மும்பை ஏர்போர்ட்டில் ஒரு வாடிக்கையாளர் தனது பசியை ஆற்றிக் கொள்வதற்காக ஒரு தோசையை ஆர்டர் செய்து வாங்கிச் சாப்பிட்டுள்ளார். தோசைக்கான பில் வந்ததும் அதில் இருந்த ரேட்டைப் பார்த்ததும் மனிதருக்கு தலை கிறுகிறுத்துவிட்டது. ஆம் அந்த ஒரு தோசையின் விலை ரூ.600.
அப்படி என்னங்க அந்த தோசையின் ஸ்பெஷாலிட்டி என்று விசாரித்தபோது இதுதாங்க விலை என்று சர்வசாதாரணமாகச் சொல்லிவிட்டார்கள். வேறு வழியில்லை பில்லைக் கட்டிவிட்டுப் புறப்பட்ட அந்த வாடிக்கையாளர் இவ்வளவு காஸ்ட்லியான தோசை சீக்கிரம் ஜீரணம் ஆகிவிடக்கூடாது என்று வேண்டிக்கொண்டே சென்றார்.

விமான நிலையங்களில் பொதுவாகவே எல்லா பொருட்களும் தாறுமாறான விலையில் தான் விற்கப்படுகின்றன. இது எல்லாருக்கும் தெரிந்த விஷயம் என்றாலும் ஒரு மசாலா தோசைக்கு இவ்வளவு விலை வைத்திருப்பது நியாயமே இல்லை என்று நெட்டிசன்கள் கொந்தளிக்கின்றனர்.
ரூ.600ஐ ஒரு தோசைக்காக வசூலிப்பது அடாவடியான செயல் என்றும் குமுறுகின்றனர். இந்த நிலையில் இந்த 600 ரூபாய் தோசை பற்றிய விடியோ ஒன்று சமூகதளங்களில் விறுவிறுப்பாகப் பகிரப்பட்டு வருகிறது. அதில் தோசை விற்ற கடையில் டிஸ்பிளே செய்யப்பட்ட மெனு கார்டு விடியோவில் காட்டப்பட்டுள்ளது.
ஒரு கப் மோர் உடன் மசாலா தோசை விலை ரூ.600. வெண்ணெய் சாதா தோசை விலை ரூ.620. தோசையோடு ஃபில்டர் காபி அல்லது லஸ்ஸி, அல்லது குளிர்பானங்கள் சேர்த்து வாங்கினால் பர்ஸை கவிழ்த்து பணத்தைக் கொடுத்து விட்டு வர வேண்டியது தான்.
இந்த விடியோவை இதுவரை 9 மில்லியன் பேர் இன்ஸ்டாகிராமில் பார்த்துள்ளனர். இதற்கு நூற்றுக்கணக்கான கமெண்ட்கள் குவிந்துள்ளன.
இவ்வளவு பெரிய விலையைப் பார்த்து நெட்டிசன்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
என்னதான் சுகாதாரமான முறையில் செய்யப்பட்டிருந்தாலும் அந்த தோசையின் தோற்றும் சுவையும் விலைக்கு சற்றும் பொருத்தமாக இல்லை என ஏராளமானவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 40 முதல் 50 ரூபாய்க்கு விற்கப்படக்கூடிய ஒரு மசாலா தோசைக்கு இந்த விலை கொஞ்சம் கூட நியாயமில்லை என்று கூறுகின்றனர்.
மும்பை விமான நிலையத்தில் இந்த தோசையைவிட விலை மலிவாக தங்கம் கிடைக்கிறது. இந்த தோசையின் விலை உண்மையான வெள்ளிக்கு நிகராக இருக்கிறது என்று மற்றொருவர் புலம்புகின்றார்.
கிட்டத்தட்ட அனைத்து வீடுகளிலும் தென்னிந்திய ரெஸ்டாரண்ட்களில் விற்கப்படும் தோசை விலை அதிகமாக்கப்பட்டபோது முன்பு சற்று சர்ச்சையை கிளப்பியது.
அண்மையில் ஒரு சோமாட்டோ ஊழியர் குருகாவ்னில் உள்ள ஒரு பிரபலமான ஹோட்டலில் இரண்டு தோசைக்கு தான் ரூ.1000 தந்ததாகக் குறிப்பிட்டிருந்தார்.
More From GoodReturns

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?

ஸ்டாலினை விட விஜய்க்கு தான் போட்டி அதிகம்!! பரபரக்கும் தமிழக சட்டமன்ற தேர்தல் களம்!!



Click it and Unblock the Notifications