ஈரான் - இஸ்ரேல் - அமெரிக்கா இடையேயான ராணுவ தாக்குதல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) விமான சேவை மூன்று நாட்களாக முழுமையாக முடங்கியிருந்தது. இந்நிலையில், துபாய் விமான நிலையங்கள் திங்கள்கிழமை மாலை முதல் சிறிய அளவிலான விமான சேவையை மீண்டும் தொடங்குவதாக அறிவித்துள்ளன.
இந்த ஒரு அறிவிப்பு 3 நாட்களாக சரியான இடம் இல்லாமல் கிடைக்கும் வசதிகளை பயன்படுத்திக்கொண்டு, குண்டு வெடிப்பு சத்தம் மத்தியில் நாட்களை கழித்த பல ஆயிரம் வெளிநாட்டு மக்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது.

துபாய் இன்டர்நேஷனல் ஏர்போர்ட் (DXB) மற்றும் துபாய் வேர்ல்ட் சென்ட்ரல் - அல் மக்தூம் இன்டர்நேஷனல் ஏர்போர்ட் (DWC) ஆகியவற்றில் இருந்து இன்று மாலை முதல் சில விமானங்கள் இயங்கத் தொடங்கும் என்று துபாய் ஏர்போர்ட்ஸ் அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மூன்று நாட்களுக்கு முன்பு ஈரான் நாட்டில் இருந்து ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களால் கத்தார், UAE உள்ளிட்ட பகுதிகளில் வான்வெளி மூடப்பட்டது. இதனால் எமிரேட்ஸ், எதிஹாட், கத்தார் ஏர்வேஸ் உள்ளிட்ட முன்னணி விமான நிறுவனங்கள் விமானங்களை ரத்து செய்தன. இது மட்டும் அல்லாமல் கத்தார், UAE, குவைத் நாடுகளுக்கு செல்லும் அனைத்து விமானங்களும் உலக நாடுகளில் ரத்து செய்யப்பட்டன.
இதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் துபாய், அபுதாபி, தோஹா போன்ற இடங்களில் சிக்கித் தவித்தனர். இந்தியா, ஐரோப்பா, ஆசியா உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த பயணிகள் பாதிக்கப்பட்டனர்.
எமிரேட்ஸ்
எமிரேட்ஸ் விமான நிறுவனம் திங்கள்கிழமை இரவு முதல் சிக்கிய பயணிகளை படிப்படியாக வெளியேற்றத் தொடங்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. வழக்கமான விமான சேவைகள் இன்னும் முழுமையாக தொடங்கவில்லை என்றாலும், சில சிறப்பு விமானங்கள் இயக்கப்படுகின்றன.
மேலும் எமிரேட்ஸ் திட்டமிடப்பட்ட அனைத்து விமானங்களை இன்னும் இயக்கப்படவில்லை என்றாலும் சில முக்கிய கார்கோ விமானங்கள், துபாயில் இருக்கும் வெளிநாட்டினரை தாய் நாட்டிற்கு அனுப்பும் விமானங்களை இயக்குவதாக தெரிவித்துள்ளது.
FlyDubai
flydubai நிறுவனம் மார்ச் 2, 2026 அன்று மாலை சில வரையறுக்கப்பட்ட விமானங்களை இயக்கும் என்று அறிவித்துள்ளது. பயணிகள் விமான நிலையத்துக்கு செல்வதற்கு முன் http://flydubai.com என்ற இணையதளத்தில் உள்ள Manage Your Booking பகுதியில் தங்கள் தொடர்பு விவரங்களை புதுப்பித்துக்கொள்ளவும், விமான நிலைமையை சரிபார்த்துக்கொள்ளவும் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
எதிஹாட், ஏர்வேஸ் கத்தார்
எதிஹாட் ஏர்வேஸ் மதியம் 3 மணி வரை விமான ரத்துகளை நீட்டித்துள்ளது. கத்தார் ஏர்வேஸ் கத்தார் வான்வெளி மூடப்பட்டதால் தோஹாவுக்கு செல்லும் மற்றும் வரும் விமானங்களை நிறுத்தியுள்ளது.
அபுதாபி விமான நிலையத்தில் சில சிறப்பு சேவை விமானங்கள் திங்கள்கிழமை புறப்பட்டுள்ளன. இந்த விமான நிலையம் வார இறுதியில் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களால் பாதிக்கப்பட்டது. அந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார், பலர் காயமடைந்தனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
UAE அதிகாரிகள் இந்த மோசமான சூழ்நிலையை கட்டுப்படுத்தி, பயணிகளுக்கு உணவு, தங்குமிடம், விமான நிலைய போக்குவரத்து ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

இப்போது துபாய் விமான நிலையங்கள் சிறிய எண்ணிக்கையிலான விமான சேவையை தொடங்கியுள்ளன நிலையில் அந்நாட்டில் சிக்கிய பயணிகள் விரைவில் திரும்புவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் இந்தியாவை சேர்ந்த தெலங்கானா விவசாய அமைச்சர் தும்மலா நாகேஸ்வர ராவ், அஜித் குமார், பி.வி.சிந்து, ஈஷா குப்தா, நர்கிஸ் ஃபக்ரி ஆகியோர் நாடு திரும்புவார்களா..?
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

டிசிஎஸ் நாசிக் அலுவலகத்தில் நடந்தது என்ன? மஃப்டியில் வேலை செய்த மகளிர் போலீஸின் ஷாக் ரிப்போர்ட் !!

சட்டமன்ற தேர்தல் 2026: உங்களின் Booth Slip-ஐ ஆன்லைனில் டவுன்லோட் செய்வது எப்படி?



Click it and Unblock the Notifications