கடந்த சனிக்கிழமை அன்று இஸ்ரேலும் அமெரிக்காவும் திடீரென ஈரான் மீது தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் ஈரானின் தலைவர் அயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். இதனால் கடும் ஆத்திரமடைந்த ஈரான் ராணுவம் பதிலுக்கு இஸ்ரேல் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தி வருகிறது.
துபாய், சவுதி , பஹ்ரைன் போன்ற நாடுகளில் இருக்கக்கூடிய அமெரிக்க படைத்தளங்கள் மற்றும் தூதரகங்கள் மீதும் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வருகிறது ஈரான். மேற்காசியாவில் நிலவும் இந்த போர் பதற்றம் பங்குச் சந்தைகள் அனைத்தையும் பெரிய அளவில் வீழ்ச்சி அடைய வைத்துள்ளது. கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டிருக்கிறது பல்வேறு பொருட்களின் சரக்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருக்கிறது.

உலகின் புகழ்பெற்ற துபாய் தங்கச்சந்தையிலும் ஈரான் போர் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த போர் காரணமாக விமான போக்குவரத்து தடைப்பட்டு இருக்கிறது. இதனால் துபாயில் இருந்து மற்ற நாடுகளுக்கு தங்கத்தை கொண்டு செல்ல முடியாத சூழல் உண்டாகி இருக்கிறது. இந்தியா போன்ற பல்வேறு நாடுகளை சேர்ந்த தங்க வர்த்தகர்கள் துபாயில் இருந்து தான் தங்கத்தை மொத்தமாக கொள்முதல் செய்கின்றனர்.
ஆனால் போர் காரணமாக விமான போக்குவரத்து நின்று, சரக்கு போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் துபாயில் அதிகளவு தங்கம் தேக்கமடைந்துள்ளதாம், டீலர்கள் தற்போதைக்கு புதிய ஆர்டர்களை வழங்காமலும் ஏற்கனவே கொடுத்த ஆர்டர்களை எடுக்காமலும் இருக்கின்றனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போதைய சூழலில் விமான சேவை இல்லை. சரக்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருக்கிறது இப்போது துபாயில் இருந்து தங்கத்தை கொண்டு வர வேண்டும் என்றால் வழக்கத்தை விட கூடுதலாக செலவிட வேண்டும் என்பதால் பல்வேறு நிறுவனங்களும் துபாயிலிருந்து தங்கத்தை வாங்காமல் நிறுத்தி வைத்திருக்கின்றன. இதனால் துபாயில் தங்கத்தின் இருப்பு அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. நீண்ட காலத்திற்கு இதனை இருப்பு வைத்திருக்க முடியாது எப்போது இந்த நிலைமை சீராகும் என தெரியாது என்பதால் இந்த துபாய் வர்த்தகர்கள் உலக பெஞ்ச்மார்க் சந்தையான லண்டனில் விற்கப்படக்கூடிய தங்கத்தின் விலையை விட ஒரு அவன்ஸுக்கு 30 டாலர்கள் வரை தள்ளுபடி விலையில் தங்கத்தை விற்பனை செய்ய தொடங்கி இருக்கிறார்கள்.

கடந்த வெள்ளிக்கிழமை முதலே சரக்கு போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டு இருக்கிறது, நீர்வழிப் போக்குவரத்தும் இல்லை , வான்வழி போக்குவரத்தும் இல்லை இதனால் துபாய் தங்கச் சந்தையில் தங்கம் தேக்கமடைந்திருப்பதால் வர்த்தகர்கள் அவற்றை தள்ளுபடி விலையில் விற்பனை செய்ய தொடங்கி இருக்கிறார்கள்.
ஆசிய நாடுகளுக்கு தங்கத்தை சுத்திகரித்து ஏற்றுமதி செய்வதற்கான ஒரு முக்கிய மையமாக திகழ்கிறது துபாய். அதுமட்டுமில்லாமல் இங்கிலாந்து மற்றும் பல ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து தங்கத்தை ஏற்றுமதி செய்வதற்கான ஒரு வழியாகவும் துபாய் தான் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் ஈரான் போர் காரணமாக துபாய் வான்வெளி மூடப்பட்டிருக்கிறது. பயணிகள் விமானம் மட்டுமே அவ்வப்போது இயக்கப்பட்டு வருகிறது.
வழக்கமாக தங்கம் பயணிகள் விமானங்களில் சரக்கு பெட்டிகளில் கொண்டு செல்லப்படும், ஆனால் தற்போது விமான சேவை நிறுத்தப்பட்டு இருக்கிறது இதனால் தரைவழியாக அதனை கொண்டு வருவதும் பாதுகாப்பு இல்லை, கப்பல் வழியாக கொண்டு வருவதும் அதிக செலவு கொண்டது என்பதால் வர்த்தகர்கள் எந்த தங்கத்தையும் அங்கிருந்து கொண்டு வராமல் நிறுத்தி வைத்திருக்கின்றனர்.
இந்தியாவின் மிகப்பெரிய தங்க டீலரான ரெனிஷா சைனானி ஏராளமான தங்க கொண்டுவர முடியாமல் இருப்பதால் துபாயில் தேக்கம் அடைந்து விட்டது என்கிறார். இந்த நிலையில் நீடித்தால் இந்தியாவில் தங்க கட்டிகளுக்கான சப்ளை குறைந்து டிமாண்ட் அதிகரிக்கலாம் என்கிறார். தற்போதைக்கு இந்திய சந்தையில் போதிய அளவு தங்கம் கையிருப்பு இருப்பதாக கூறும் மொத்த விலைக்கு தங்க கட்டிகளை வாங்கி விற்பனை செய்யக்கூடிய டீலர்கள், இன்னும் சில மாதங்களுக்கு இந்த பிரச்சனை நீடித்து தங்கம் அங்கிருந்து கொண்டு வரவே முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் இந்தியாவில் தங்கத்திற்கு தட்டுப்பாடு ஏற்படும் என தெரிவிக்கின்றனர். அவ்வாறு தட்டுப்பாடு ஏற்பட்டால் விலை உயரும்.
More From GoodReturns

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

சென்னை அசோக் நகர்.. ஒரே காரில்.. ரூ.77 கோடி தங்கம் - வெள்ளி.. பறக்கும் படை 'கப்'பென பிடித்தது..!!

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் தங்க சந்தையில் புயலை கிளப்பிய புதின்!! வெளிவந்தது ரஷ்யாவின் தங்க புதையல்!!

தங்கம் விலை இனி எகிற போகுது: சிக்னல் தந்த உலக சந்தை..! ஈரான் போரில் நடந்த திடீர் திருப்பமே காரணம்?

புதிய விதிமுறை : HDFC கோல்ட் ETF-ல் இனி தங்கம் எப்படி சேமிக்கப்படும்?



Click it and Unblock the Notifications