டெல்லி: இந்த உலகமே தற்போது இணையதளத்தில் தான் இருக்கிறது. படிப்பு, வேலை, ஷாப்பிங் இதோடு மட்டுமில்லாமல் தற்பொழுது காதலையும் இணையதளத்தில் தான் தேடுகிறார்கள் பலரும். அதற்கு உதவும் வகையில் பல டேட்டிங் ஆப்-கள் இணையதளத்தில் இருக்கின்றன. இதுபோன்ற தேடல்கள் சில சமயங்களில் பிரச்சனையாக மாறிவிடுகிறது. இணைய டேட்டிங் மோசடிகள் தற்போது அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. அது என்ன டேட்டிங் மோசடிகள்.. அவை எப்படி நடக்கிறது? என்பதை விரிவாகப் பார்ப்போம்.
எக்கனாமிக் டைம்ஸ் தரவுகளின் படி, ஆன்லைன் டேட்டிங் ஆப்-களை வைத்து நடக்கும் மோசடிகள் நாட்டில், குறிப்பாக ஹைதராபாத், டெல்லி மற்றும் மும்பை போன்ற முக்கிய நகரங்களில் மிகவும் பொதுவானதாகி வருகிறது. தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) 2022ஆம் ஆண்டிற்கான தரவுகளின்படி, டேட்டிங் மோசடிகள் 24 சதவீதம் அதிகரித்துள்ளது என்று கூறப்படுகிறது. டேட்டிங் மோசடிகளால் ஏற்பட்ட சேதம், 2023ஆம் ஆண்டில் மட்டும் ரூ.200 கோடியைத் தாண்டியுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஒரு இந்தியப் பெண் பிட்காயின் காதல் மோசடிக்கு பலியாகி, தனது வாழ்நாள் சொத்துக்களை இழந்துள்ளார்.

ஆன்லைன் மோசடிகளுக்கு பல்வேறு வடிவங்கள் இருக்கிறது. எடுத்துக்காட்டாக, வீட்டில் இருந்து வேலை செய்வது, வர்த்தக மோசடிகள் என லிஸ்ட் போய்க் கொண்டே இருக்கும். அந்த அளவுக்கு புதுப்புது ஐடியாக்களைப் பயன்படுத்துகின்றனர். சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் தற்போது அடுத்த கட்டமாக ஒரு நபரை காதல் வலைக்குள் விழ வைத்து அதன் மூலம் மோசடி செய்கின்றனர். இதுவே டேட்டிங் மோசடி என்று கூறப்படுகிறது.
உதாரணமாக, இந்த டேட்டிங் மோசடிகளில் ஈடுபடுபவர்கள் அழகான profile பிக் வைத்து, அவர்களுடைய சுய விவரங்களை உண்மையானது போல சித்தரித்து பயன்படுத்துகின்றனர். இதனை பார்க்கும் நபர்கள் அவை உண்மை என்று எண்ணி அவர்களுடன் பேசத் தொடங்குகின்றனர். அதன் பிறகு மோசடி செய்பவர்கள் பணம் அல்லது தனிப்பட்ட தகவல்களைக் கேட்டு பாதிக்கப்பட்டவரின் உணர்வுகள் மற்றும் நம்பிக்கையோடு விளையாடி மோசடிகளில் ஈடுபடுகின்றனர்.
டேட்டிங் மோசடிகளில் ஈடுபடுபவர்கள் என்ன செய்வார்கள்?: முன்பு கூறியது போல் இதுபோன்ற மோசடிகளில் ஈடுபடுபவர்கள் டேட்டிங் ஆப்ஸ் மற்றும் இணையதளங்களில் தங்களுடைய சுய விவரங்களை உருவாக்கி டேட்டிங் ஸ்கேம்களைத் தொடங்குகின்றனர். இந்த கணக்குகளில் அடிக்கடி அழகான மற்றும் கண்ணைக் கவரும் படங்களை போஸ்ட் செய்கின்றனர்.
அதன்பிறகு பாதிக்கப்பட்டவர்களின் நம்பிக்கையை பெறுவதற்கும் அவர்களுடன் உணர்ச்சி பூர்வமான பிணைப்பை அதிகரிப்பதற்கும் தொடர்ந்து மோசடி செய்பவர்கள் அவர்களுடன் அடிக்கடி நெருக்கமாக பேசுவது போல நடிக்கின்றனர். பிறகு அவர்களிடம் இருந்து பணத்தை திருடுவதற்காக பொய்யான ஒரு கதையை உருவாக்குகின்றனர். படிப்பு செலவு, மருத்துவ செலவு போன்ற காரணங்களைச் சொல்லி பணம் கேட்கலாம்.
பாதிக்கப்பட்டவர் பணம் கொடுத்த பிறகு, மோசடி செய்பவர் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளாமல் மறைந்து விடுவார்.
டேட்டிங் மோசடிகளில் இருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி?:
நம்பகமான டேட்டிங் சேவைகளை மட்டுமே பயன்படுத்துங்கள்: ஆன்லைன் டேட்டிங் ஆப்களை பயன்படுத்தும் போது, ஒருவரின் சுயவிவரம் உண்மை தானா? என்பதை நன்கு ஆராய்ந்து தெரிந்து கொள்ளுங்கள். அதேபோல ஆன்லைன் டேட்டிங் பிளாட்பார்ம்கள் இணையதளத்தில் டன் கணக்கில் இருக்கிறது. எனவே இது போன்ற ஆப்களை பயன்படுத்தும் போது எச்சரிக்கையாக இருங்கள்.
கட்டுக்கதைகளையும் அவசரத்தையும் நம்பாதீர்கள்: ஆன்லைன் மோசடி செய்பவர்கள் பொய்யான கதைகளை உருவாக்கி, உங்களிடம் பணம் கேட்கலாம். உங்களுடைய ஆன்லைன் காதலர் உடனடியாக உணர்ச்சிவசப்படவோ அல்லது நேரில் சந்திக்க மறுத்தாலோ நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அர்த்தம்.
பணப்பரிவர்த்தனைகளை செய்யாதீர்கள்: ஆன்லைன் காதலரை முழுமையாக நம்பி அறிந்து கொள்ளாமல், பணம் அனுப்புவது உங்களுக்கு சிக்கலை விளைவிக்கலாம். நேரம் எடுத்துக் கொள்ளாமல் உடனடியாக காதல் வலையில் விழாதீர்கள். ஏனெனில் அவர்கள் உங்கள் உணர்ச்சிகளுடன் விளையாடி, நிதி தகவல்களை திருடி மோசடி செய்பவர்களாக இருக்கலாம்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications