Health is Wealth – ஐசியூவில் இருந்து பெங்களூரு சிஇஓ வெளியிட்ட பதிவு.. மாத சம்பளக்காரர்களே இதை கவனிங்க..!

பெங்களூரு: தற்போது பலரும் வேலை, வேலை என ஓடுகிறோம், வேலைகளுக்கு மத்தியில் மிக முக்கியமான நம்முடைய உடல் நலனை கவனிக்க தவற விடுகிறோம். இப்படி தொடர்ச்சியாக உடல் நலனை கவனிக்காமல் விட்டதால் ஐசியூவில் அட்மிட் ஆகி இருக்கும் ஒரு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி வெளியிட்டிருக்கும் பதிவு பலரது கவனத்தையும் பெற்றுள்ளது.

பெங்களூருவை சேர்ந்த ஒரு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பணிபுரிபவர் அமித் மிஸ்ரா. இவர் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நான்கு நாட்கள் ஐசியூவில் இருந்திருக்கிறார். இது தொடர்பாக பதிவு வெளியிட்டிருக்கும் அவர் உடல் நலனுக்கு முக்கியத்துவம் கொடுங்கள் மற்றவை எல்லாம் அதற்கு பின்னர் இருக்கட்டும் என அறிவுரை வழங்கியுள்ளார்.

Health is Wealth – ஐசியூவில் இருந்து பெங்களூரு சிஇஓ வெளியிட்ட பதிவு! மாத சம்பளக்காரர்களே இதை கவனிங்க

லிங்குடின்னில் பதிவு செய்திருக்கும் அமித் மிஸ்ரா "வழக்கம் போல நான் என்னுடைய லேப்டாப்பில் வேலை செய்து கொண்டிருந்தேன். அப்போது திடீரென என்னுடைய மூக்கில் இருந்து ரத்தம் வடிந்தது. என்ன செய்தாலும் அந்த ரத்தம் நிற்கவேயில்லை. உடனடியாக மருத்துவமனைக்கு சென்றேன். அவர்களாலும் ரத்தத்தை நிறுத்த முடியவில்லை. இதனால் என்னுடைய ரத்த அழுத்தம் அதிகரித்து 230 என்ற அபாய கட்டத்திற்கு சென்றது. ஆனால் இதற்கு முன்பு எனக்கு தலைவலியோ அல்லது மயக்கம் போன்ற எந்த ஒரு உடல்நல பிரச்சனைகளும் ஏற்பட்டதில்லை" என தெரிவித்துள்ளார்.

"திடீரென மூக்கில் ரத்தம் வந்ததால் மருத்துவமனைக்கு சென்றேன். என்னுடைய ரத்த அழுத்தம் 230 என்று அபாய கட்டத்தை எட்டியது , உடனடியாக மருத்துவமனையில் ஐசியுவிற்கு மாற்றினர். பின்னர் மருத்துவர்கள் ரத்த அழுத்தத்தை நிலையாக்குவதற்காக பல்வேறு மருந்துகளை கொடுக்க வேண்டி இருந்தது. அப்போதைக்கு என்னுடைய ரத்த அழுத்தம் சீரானது. ஆனால் அடுத்த நாள் திடீரென நான் ரத்த அழுத்தம் வெகுவாக குறைந்து மயங்கி விழுந்துவிட்டேன்" என தெரிவித்துள்ளார்.

இதனால் மருத்துவர்களே குழப்பம் அடைந்து விட்டார்களாம், இதனை அடுத்து அவருக்கு இசிஜி, கொலஸ்ட்ரால், ஆஞ்சியோகிராபி என பல்வேறு பரிசோதனைகளை மேற்கொண்டு இருக்கின்றனர், ஆனால் அவருடைய இரத்த அழுத்தம் அதிகரிப்பது ,திடீரென குறைவது இதற்கு என்ன காரணம் என்பதை அவர்களால் கண்டுபிடிக்கவே முடியவில்லை. ஏனெனில் எடுக்கப்பட்ட அனைத்து பரிசோதனைகளும் நார்மலாக இருப்பதாகவே முடிவுகள் வந்துள்ளன.

இது தொடர்பாக தன்னுடைய பதிவு செய்திருக்கும் அமித் மிஸ்ரா, உங்களுடைய உடல் நலனை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். .நம்முடைய உடல் முன்பை போல நமக்கு எந்த அறிகுறிகளையும் வழங்குவது கிடையாது, திடீரென இது போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. எனக்கு இதுவரை தலைவலி, மயக்கம், ரத்த அழுத்தம் என எந்த ஒரு பிரச்சனையும் இல்லை .ஆனால் திடீரென இப்படி ஒரு உடல்நல பிரச்சனையை நான் சந்தித்து இருக்கிறேன். தயவு செய்து அனைவரும் வேலை ஒருபுறம் இருந்தாலும் உடல் நலனில் கவனம் செலுத்துங்கள். அடிக்கடி உங்களுடைய உடலை பரிசோதனை செய்யுங்கள் என அறிவுரை வழங்கியுள்ளார்.

இப்போதும் நான் சிகிச்சையில் தான் இருக்கிறேன் என தெரிவித்துள்ளார். சில சமயங்களில் நம் உடல் காட்டும் சிறிய அறிகுறிகளை கூட நாம் வேலை மற்றும் பிற காரணங்களால் கவனிக்க தவறி விடுகிறோம். ஆனால் உங்கள் உடலை முதலில் கவனியுங்கள் என தெரிவித்துள்ளார். அவருடைய இந்த பதிவு பலரின் கவனத்தை பெற்றிருக்கிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+