வேலை ரீதியாக லட்சக்கணக்கான இந்தியர்கள் ஆண்டு தோறும் துபாய்க்கு செல்கிறார்கள். இவ்வாறு துபாய்க்கு செல்பவர்களிடம் குடும்பத்தார் கூறும் முக்கிய விஷயம் வரும் போது தங்கம் வாங்கி கொண்டு வா என்பது தான். ஏனெனில் இந்தியாவை விட துபாயில் தங்கம் விலை குறைவு.
துபாய் போன்ற வெளிநாடுகளில் ஒரு வருடத்திற்கு மேல் தங்கி தங்கியிருப்பவர்கள் அங்கிருந்து இந்தியா திரும்பும் போது பெண்களாக இருந்தால் 40 கிராம் வரையிலும் ஆண்களாக இருந்தால் 20 கிராம் வரையிலும் தங்கத்தை வரியில்லாமல் இந்தியாவிற்கு கொண்டு வரலாம். இதற்கு முன்பு அவர்கள் கொண்டு வரக்கூடிய தங்கத்தின் இந்திய ரூபாய் பெண்களுக்கு 1 லட்சமாகவும் ஆண்களுக்கு 50 ஆயிரம் ரூபாயாகவும் இருந்தது. மத்திய அரசு அண்மையில் இதனை நீக்கியது. எனவே தங்கத்தின் இந்திய ரூபாயின் மதிப்பை இனி கவனத்தில் கொள்ளாமல் அது எவ்வளவு எடை கொண்டது என்பதை பொறுத்து அதற்கு வரி விதிப்பதா இல்லையா என்பதை சுங்கத்துறை அதிகாரிகள் தீர்மானிப்பார்கள்.

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு இது நற்செய்தி. குறிப்பாக துபாய் வாழ் இந்தியர்களுக்கு பெரிய உற்சாகம் தரும் செய்தி இது. துபாயில் தங்கம் வாங்கும்போது குறிப்பிட்ட சில விஷயங்களை கவனித்தாக வேண்டும் இல்லை என்றால் பெரிய சட்ட சிக்கலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அது என்ன என்பதை தற்போது தெரிந்து கொள்ளலாம்.
இந்தியா மட்டும் அல்ல பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்களும் துபாயில் தங்கம் வாங்குவதை விரும்புவார்கள். துபாயில் நீங்கள் தங்கம் வாங்குகிறீர்கள் என்றால் கடைக்கு புறப்படுவதற்கு முன் அன்றைய நாளில் தங்கத்தின் விலை என்ன, ஒரு கிராமின் விலை என்ன என்பதை கவனிக்க வேண்டும். பெரும்பாலான கடைகளிலேயே டிஜிட்டல் போர்டுகளில் அன்றைய விலையை குறிப்பிட்டு இருப்பார்கள்.

மேலும் துபாயில் நீங்கள் வாங்கக்கூடிய தங்கத்தின் தூய்மை தன்மை என்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். 24 கேரட் தங்கம் என்றால் அதிகபட்ச தூய்மை தன்மை கொண்டது. 99.9% தங்கம், பெரும்பாலும் தங்க கட்டிகளும், நாணயங்களும் இந்த தூய்மை தன்மையில் கிடைக்கும். 22 கேரட் தங்கம் என்றால் 91.6% தங்கம் கொண்டது. மீதியை மற்ற உலோகங்களை கலந்து நகையாக செய்திருப்பார்கள். இதைத் தவிர 21 கேரட் , 18 கேரட் தங்கமும் கிடைக்கிறது.
துபாயில் தங்கம் வாங்குவதற்கு முன்பு நீங்கள் வாங்கக்கூடிய கடை அந்நாட்டு அரசின் உரிமம் பெற்ற, அங்கீகாரம் பெற்ற கடையா என்பதை கவனிப்பது நல்லது. துபாயில் Deira Gold Souk, மீனா பஜார் ஆகியவை புகழ்பெற்ற தங்க சந்தைகள். ஏராளமான இந்தியர்கள் இங்கு தான் நகை வாங்குவார்கள். அடுத்ததாக பல்வேறு மால்களிலும் தங்கு நகையை விற்பனை செய்யக்கூடிய கடைகள் இருக்கின்றன. நவீன மாடல்களில் தங்கம் கிடைக்கும்.

நீங்கள் எந்த கடையில் தங்கம் வாங்கினாலும் அந்த கடை துபாய் அரசின் அங்கீகாரம் பெற்ற கடையா என்பதை கவனிக்க வேண்டும். இல்லை என்றால் ஏமாந்து போக நேரிடலாம். அடுத்ததாக துபாயில் விற்பனை செய்யக்கூடிய அனைத்து நகைகளையும் ஹால்மார்க் குறியீடு கட்டாயம். துபாய் சென்ட்ரல் லேப் அமைப்பு தூய்மையான தங்கம் விற்கப்படுவதை உறுதி செய்யும் நோக்கில் அனைத்து நகைகளிலும் இந்த ஹால்மார்க் குறியீடு இருப்பதை உறுதி செய்கிறது. எனவே ஹால்மார்க் குறியீடு இருக்கிறதா என்பதை பார்த்து வாங்குவது நல்லது.
அடுத்ததாக இந்தியாவைப் போலவே துபாயிலும் தங்க நகைகளுக்கு செய்கூலி விதிக்கப்படும். அது தொடர்பாக விரிவாக கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். தங்க நகை வாங்கும் போது அதற்குரிய ஆவணங்களை வாங்கி வைத்து கொள்ள வேண்டும். ஏனெனில் விமான நிலையத்தில் பரிசோதிக்கும் போது தங்கம் வாங்கியதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
எனவே எங்கு தங்கம் வாங்கினாலும் அதன் கேரட் அளவு, எடை, விலை என்ன, செய்கூலி எவ்வளவு, நீங்கள் செலுத்திய கட்டணம், கடையின் சீல் வைக்கப்பட்ட ரசீது கட்டாயம் வாங்க வேண்டும். இது இல்லை என்றால் விமான நிலையத்தில் பெரிய சிக்கலை சந்திக்கலாம். தங்க கடத்தல் என கூட முத்திரையிடப்பட வாய்ப்புள்ளது.
துபாயில் வாங்கிய தங்கத்தை வரி இல்லாமல் இந்தியா கொண்டு வரவும், இந்தியாவில் அதனை விற்கவோ அல்லது மாற்றவோ முயலும் போது சட்ட சிக்கலில் சிக்காமல் இருக்க இந்த ரசீது கட்டாயம் தேவை. குறைந்த விலைக்கு தங்கம் கிடைக்கிறது என அங்கீகாரம் இல்லாத கடைகளிலோ, ரசீது இல்லாமலோ தங்கம் வாங்கினால் பிரச்சினை தான்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் இன்றும் அதிசயம்.. வாங்க நல்ல வாய்ப்பு.. ஆனா ஒரு விஷயம்..!!

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு.. வாரத்தின் முதல் நாளே சர்ப்ரைஸ்.. நல்ல சான்ஸ்..!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

மதுரை, திண்டுக்கல், தேனி மக்களே தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. நகை வாங்கும் முன் இதை படிங்க..!!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

கோயம்புத்தூர் மக்களே தங்கம் விலை உயர்ந்தது.. இனி ஒவ்வொரு ஸ்டெப்பும் கவனம் வைக்கனும்..!

சென்னை அசோக் நகர்.. ஒரே காரில்.. ரூ.77 கோடி தங்கம் - வெள்ளி.. பறக்கும் படை 'கப்'பென பிடித்தது..!!

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே நகை வாங்க இன்று தான் நல்ல நாள்!!

தங்கம் விலை இனி எகிற போகுது: சிக்னல் தந்த உலக சந்தை..! ஈரான் போரில் நடந்த திடீர் திருப்பமே காரணம்?



Click it and Unblock the Notifications