உலகின் மிகப்பெரிய தங்கச் சந்தைகளில் ஒன்றான துபாயில் நவம்பர் மாதம் முழுவதும் 24 காரட் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கம் கண்டு வருகிறது. உலகளாவிய தங்க விலை அமெரிக்க வட்டி விகிதம் மற்றும் டாலர் மதிப்பு மாற்றங்கள் காரணமாக பெரிய அளவில் ஏறி இறங்கினாலும், துபாய் சந்தை அதிக அளவில் பாதிக்கப்படாமல் உறுதியாக இருந்து வருகிறது. இது துபாயிள் தங்கம் வாங்குபவர்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் சற்று நிம்மதியை அளித்துள்ளது.
நவம்பர் மாத தொடக்கத்தில் 24 காரட் தங்கம் ஒரு கிராமுக்கு 482.25 திர்ஹாம்களாக இருந்தது. அதன் பிறகு விலை 475 முதல் 505 திர்ஹாம்கள் மத்தியில் தடுமாறி வந்தது. நவம்பர் 4 ஆம் தேதி உலக சந்தையில் தங்க விலை சற்று சரிந்ததாலும் டாலர் மதிப்பு உயர்ந்ததாலும் துபாயில் விலை 475.25 திர்ஹாம்கள் வரை குறைந்தது. இது அம்மாதத்தின் குறைந்தபட்ச விலையாக அமைந்தது.

அதன் பிறகு உலக அளவில் பாதுகாப்பான முதலீடு என்று தங்கத்தின் மீதான தேவை அதிகரித்ததாலும் டாலர் சற்று பலவீனமடைந்ததாலும் விலை மீண்டும் உயர்ந்தது. நவம்பர் 12 ஆம் தேதி 504.75 திர்ஹாம்கள் வரை சென்றது. மாதத்தின் நடுப்பகுதியில் விலை மீண்டும் சற்று குறைந்து 480 திர்ஹாம்களாக இருந்தது. நவம்பர் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் 489.75 திர்ஹாம்களாக உறுதியாக இருந்தது.
இன்று நவம்பர் 20 ஆம் தேதி 24 காரட் தங்கம் ஒரு கிராமுக்கு 491 திர்ஹாம்களாக உள்ளது. கடந்த சில நாட்களை ஒப்பிடுகையில் இது சிறிய உயர்வு என்றாலும், மாதம் முழுவதையும் பார்க்கும் போது விலை பெரிய அளவில் மாற்றம் இல்லாமல் உறுதியாகவே இருந்து வருகிறது.
இன்று இந்திய ரீடைல் சந்தையில் 24 கேரட் 10 கிராம் தங்கம் விலை 1,25,460 ரூபாயாக உள்ளது. இதுவே துபாயில் 1,18,841 ரூபாயாக உள்ளது. கிட்டத்தட்ட கிராமுக்கு 600 ரூபாய் குறைவாக உள்ளது. இதேபோல் துபாயில் தங்க வாங்க திட்டமிட்டால் வாட் வரி விதிப்பையும், பயண செலவுகளையும் கணக்கில் கொண்டு வாங்கவும்.

துபாய் சந்தையில் ஏன் தங்கம் விலை உறுதியாக உள்ளது?
உலகின் மிகப்பெரிய வரி இல்லாத தங்க வர்த்தக மையமாக துபாய் இருப்பதால், இங்கு விலை மாற்றங்கள் உலக சந்தையை விட குறைவாகவே இருக்கிறது. அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகித முடிவுகள், டாலர் மதிப்பு, புவிசார் அரசியல் பிரச்சினைகள் போன்றவை உலக தங்க விலையை பாதித்தாலும், துபாயில் உள்ளூர் தேவை மற்றும் விற்பனை விலையில் பெரிய தாக்கம் இல்லாமல் வைத்திருக்க உதவுகிறது.
இந்தியா இருந்து துபாய்க்கு சென்று தங்க ஆபரணங்கள் வாங்கும் சுற்றுலாப் பயணிகளுக்கு இந்த நிலையான விலை எப்போதும் சாதகமாக அமைந்து வருகிறது. திருமண சீசன் மற்றும் பண்டிகை காலங்களில் தங்கம் வாங்குபவர்கள், துபாய் விலை பெரிதாக உயராமல் இருப்பதை பயன்படுத்திக்கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications