சென்னை: இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை மோசடிகள் அதிகரித்து வருகின்றன. சமீபத்தில், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) பகிர்ந்துள்ள புதிய அறிக்கையின் படி, இந்த மோசடிகள் 5 மடங்குக்கு மேல் அதிகரித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது. இதன் விளைவாக மொத்தம் ரூ.1457 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
செக் பாயிண்ட் சாஃப்ட்வேர் டெக்னாலஜிஸ் (Check Point Software Technologies) என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி, QR code ஃபிஷிங் மோசடிகள் 2022 ஆம் ஆண்டில் 15,000-ஆக இருந்தது. ஆனால் 2023ஆம் ஆண்டில், இந்த மோசடிகள் எண்ணிக்கை 30,000-ஆக அதிகரித்துள்ளது. டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதற்காக ஆன்லைன் பேமெண்ட் தளங்களின் பயன்பாடு அதிகரித்து வருவதும், சைபர் செக்யூரிட்டி நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு இல்லாததும், இந்த மோசடி வழக்குகள் அதிகரிப்பதற்கான காரணங்கள் என்று கூறப்படுகிறது.

மேலும், இந்த அறிக்கை குறிப்பிடுவது என்னவென்றால், மோசடி செய்பவர்கள் தொடர்ந்து புதிய புதிய முறைகளைக் கண்டுபிடித்து, பயனர்களின் பணத்தை அபகரிக்க போலியான QR கோடுகளைப் பயன்படுத்துகின்றனர். இதுபோன்ற மோசடி செய்யும் நபர்கள் மக்களை ஏமாற்ற போலி இணையதளங்களுக்கு அழைத்துச் செல்ல QR கோடுகளைப் பயன்படுத்துகின்றனர். அதன் பிறகு, பணத்தைத் திருட அவர்களின் வங்கி கணக்கு விவரங்களைப் பயன்படுத்துகின்றனர்.
ஸ்மார்ட்போன் கேமராவைக் கொண்டு ஸ்கேன் செய்யும் வகையில் QR கோடுகளை உருவாக்கி, மோசடி செய்பவர்கள், அதை ஸ்கேன் செய்யும் நபர்களை போலி வலைதளங்களுக்கு திருப்பி விடுகின்றனர். இந்த வலைதளங்கள் பிரபல இ-காமர்ஸ் தளம் அல்லது வங்கி வலைதளம் போன்றே இருக்கும். பார்ப்பதற்கு எந்த வித்தியாசமும் இல்லாமல் இருப்பதால் அதை நம்பி உங்களுடைய விவரங்களை என்டர் செய்யும்போதுதான் பிரச்சனை எழுகிறது. இதன் மூலம் வங்கி கணக்கு விவரங்கள், பாஸ்வேர்டுகள் போன்ற தனிப்பட்ட தகவல்கள் கேட்கப்படுகிறது. மேலும், பரிவர்த்தனை செய்வதற்காக UPI PIN அல்லது OTP-ஐ என்டர் செய்ய வேண்டியும் கேட்கப்படலாம். இதன் மூலம், பயன்படுத்துபவர்களின் தனிப்பட்ட தகவல்களையும் பணத்தையும் திருட முயற்சிக்கின்றனர்.
QR கோடு ஃபிஷிங் மோசடிகளை எவ்வாறு தவிர்க்கலாம்?:
நம்பிக்கையான QR code-ஐ ஸ்கேன் செய்யுங்கள்: நம்பகமான நிறுவனங்கள், கடைகள் அல்லது தனிநபர்களால் வழங்கப்பட்ட QR code-களை மட்டுமே ஸ்கேன் செய்யுங்கள். சந்தேகத்திற்கிடமான இடங்களில் இருந்து வரும் QR code-களைத் தவிர்க்கவும்.
ஸ்கேன் செய்வதற்கு முன் லிங்கை சரி பார்க்கவும்: சில QR code ஸ்கேனர் பயன்பாடுகள், QR code-ஐ ஸ்கேன் செய்யும் போது, அது உங்களை எந்த இணையதளத்திற்கு அழைத்துச் செல்லும் என்பதைக் காண்பிக்கும். இந்த வசதி இருந்தால், இணைப்பைச் சரிபார்த்து, அது நம்பகமானதாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
தனிப்பட்ட தகவல்களை வழங்க வேண்டாம்: QR code ஸ்கேன் செய்த பிறகு, நீங்கள் சென்றடையும் இணையதளம் உங்களின் வங்கி கணக்கு விவரங்கள், பின் நம்பர் போன்ற தனிப்பட்ட தகவல்களைக் கேட்டால், அவற்றை வழங்க வேண்டாம். நம்பகமான நிறுவனங்கள் இதுபோன்ற தகவல்களைக் கேட்காது.
வழக்கத்திற்கு மாறான தள்ளுபடிகள்: சாக்லேட்டுகளின் சில பேக்குகளில் QR கோடு உள்ளது. இதனை ஸ்கேன் செய்யும் போது நீங்கள் கேஷ்பேக் பெறுவீர்கள் என்றும் கூறப்படுகிறது. 5 ரூபாயோ அல்லது 10 ரூபாயோ கேஷ்பேக் பெற, உங்கள் ஒட்டுமொத்த தகவல்களையும் விற்க போகிறீர்களா? என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
More From GoodReturns

ஈரான்-இஸ்ரேல் மோதல்: இந்தியாவுக்கு தான் பெரிய பாதிப்பு.. அடுத்தடுத்து நடக்கும் பாதிப்பு..!!

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

பட்ஜெட் மாசத்துல மத்திய அரசுக்கு பணமழை: 8% உயர்ந்த ஜிஎஸ்டி வருவாய்!!

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

துபாய் எடுத்த முடிவிலால் இந்தியாவுக்கு புது பிரச்சனை..!!

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!



Click it and Unblock the Notifications