அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதலால் ஈரான் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டு வருவது மட்டும் அல்லாமல், ஈரானும் அமெரிக்காவின் தளங்கள் மீது கடுமையான பதிலடி தாக்குதல்கள் செய்து வருகிறது. இதனால் ஐக்கிய அரபு அமீரகம் (UAE) தனது வான்வெளி-யை மொத்தமாக மூடியுள்ளது.
இதன் வாயிலாக UAE நாடுகளுக்கும் வெளிநாடுகளுக்கமான போக்குவரத்து மொத்தமாக முடிங்கியுள்ளது. மேலும் UAE-யில் இருக்கும் கோடிக்கணக்கான இந்தியர்கள் தாய் நாட்டிற்கு திரும்ப முடியாமல் மாட்டிக்கொண்டு உள்ளனர். மேலும் ஐக்கிய அரபு அமீரகம் வான்வெளியை மூடியுள்ளதால் இந்தியாவுக்கு தங்கம் மற்றும் வைரம் விநியோகத்தில் பெரும் தடை ஏற்பட்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய தங்க நுகர்வு நாடான இந்தியாவுக்கு துபாய் மிக முக்கியமான விநியோக மையமாக உள்ளது. இந்தியா ஆண்டுக்கு 800-850 டன் தங்கம் இறக்குமதி செய்கிறது. இதில் 50-60 சதவீதம் துபாய் வழியாக வருகிறது. அதேபோல, இந்தியாவின் மாபெரும் வைர பாலிஷ் தொழிலுக்கு தேவையான வைரங்களில் பெரும்பகுதி துபாய் மூலம் வருகிறது.
தற்போது தங்கம், வைரம் இரண்டும் இந்தியாவுக்கு வருவது தடைபெற்றுள்ளதால் இதற்கு தற்காலிக தட்டுப்பாடு உருவாகியுள்ளது. பொதுவாக சப்ளை - டிமாண்ட் நிலையாக இருக்கும் போது விலையும் நிலையாக இருக்கும், ஆனால் சப்ளை குறைந்தால் விலை உயரும், டிமாண்ட் குறைந்தால் விலை குறையும்.
இந்த நிலையில் இந்தியாவுக்கு மிகப்பெரிய தங்க விநியோகஸ்தராக இருக்கும் துபாயில் உருவான இந்த கட்டுப்பாடு இந்திய சந்தைக்கு புதிய பிரச்சனையை உருவாக்கியுள்ளது. இப்போது வான்வெளி மூடப்பட்டதால் கப்பல் மற்றும் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இது குறுகிய காலத்தில் தங்கம் மற்றும் வைர விலையை உயர்த்தும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. இந்தியாவின் தங்க நுகர்வு மிக அதிகம் என்பதால், விநியோக தடை ஏற்பட்டால் உள்நாட்டு சந்தையில் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உள்ளது.
ஈரான்-இஸ்ரேல் மோதல் காரணமாக UAE வான்வெளி மூடப்பட்டுள்ளதும மூலம் இந்தியாவின் தங்கம் மற்றும் வைர வர்த்தக துறை பெரிதும் பாதிக்கிறது.


Click it and Unblock the Notifications