சென்னை: வெளியில் சென்றாலே, உடனே தண்ணீர் குடிப்பதற்கு வாட்டர் பாட்டில்களைத் தான் தேடுகிறோம். நாம் குடிக்கும் நீரில் இருக்கும் "Expiry date" என்ற காலாவதி தேதி, சில நேரங்களில் நமக்கு குழப்பத்தை ஏற்படுத்தலாம். உண்மையில் தண்ணீரும் அந்த தேதிக்குப் பிறகு கெட்டுப் போகுமா? என்ற சந்தேகத்தை எழுப்பலாம். இதற்கான விடையை பற்றி இந்தக் கட்டுரையில் காண்போம்.
தண்ணீர் ஒருபோதும் கெட்டுப் போகாது. அதை எப்படி நாம் சேமித்து வைத்திருக்கிறோம் என்பதைப் பொறுத்து சில நேரங்களில், அதன் தரம் பாதிக்கப்படலாம். தண்ணீர் என்றுமே கெட்டுப் போகாது என்றால், நாம் வாங்கும் வாட்டர் பாட்டில்கள் அனைத்திலும் எக்ஸ்பயரி டேட் இருக்கிறதே என்ற உங்களது கேள்விக்கான விடையைப் பார்ப்போம்.

நீங்கள் வாங்கும் வாட்டர் பாட்டில்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் தேதி தண்ணீருக்கானது அல்ல. மாறாக தண்ணீர் அடைக்க பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக்கின் எக்ஸ்பயரி டேட் ஆகும். ஒரு நாளைக்கு சுமார் 150 கோடி வாட்டர் பாட்டில்கள் தினமும் விற்பனை ஆகிறது. இது பிஸ்லரி மற்றும் பிற வாட்டர் பாட்டில்களை விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு ஏற்ற ஒன்றாக இருந்தாலும், அந்த நிறுவனங்களே தங்களிடம் உள்ள பிளாஸ்டிக் பாட்டில்களால் பெரிய பிரச்சனைகளை எதிர்கொள்வதாகக் கூறுகின்றனர்.
வாட்டர் பாட்டில்களின் மேல் ஒட்டப்பட்டு இருக்கும் பேப்பரில் "Best before 6 months. Store in a cool and dry place" என்ற வாசகம் எழுதப்பட்டிருக்கும். இந்த தேதி அந்த பிளாஸ்டிக் பாட்டில் காலாவதியாகும் தேதியைக் குறிக்கிறது. பிளாஸ்டிக் பாட்டில்களையோ அல்லது பிளாஸ்டிக் பேப்பரையோ கொளுத்தும் போது, அது உருகுவதை நாம் பார்த்திருப்போம்.
அதேபோல 6 மாத காலம் ஆகிவிட்டால் பிளாஸ்டிக் பாட்டில்களில் இருக்கும் PET (பாலிஎதிலீன் டெரெப்தாலேட்) என்ற கெமிக்கல் உருகி தண்ணீரில் கலந்து விடும். மேலும் இந்த கெமிக்கல் பாட்டில்களை சூரிய ஒளியில் வைத்தாலோ அல்லது வெளியில் எடுத்துச் சென்றாலோ சீக்கிரம் உருகத் தொடங்கும்.
யோசித்துப் பாருங்கள்.. நாம் அனைவரும் ஒரு முறையாவது வாட்டர் பாட்டில்களை வாங்கி பயன்படுத்தும் போது பிளாஸ்டிக் வாடையை உணர்ந்திருப்போம். மேலும் சில வாட்டர் பாட்டில் விற்பனை செய்யும் நிறுவனங்கள், 2 வருடங்கள் பிரச்சனையின்றி அந்த தண்ணீர் பாட்டில்களை பயன்படுத்த முடியும் என்று கூறினாலும், அது உண்மையில் சாத்தியம் இல்லாதது என்று தான் சொல்ல வேண்டும்.
ஏனெனில் ஆய்வுகளின் படி, ஒரு வாட்டர் பாட்டிலில் இருக்கும் பிளாஸ்டிக் எப்போது உருகி தண்ணீரில் கலக்கும் என்று கணித்துக் கூற முடியாது. புதிய வாட்டர் பாட்டில்களை, பல மளிகை கடைக்கும், பிற கடைகளுக்கும் விற்பனை செய்வதற்காக டிரக்கில் கொண்டுவரப்படும் போதே சூரிய ஒளியில் அவை படலாம். இது போன்ற சூழ்நிலைகளில் உற்பத்தி செய்யப்பட்ட முதல் வாரங்களிலேயே தண்ணீரின் தரம் பாதிக்கப்படும்.
சரி இதற்கு என்னதான் தீர்வு? என்று நீங்கள் கேட்பது கேட்கிறது. நீங்கள் வாட்டர் பாட்டில்களை வாங்கிய உடனே அவற்றை பயன்படுத்தலாம். அப்படி இல்லை என்றால் சில்வர் வாட்டர் பாட்டில்களில், வீட்டில் இருந்து தண்ணீரை எடுத்துக் கொண்டு பயணிக்கலாம்.
ஏதேனும் சூழ்நிலை காரணமாக வெளியில் வாட்டர் பாட்டில்களை வாங்க வேண்டும் என்ற நிலை வந்தாலும், பயன்படுத்திவிட்டு உடனே அவற்றை பிரிட்ஜில் வைத்து விடுங்கள். வீட்டிலும் பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்களைப் பயன்படுத்துவதற்கு பதிலாக மண் பானை மற்றும் களிமண்ணில் செய்யப்பட்ட வாட்டர் பாட்டில்களைப் பயன்படுத்தலாம்.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

டிசிஎஸ் நாசிக் அலுவலகத்தில் நடந்தது என்ன? மஃப்டியில் வேலை செய்த மகளிர் போலீஸின் ஷாக் ரிப்போர்ட் !!

சட்டமன்ற தேர்தல் 2026: உங்களின் Booth Slip-ஐ ஆன்லைனில் டவுன்லோட் செய்வது எப்படி?



Click it and Unblock the Notifications