அமெரிக்காவில் கடந்த ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்று மீண்டும் அந்நாட்டு அதிபராக ஆகியுள்ளார். டிரம்பின் இந்த வெற்றிக்கு பின்னால் இருந்த முக்கியமான நபர்களில் உலகின் நம்பர் ஒன் மெகா கோடீஸ்வரான எலான் மஸ்க்கும் ஒருவர். டிரம்பை மீண்டும் அதிபர் பதவியில் அமர்த்த வேண்டும் என்று ஆரம்பம் முதலே தீவிரமாக எலான் மஸ்க் வேலை பார்த்தார். டிரம்பின் பிரச்சாரத்துக்காக கோடிக்கணக்கான பணத்தை நன்கொடையாக வழங்கினார். பல்வேறு நகரங்களுக்கு சென்று டிரம்புக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.
டிரம்ப் ஒரு தேர்தல் பிரச்சார மேடையில் உரையாற்றியபோது, நான் அதிபராக பொறுப்பேற்றால் எலான் மஸ்க்கு என்னுடைய அரசு நிர்வாகத்தில் முக்கிய பொறுப்பு வழங்குவேன் என்று தெரிவித்து இருந்தார். அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றார். கடந்த மாதம் அதிபராகவும் பொறுப்பேற்றார். டிரம்ப் முன்பு சொன்னது போல், அதிபராக பதவியேற்றவுடன், எலான் மஸ்க் தலைமையில் அரசு செயல்திறன் மேம்பாட்டு துறை உருவாக்கினார். இந்த துறை பல்வேறு வழிகளில் அரசாங்க செலவினங்களை கடுமையாக குறைக்க உருவாக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. எலான் மஸ்க் அமெரிக்க அதிபரின் ஆலோசகராகவும் செயல்படுகிறார். டிரம்பின் அரசாங்கத்தில் எலான் மஸ்க் ஒரு அசைக்க முடியாத நபராக உருவெடுத்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடி நடவடிக்கைகளுக்கு பெயர் பெற்றவர். உதாரணமாக அதிபராக பதவியேற்ற சிறிது நாட்களிலேயே, சீனா, கனடா,மெக்சிக்கோ நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு கூடுதல் வரி விதித்து, சர்வதேச அளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தினார். மேலும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு பொருளாதார தடை விதிக்கும் நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார். சர்ச்சைக்கு பெயர் பெற்ற டிரம்ப் அதே அளவுக்கு நகைச்சுவை உணர்வுக்கும் பெயர் பெற்றவர்.
அண்மையில் வெள்ளை மாளிகையில் பாக்ஸ் நியூஸ் சேனலுக்கு, அதிபர் டொனால்ட் டிரம்பும், எலான் மஸ்க்கும் இணைந்து பேட்டி கொடுத்தனர். அப்போது, எலான் மஸ்க்கை டிரம்ப் கிண்டல் செய்தார். டிரம்ப் பேசுகையில், மஸ்க்கிடம் (அரசு செயல்திறன் மேம்பாட்டு துறை) சில புத்திசாலித்தனமாக இளைஞர்கள் வேலை செய்கிறார்கள். அவர்கள் மஸ்க்கை விட மோசமாக ஆடை அணிகிறார்கள். அவர்கள் டி-சர்ட் அணிவார்கள். ஆனால் அவர்களிடம் 180ஐகியூ இருப்பதை நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள் என்று டிரம்ப் தெரிவித்தார். அப்போது அதனை சிரித்தப்படி மஸ்க் ஒப்புக்கொண்டார்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications