித்தாலும், பிஜேபி 3.0 கடந்த 2 ஆட்சியைப் போல் இந்த முறை சீரானதாக இருக்காது என்றும், துறை சார்ந்த வளர்ச்சி மட்டுமே பிரதானமாக இருக்கும் என்றும், அதிகப்படியான ஏற்ற இறக்கங்களால் நிறைந்திருக்கும் என்றும் பங்குச்சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
புதிய அரசின் கீழ் ஸ்மால் மற்றும் மிட்கேப் பங்குகளில் எவ்வாறு வர்த்தகம் செய்யப்படும் என்பது தான் தற்போது முதலீட்டாளர்களின் முக்கிய கவலையாக உள்ளது.
நரேந்திர மோடி தலைமையிலான கடந்த 10 ஆண்டுகளில், பங்குச்சந்தையில் ஸ்மால் மற்றும் மிட்கேப் பங்குகள் அபரிமிதமான வளர்ச்சியைக் கண்டன என்பது யாவரும் அறிந்ததே. ஆனால், எந்தெந்த பங்குகள் எவ்வளவு லாபம் தந்துள்ளன என்பதை ஆராயும் ஓர் சுவாரசியமான தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
Ace ஈக்விடீஸ் நிறுவனத்தின் தகவல்களின்படி, மிட்கேப் பிரிவில் உள்ள 78 பங்குகள் மல்டிபேக்கர் லாபத்தை வழங்கியுள்ளன. இதில், கடந்த 10 ஆண்டுகளில் அதிகபட்ச லாபத்தை அளித்த பங்கு என்றால் யுனோ மிண்டா (Uno Minda) ஆகும்.
மே 16, 2014 முதல் மே 31, 2024 வரையிலான காலகட்டத்தில், இந்த Uno Minda பங்கு கிட்டத்தட்ட 13,000% லாபம் ஈட்டித் தந்துள்ளது. மே 31, 2024 அன்று பங்குச்சந்தை மூடும் போது Uno Minda பங்கு விலை ரூ.877.50 ஆக இருந்தது.
இதை தொடர்ந்து டிரெண்ட் (4,566%), பதஞ்சலி ஃபுட்ஸ் (3,766.80%), சோலார் இண்டஸ்ட்ரீஸ் இந்தியா (3,695.92%), தீபக் நைட்ரைட் (3,458.84%), டாடா எல்க்ஸி (2,771.82%), டிவிஎஸ் மோட்டார் கம்பெனி (1,778.28%) ஆகிய பங்குகள் அதிகம் லாபம் கொடுத்த பட்டியலில் முன்னிலை வகிக்கின்றன.
ஸ்மால் மற்றும் மிட்கேப் பங்குகள் பிரிவில் இருக்கும் பொதுத்துறை நிறுவனங்களில் எஸ்ஜேவிஎன், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (HPCL), NHPC, REC, பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் (PFC), ஸ்டீல் அதார்ட்டி ஆஃப் இந்தியா (SAIL) ஆகியவை 517% முதல் 101% வரையிலான லாபத்தை வழங்கியுள்ளது.
இந்த காலகட்டத்தில் 11 மிட்கேப் பங்குகள் இரண்டு இலக்க லாபத்தை வழங்கியுள்ளன. பாரத் ஹெவி எலெக்ட்ரிக்கல்ஸ் (BHEL), ஏசிசி, கனரா வங்கி, ஐடிபிஐ வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (IOB), என்எம்டிசி ஆகியவை 95% முதல் 2% வரையிலான லாபத்தை ஈட்டித் தந்துள்ளன.
இதேவேளையில் BHEL, கனரா வங்கி, IOB போன்ற பங்குகள் கடந்த ஒரு வருடத்திலேயே 100% க்கும் அதிகமான லாபத்தை முதலீட்டாளர்களுக்கு வழங்கியுள்ளன.
இதேவேளையில் ஸ்மால்கேப் பங்குகள் பட்டியலில் 597 பங்குகள் அதிகப்படியாக 48,000% வரை உயர்ந்துள்ளது. இதில் முக்கியமாக 10 ஆண்டு மோடி ஆட்சி காலத்தில் ஜோதி ரெசின்கள் & அட்ஹெசிவ்ஸ் (48,000%), டான்ஃபாக் இண்டஸ்ட்ரீஸ் (21,914.87%), ஓலெக்ட்ரா கிரீன்டெக் (21,675.56%), கேஇஐ இண்டஸ்ட்ரீஸ் (21,369.63%) மற்றும் டான்லா பிளாட்ஃபார்ம்ஸ் (18,674%) ஆகியவை அதிக லாபம் ஈட்டியுள்ளன.
More From GoodReturns

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!



Click it and Unblock the Notifications