சென்னை: தனிநபர்களை ஏமாற்றும் சைபர் கிரைம்கள் நடந்து கொண்டே தான் இருக்கிறது. அதிலும் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் நடக்கும் மோசடிகள் மிகவும் அச்சுறுத்தலை உருவாக்குகிறது. பிரபலமான இந்த சோசியல் மீடியா தளத்தின் மூலம் எளிதாக மக்களை ஏமாற்றி அவர்களின் தனிப்பட்ட விவரங்கள் மற்றும் பணத்தைத் திருடுகின்றனர். மோசடிகள் பற்றிய எந்த ஒரு விழிப்புணர்வும் சில நபர்களிடையே இல்லாததால், எளிதாக ஏமாற்றப்படுகிறார்கள். இவ்வாறு மோசடி செய்பவர்கள் பெரும்பாலும் இன்ஸ்டாகிராம் பயனாளர்களின் உணர்வுகளை வைத்து ஏமாற்றி, பணம் மற்றும் தனிப்பட்ட விவரங்களைப் பெறுகின்றனர். மேலும் மக்களை எளிதாக ஏமாற்றக் கூடிய அளவிற்கு உணர்ச்சிபூர்வமான கதைகளைக் கூறி நம்ப வைக்கின்றனர். இன்ஸ்டாகிராம் மோசடிகளில் இருந்து விடுபடுவது எப்படி என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.
மோசடிக்காரர்கள் புதுப்புது டெக்னிக் பயன்படுத்தி கொள்ளையடிக்கும் முயற்சிகளில் ஈடுபடுகின்றனர். அதில் தற்போது அவர்கள் பயன்படுத்தும் ஒரு பெரிய ட்ரிக்காக இன்ஸ்டாகிராம் தளங்கள் உள்ளன. தற்போது இன்ஸ்டாகிராம் பயனாளர்கள் அதிகரித்துவிட்டனர். இதன் விளைவாகவே, இதனை வைத்தும் மோசடிகள் நடக்கின்றன. இன்ஸ்டாகிராமை வைத்து பொதுவாக நடக்கும் மோசடிகள் என்ன என்பதைப் பார்ப்போம்.

அனுதாப மோசடிகள்: இதில் மோசடி செய்பவர்கள் தங்களை தாழ்த்திக் கொண்டு வறுமையில் இருப்பதாக கூறி நிதி உதவியை கேட்கின்றனர். எனவே ஆள் பெயர் தெரியாத நபர்கள் உங்களிடம் இன்ஸ்டாகிராமில் பணம் கேட்டால் அது மோசடியாக இருக்கலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். சிலர் உண்மையாகவும் இன்ஸ்டாகிராம் தளங்களைப் பயன்படுத்தி நிதி திரட்டுகின்றனர். இதுபோன்ற நபர்கள் யார் என்பதையும்.. உண்மையாகவே மோசடி செயலில் ஈடுபடுபவர்கள் யார் என்பதையும் தெரிந்து கொண்டு செயல்பட வேண்டும்.
தவறான காதல்: சில மோசடி செய்பவர்கள் ஒருவரை உணர்ச்சிப்பூர்வமாக ஏமாற்றுகின்றனர். அந்த வகையில் ஒருவரை காதல் வலையில் விழ வைத்து, மோசடி செய்கின்றனர். இதனால் ஒருவர் உணர்ச்சிப்பூர்வமாக மட்டுமல்லாமல், நிதி ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர்.
போலி லாட்டரிகள் மற்றும் சலுகைகள்: இதில் மோசடி செய்பவர்கள் பயனாளர்களிடம், முன்கூட்டியே பணம் செலுத்தினால் உங்களுக்கு சில சலுகைகள் தரப்படும் எனவும், லாட்டரி பரிசுகள் வெல்லலாம் எனவும் கூறி ஒரு பெரிய தொகையை பெறுகின்றனர். அதன் பிறகு தொகையை செலுத்திய நபர் சென்று அவரிடம் பேசினாலோ அல்லது மெசேஜ் செய்தாலோ அவருக்கு எந்த ஒரு பதிலும் கிடைப்பதில்லை.
போலி வேலைகள் மற்றும் முதலீடுகள்: சில பேரிடம் உங்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்பாடு செய்து தருகிறோம் எனவும், நீங்கள் சிறிது முதலீடு செய்தால் பணம் சம்பாதிக்கலாம் எனவும் கூறி ஏமாற்றுகிறார்கள். எந்த ஒரு வேலை வாய்ப்பை வழங்கும் நிறுவனங்களும் உங்களிடமிருந்து பணம் கேட்காது என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். ஏதேனும், நிறுவனங்கள் உங்களிடம் பணம் கேட்டால் அவை போலியானதாக இருக்கலாம்.
இன்ஸ்டாகிராம் மோசடிகளைத் தவிர்ப்பதற்கான சில உதவிக்குறிப்புகள்:
1. தெரியாத நபர்களிடமிருந்து வரும் ரிக்வெஸ்ட்: இங்குதான் பிரச்சனை ஆரம்பிக்கிறது. ஆள் பேர் தெரியாத நபர்களிடமிருந்து, உங்களுக்கு ரிக்வெஸ்ட் வந்தால் அவற்றை கவனமாக கையாள வேண்டும். இதுபோன்ற தெரியாத நபர்கள், உங்களிடம் SMS, மெயில் மூலமாக உங்களுடைய தனிப்பட்ட விவரங்களை கேட்டால் அவற்றை வழங்க கூடாது.
2. இன்ஸ்டாகிராம் லாக்: உங்கள் இன்ஸ்டாகிராம் கணக்கை டூ ஸ்டெப் வெரிஃபிகேஷன் (two step verification) செய்வதன் மூலம் உங்கள் தகவல்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம். உங்களுடைய இன்ஸ்டாகிராம் ஆப்-ஐ லாக் செய்து வைத்திருங்கள். இதனால் உங்களுக்கு தெரியாத நபர்கள் அவற்றைப் பயன்படுத்துவதில் இருந்து தவிர்க்க முடியும்.
3. தெரியாத இணைப்புகளைக் கிளிக் செய்வதைத் தவிர்க்கவும்: ஏதேனும் ஒரு சமூக வலைத்தளங்களிலோ அல்லது இன்ஸ்டாகிராமிலோ தெரியாத நபர்களிடம் இருந்து வரும் லிங்க்கு-களை திறக்க வேண்டாம். அவ்வாறு நீங்கள் அதனை கிளிக் செய்து உள்ளே சென்றால் உங்கள் தகவல் பரிமாற்றப்படலாம். மேலும் உங்கள் அக்கவுண்ட் ஹேக் ( hack ) செய்யப்படலாம்.
4. புதிய பின்தொடர்பவர்களுடன் கவனமாக இருங்கள்: உங்கள் அக்கவுண்டிற்கு யாராவது follow request ஐ கொடுத்து, உங்களிடம் நெருக்கமாவதற்கு முயற்சித்தால் அவர்களிடம் மிகவும் கவனமாக இருங்கள். அவர்களை புறக்கணிப்பது மிகவும் நல்லது.
விழிப்புடன் இருப்பதன் மூலம், இன்ஸ்டாகிராம் மோசடிகளில் சிக்காமல் உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள். மோசடி தொடர்பான செய்திகளை அவ்வப்போது இணையதளங்களில் இருந்து தெரிந்து கொள்ளுங்கள். இதுபோன்ற சில விஷயங்களை பின்பற்றினாலே நீங்கள் எந்த ஒரு மோசடிகளில் இருந்தும் தப்பித்து விட முடியும்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications