அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் உலகளவில் பல மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது, சொல்லப்போனால் டொனால்டு டிரம்ப் ஆட்சிக்கு வந்த பின்பு என்னவெல்லாம் நடக்கப் போகுமோ என்ற அச்சம் அனைத்து நாடுகளுக்கும் உள்ளது. இதனால் பல விஷயங்கள் அமெரிக்காவுக்கும், அமெரிக்க நிறுவனத்திற்கும் சாதகமாக எடுத்து வருகிறது. உதாரணமாக இந்தியாவில் ஸ்டார்லிங்க்.
இப்படியிருக்கும் சூழ்நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்று மூலம் இந்தியர்களுக்கு மறைமுகமாக ஒரு நல்ல விஷயம் நடந்துள்ளது. இது ஒரு கிப்ட் ஆகக் கூட கருதலாம். 2024ஆம் ஆண்டில் சுமார் 39 முறை வரலாற்று உச்சத்தையும், 10 மாதத்தில் 23 சதவீதம் வரையில் உயர்த்த தங்கம் விலை தற்போது டிரம்ப் வெற்றிக்குப் பின்பு பெரும் சரிவைச் சந்தித்துள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு பின்பு தங்கத்தின் விலை மல்டி காமடிட்டி எக்ஸ்சேஞ்சில் (MCX) 10 கிராம் ரூ.4,750 வரை குறைந்துள்ளது, இது கிட்டத்தட்ட 6% குறைவாகும். இந்த விலை குறைவு இந்தியர்களுக்கு மிகப்பெரிய பரிசா மாறியுள்ளது. குறிப்பாக இந்தியாவில் திருமண காலம் தொடங்கியுள்ள நிலையில் தங்கம் வாங்குவோர் எண்ணிக்கை அதிகரித்திருக்கும் வேளையில் இந்த 6 சதவீத சரிவு மிகப்பெரிய ஜாக்பாட் ஆகவே பார்க்கப்படுகிறது.
தங்கம் விலை குறைந்த நிலையில், தங்கத்தை வாங்க விரும்பும் மக்களின் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளதால் நகைக்கடைகளுக்கு வருவோர் எண்ணிக்கை கடந்த 2 வாரத்தில் அதிகரித்துள்ளதாக நகைக் கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், டிசம்பர் மாதத்தில் திருமணத்தை நடத்தத் திட்டமிட்டுள்ள இந்தியக் குடும்பங்கள் இன்னும் தங்கம் வாங்கக் கடைக்கு வரவில்லை என்றும், தங்கம் விலை மேலும் குறையும் என நம்பி காத்திருப்பதாகவும் நகை கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் பெரிய அளவிலான தங்க நகை விற்பனை இன்னும் ரீடைல் சந்தையில் சூடுபிடிக்கவில்லை என தெரிகிறது.
இதேபோல் நகைக்கடை உரிமையாளர்களும் தங்கத்தை வாங்காமல் காத்திருந்து வாங்க முடிவு செய்துள்ளனர். நகைக் கடைக்காரர்களும் விலை குறையும் என நம்பும் காரணத்தால் மொத்த விற்பனை சந்தையும் மந்தமாகியுள்ளது.
டொனால்டு டிரம்ப் வெற்றி மூலம் அமெரிக்கப் பொருளாதாரம் உயர்வது மட்டும் அல்லாமல் பணவீக்கம் அதிகரிக்கும் என்ற நிலைப்பாடு உள்ளது. இதனால் வட்டி விகித குறைப்பு தடைப்படும் என்பதால் தங்கம் விலை குறையத் துவங்கியுள்ளது. இதேவேளையில் கமலா ஹாரிஸ் வெற்றிபெற்று இருந்தால் கட்டாயம் தங்கம் விலை குறைந்திருக்காது என்பது தான் சந்தையின் கணிப்பு.


Click it and Unblock the Notifications