சமீபத்தில் கன்னட நடிகை ரன்யா ராவ் தங்கக் கடத்தலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டார். முதன்முதலில் 1970-களில் இந்தி திரைப்படங்களில் பிரபலமடைந்த தங்கக் கடத்தல் ரன்யா கைது செய்யப்பட்ட பிறகு மீண்டும் பேசு பொருளாகியுள்ளது. துபாய், லண்டன் போன்ற பல்வேறு நாடுகளில் தங்கத்தின் விலை இந்தியாவை விட சற்று குறைவாக இருப்பதால் அங்கிருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்தி வருவது அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்கு தங்கம் கொண்டு வருவதற்கான விதிகள் என்னென்ன?, எவ்வளவு தங்கம் வரியில்லாமல் கொண்டு வரலாம்? வரி செலுத்தினால் எவ்வளவு தங்கம் கொண்டு வரலாம்?, துபாயில் தங்கம் வாங்குவது இந்தியர்களுக்கு லாபமானதா? அல்லது இந்தியாவில் வாங்குவது தான் நல்லதா? என அனைத்து கேள்விகளுக்கும் இந்தக் கட்டுரையில் விடையைக் காண்போம்.

துபாய், லண்டன் போன்ற இடங்களில் இருந்து வந்த சிலர் தங்க கடத்தல் வழக்குகளில் இதற்கு முன்னர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கான காரணம் இந்தியாவை விட துபாயில் தங்கத்தின் விலை 8 முதல் 9 சதவீதம் குறைவு. குறைந்த உற்பத்தி கட்டணங்கள் மற்றும் ஏற்றுமதிக்கு VAT இல்லாதது போன்ற காரணங்களால் தங்கம் விலை இந்தியாவை விட அங்கு மலிவு.
இந்த காரணத்தினால் மக்கள் அங்கிருந்து தங்கத்தை இந்தியாவிற்கு கொண்டு வருகின்றனர். துபாய் மற்றும் லண்டனில் இருந்து தங்கம் கொண்டு வருவது சட்ட விரோதமானது அல்ல. ஆனால் அதற்கு சில விதிகள் உண்டு. அந்த விதிகளைப் பற்றி தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
எவ்வளவு தங்கம் கொண்டு வரலாம்?: நீங்கள் எவ்வளவு தங்கத்தை கொண்டு வரலாம் என்பது உங்கள் பாலினம் மற்றும் நீங்கள் வெளிநாட்டில் எவ்வளவு காலம் தங்கி இருந்தீர்கள்? என்பதையெல்லாம் பொறுத்தது. ஒரு குறிப்பிட்ட வரம்பு வரையில் வரி இல்லை. அதற்கு மேல் சுங்கவரி செலுத்த வேண்டும். அதாவது வரி செலுத்தியும் தங்கம் கொண்டு வரலாம் அல்லது வரி செலுத்தாமலும் துபாயில் இருந்து இந்தியாவுக்கு தங்கம் கொண்டு வரலாம்.
வரி செலுத்தப்பட்டால் செக்கின் மூலம் அனுமதிக்கப்படும் அதிகபட்ச தங்கத்தின் அளவு 1 கிலோ. அதாவது 1000 கிராம்கள். சுங்க விதிகளின் கீழ் 1 கிலோ தங்கம் கொண்டு வர நீங்கள் குறைந்தபட்சம் 6 மாதங்களாவது வெளிநாட்டில் தங்கியிருக்க வேண்டும். அதோடு வெளிநாட்டில் இருந்து விமானத்தில் தங்கம் கொண்டு வருவதற்கு நீங்கள் தகுதியுடையவர் என்பதை நிரூபித்தாக வேண்டும்.
தங்கம் எடுத்து வர தகுதி பெற வேண்டுமானால் சட்டப்பூர்வமான இந்தியப் பாஸ்போர்ட் வைத்திருக்க வேண்டும். 6 மாதங்கள் வெளிநாட்டில் தங்கியிருந்து இந்தியா திரும்பும் பயணியாக இருப்பவர் தங்கம் எடுத்து வர தகுதியான பயணி என்று வரையறுக்கப்படுகிறார்.
இந்தியாவில் இன்றைய 1 கிலோ தங்க விலையின் மதிப்பு சுமார் ரூ. 84 லட்சம். எனவே இந்தியப் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் அதிகபட்சமாக 50,000 வரையிலான தங்கத்தை வரியில்லா விலையிலும், பெண்கள் ரூ.1 லட்சம் வரையிலான தங்கத்தை வரியில்லா விலையிலும் கொண்டு வரலாம்.
இந்தியாவில் இன்று 24 கேரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ. 90,000. ஆண்கள் அதிகபட்சமாக ரூ. 50,000 வரையிலான தங்கத்தை கொண்டு வர முடியும். தற்போதைய விலையை வைத்து பார்க்கும் போது வெளிநாடுகளில் இருந்து சுமார் 5 கிராம் தங்கத்தை இந்தியாவிற்கு கொண்டு வரலாம்.
அதோடு வெளிநாடுகளில் இருந்து தங்கம் வாங்கி இருந்தால் அதன் சட்டப்பூர்வ தன்மையை நிரூபிக்க வேண்டும். அதற்கான ரசீதுகளை காட்ட தயாராக இருக்க வேண்டும்.
சுங்க வரி விகிதங்கள்: ஆண்கள் 20 கிராம் முதல் 50 கிராம் வரையிலும், பெண்கள் மற்றும் குழந்தைகள் 40 கிராம் முதல் 100 கிராம் வரையிலும் தங்கத்தை கொண்டு வந்தால் 3% சுங்க வரி. ஆண்கள் 100 கிராமுக்கு மேல், பெண்கள் மற்றும் குழந்தைகள் 200 கிராமுக்கு மேல் தங்கம் கொண்டு வந்தால் 10% சுங்க வரி.
துபாயில் தங்கம் வாங்குவது நல்லதா? அல்லது இந்தியாவில் வாங்குவது நல்லதா?: இந்தியாவில் 10 கிராம் தங்கம் வாங்குவதற்கும் துபாயில் 10 கிராம் தங்கம் வாங்கி வருவதற்கும் ஆகும் மொத்த செலவு என்னவென்று பார்ப்போம். இந்தியாவில் 10 கிராம் தங்கம் வாங்கினால் ரூ.90,000 செலவாகும். துபாயில் 10 கிராம் தங்கம் வாங்கி இந்தியாவுக்கு கொண்டு வருவது வரி இல்லாத வரம்பு. துபாய் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 82,000 ஆக உள்ளது. பெண்களுக்கு வரி இல்லாத வரம்பு ரூ.1 லட்சம். 10 கிராம் வரி இல்லாத வரம்பிற்குள் இருப்பதால் எந்த வரியும் விதிக்கப்படாது. எனவே இந்தியாவில் வரி இல்லாமல் இறங்கும்போது ரூ.82,000 செலவாகி இருக்கும்.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!

தங்கம் விலை: ஒரே நாளில் 2 முறை விலை சரிவு.. 1 கிராமுக்கு 1000 ரூபாய் சரிவு.. ஷாக் மேல ஷாக்..!!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை உயர்வு.. ஈரான் போருக்கு மத்தியில் மாட்டிக்கொண்ட தங்க நகை சந்தை..!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மதுரை, திண்டுக்கல், தேனி மக்களே தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. நகை வாங்கும் முன் இதை படிங்க..!!

தங்கம் விலை இனி எகிற போகுது: சிக்னல் தந்த உலக சந்தை..! ஈரான் போரில் நடந்த திடீர் திருப்பமே காரணம்?



Click it and Unblock the Notifications