அமெரிக்காவின் மிகப்பெரிய ஆன்லைன் உணவு டெலிவரி சேவை நிறுவனமான டோர்டேஷ் வேகமாக வளர்ந்து வருகிறது. அமெரிக்கச் சந்தையில் மட்டும் சுமார் 56 சதவீத வர்த்தகத்தை டோர்டேஷ் நிறுவனம் மட்டுமே வைத்துள்ளது.
இந்நிலையில் டோர்டேஷ் தனது நிறுவனத்தில் முக்கியமான திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது.
டோர்டேஷ் நிர்வாகம்
டோர்டேஷ் நிர்வாகம் தனது ஊழியர்களுக்கு வெளியிட்டுள்ள அறிவிப்பில் மாதம் ஒரு முறையாவது டோர்டேஷ் தளத்தின் வாயிலாக உணவுகளை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்ய வேண்டும் என அறிவித்துள்ளது. இது டோர்டேஷ் நிறுவனத்தின் சிஇஓ முதல் இன்ஜினியர், நிர்வாக ஊழியர்கள் வரையில் அனைவருக்கும் பொருந்தும் எனவும் தெரிவித்துள்ளது.
சமுக வலைத்தளம்
பல ஊழியர்கள் இதை ஜாலியாக எடுத்துக் கொண்டாலும், பல ஊழியர்களைச் சமுக வலைத்தளத்தில் போலி கணக்கு போலி பெயரில் எதிர்த்தும், வருந்தியும் பதிவிட்டு உள்ளனர். குறிப்பாக Blind என்ற பெயரில் பதிவிட்ட சமுக வலைத்தள வெறுப்பு பதிவுக்கு சுமார் 1600 கமெண்ட் குவிந்துள்ளது.
வீடேஷ் (WeDash)
டோர்டேஷ் நிர்வாகம் தனது ஊழியர்களுக்கான டெலிவரி திட்டத்தை வீடேஷ் (WeDash) என்ற பெயருடன் அறிமுகம் செய்துள்ளது. இத்திட்டதின் கீழ் இந்நிறுவனத்தின் அனைத்து ஊழியர்களும் வாரத்தில் ஒருமுறையாவது டெலிவரி செய்ய வேண்டும்.
வாடிக்கையாளர் சேவை
டெலிவரி செய்ய விருப்பம் இல்லாத ஊழியர்கள் வாடிக்கையாளர் சேவை ஊழியர்களைக் கண்காணிப்பு செய்யும் பணியில் ஈடுப்பட வேண்டும் என டோர்டேஷ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கள அனுபவம்
டோர்டேஷ் நிறுவனத்தின் வீடேஷ் (WeDash) திட்டம் மூலம் அனைத்து ஊழியர்களும் தங்களது நிறுவனத்தின் டெக்னாலஜி பிராடெக்ட் எப்படி இயங்குகிறது என்பதைக் களத்தில் நின்று புரிந்துகொள்ள முடியும்.
வர்த்தகம், வருமானம்
இதன் மூலம் அதிக வர்த்தகத்தையும் வருமானத்தையும் ஈர்க்கும் சிறப்பான மேம்பாடுகளும், திட்டத்தையும் அறிமுகம் செய்ய முடியும் என நம்புவதாக டோர்டேஷ் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
சரி இந்தத் திட்டத்தைப் பற்றி நீங்க என்ன நினைக்கிறீர்கள்.. இதுபோன்ற திட்டங்கள் அனைத்து நிறுவனத்திலும் கொண்டு வந்தால் எப்படி இருக்கும்..? உங்க கருத்தை கமெண்ட் பண்ணுங்க.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications