செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வருகையால் ஆண்களை விட பெண்களே மூன்று மடங்கு அதிகமாக வேலை வாய்ப்பை இழக்கின்றனர் என சர்வதேச தொழிலாளர் அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது.
உலக அளவில் ஜெனரேட்டிவ் ஏஐ, ஏஐ ஏஜெண்டுகள் உள்ளிட்ட தொழில்நுட்பங்களின் வருகையால் மனிதர்கள் பார்த்து வந்த பல்வேறு வேலை வாய்ப்புகள் பறிபோன வண்ணம் இருக்கின்றன. குறிப்பாக ஒரே மாதிரியாக திரும்பத் திரும்ப செய்யக்கூடிய வேலைகளை எல்லாம் பெரிய நிறுவனங்கள் மனிதர்களை நீக்கிவிட்டு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திடம் ஒப்படைத்து விட்டன.

பிபிஓ, வாடிக்கையாளர் சேவைகள், ஹெச் ஆர், கோடிங் என பல்வேறு துறைகளிலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் ஆதிக்கம் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. பெரிய நிறுவனங்களும் சிக்கன நடவடிக்கையாக கூறி மனிதர்களை வேலையில் இருந்து நீக்கிவிட்டு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை அந்த இடத்தில் பணிக்கு அமர்த்துகின்றன. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரக்கூடிய சூழலில் சர்வதேச தொழிலாளர் அமைப்பு ஒரு ஆய்வு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது.
ஐநாவுக்கு சொந்தமான சர்வதேச தொழிலாளர் அமைப்பு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பல்வேறு துறைகளின் வடிவத்தையே மாற்றி வருவதாக தெரிவித்திருக்கிறது. மின்னல் வேகத்தில் மனிதர்களின் வேலைகள் பறிக்கப்பட்டு ஏஐ மூலம் தானியங்கு முறைக்கு மாற்றப்படுகின்றன என அதில் கூறப்பட்டிருக்கிறது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் இந்த அதிவேகமான மாற்றம் ஆண்களைவிட பெண்களை தான் அதிகம் பாதிக்கிறது என தெரிவித்திருக்கிறது.
அதாவது இந்த ஏஐ வருகையால் ஆண்களை விட பெண்களே மூன்று மடங்கு அதிகமாக வேலையை இழக்கின்றனர் என அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் காரணமாக நிறுவனங்களில் ஏற்பட்டிருக்கும் ஆட்டோமேஷன் அனைத்து பாலினத்தவரையும் சமமான முறையில் பாதிக்கவில்லை பெண்களே இதன் பாதிப்பை அதிகமாக சந்திக்கின்றனர் என அதில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
குறிப்பாக செல்வந்த நாடுகளில் பெண்கள் வசம் இருக்கக்கூடிய 10 சதவீத வேலை வாய்ப்புகள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வசம் செல்வதற்கான வாய்ப்பு இருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதே வேளையில் ஆண்கள் செய்யக்கூடிய வேலைகள் என பார்க்கும் போது அதில் 3.5 சதவீத வேலைகள் மட்டுமே ஏஐ வசம் செல்வதற்கான வாய்ப்பு இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
எனவே ஏஐ தொழில்நுட்பத்தின் வருகை வேலைகளை தானியங்கு முறைக்கு மாற்றுகிறது என்பது மட்டுமில்லாமல் பணியிடங்களில் பாலின இடைவெளியையும் உருவாக்குகிறது என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்படுகிறது. சர்வதேச தொழிலாளர் அமைப்பாளர் ஐஎல்ஓ வெளியிட்டு இருக்கும் இந்த அறிக்கையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கிளெரிக்கள்மற்றும் அட்மினிஸ்ட்ரேடிவ் சம்பந்தப்பட்ட வேலை வாய்ப்புகளை தான் பெரும் அளவில் பறித்துள்ளது.

தட்டச்சர், டேட்டா என்ட்ரி, சாப்ட்வேர் டெவலப்பர்கள், நிதி சார்ந்த ஆய்வாளர்கள் உள்ளிட்ட வேலைகள் தான் ஏஐ தொழில்நுட்பத்தால் அதிக அளவில் பாதிப்பை சந்திப்பவையாக இருக்கின்றன. இவற்றில் பெரும்பாலான வேலைகள் திரும்பத் திரும்ப ஒரே மாதிரியாக செய்யக்கூடிய வேலைகளாக இருக்கின்றன அல்லது ஒரு ஒரு குறிப்பிட்ட விதிகளின்படி பின்பற்றி செய்ய வேண்டியவைகளாக இருக்கின்றன. எனவே ஜெனரேட்டிவ் ஏஐ போன்ற தொழில்நுட்பங்களுக்கு இத்தகைய வேலைகளை செய்வது மிகவும் எளிது. மனிதர்களை விட வேகமாக இந்த வேலைகளை அவை முடித்து விடுகின்றன. ஆனால் துரதிஷ்டவசமாக உலகம் முழுவதும் இது போன்ற பெரும்பாலான வேலைகள் பெண்களிடமே இருக்கின்றன என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்படுகிறது.
கிளெரிக்கல் வேலைகள் எல்லாம் மின்னல் வேகத்தில் தானியங்கு முறைக்கு மாற்றப்பட்டு வருகின்றன, இதில் நாம் கவனிக்க வேண்டியது உலகம் முழுக்க பெண்களே இந்த வேலைகளில் அதிகம் உள்ளனர் என கூறும் பொருளாதார நிபுணரும் கட்டுரையாளருமான ஜனைன் பெர்க், இந்த வேலைகளுக்கு தான் தற்போது பெரிய ஆபத்து ஏற்பட்டு இருக்கிறது இது நேரடியாகவே பெண்களை பாதிக்கிறது என கூறுகிறார்.
ஏஐ புரட்சி வந்துவிட்டது மனிதர்கள் வேலைகளை பெறுகிறது என்பதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் எதிர்காலத்தில் இது பணியிடங்களில் மிகப்பெரிய பாலின இடைவெளியை உருவாக்கும் என தெரிவித்திருக்கிறார். தொடக்க நிலையில் இருக்கும் வேலைகளை மட்டுமே ஏஐ தொழில்நுட்பம் பறிக்கவில்லை அதிக திறன் தேவைப்படக்கூடிய துறைகளில் கூட மனிதர்களுக்கு மாற்றாக ஏஐ தொழில்நுட்பம் வந்துவிட்டது என இந்த ஆய்வு அறிக்கை எச்சரிக்கிறது .
மென்பொருள், நிதி மற்றும் ஊடகம் ஆகிய மூன்று துறைகளும் தற்போது ஏஐ ஆதிக்கம் மூலம் மாறி வருகிறது என இந்த அறிக்கையில்தெரிவிக்கப்பட்டிருக்கிறது .எனவே இந்த துறைகளில் அதிக சம்பளத்தில் வேலைக்கு இருக்கும் பெண்களும் ஏஐ தொழில்நுட்பத்தின் வருகையால் பாதிக்கப்பட்டு உள்ளனர் கூறப்பட்டுள்ளது. அதே வேளையில் மருத்துவம் ,தூய்மை பணி உள்ளிட்ட ஆண்கள் அதிகமாக வேலை செய்யக்கூடிய துறைகளில் இதுவரை அந்த அளவிற்கு ஏஐ தொழில்நுட்பத்தால் நுழைய முடியவில்லை எனவே தான் ஏஐ வருகை ஆண்களை விட பெண்களையே அதிகம் பாதிக்கிறது என அந்த ஆய்வு அறிக்கையில் விளக்கம் தரப்பட்டுள்ளது.
எனவே அரசுகளும், நிறுவனங்களும், தொழிலாளர் அமைப்புகளும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பெண்களின் வேலை வாய்ப்பை பறிக்காத வகையிலும், நம் வேலையை தரமானதாகவும் மேம்படுத்தும் வகையிலும் மட்டுமே இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என சர்வதேச தொழிலாளர் அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.
வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடந்த பெண்கள் கல்வி அறிவு பெற்று வேலைவாய்ப்பு சந்தையில் நுழைந்து அனைத்து துறைகளிலும் சாதித்து வருகின்றனர். ஆனால் அதற்கெல்லாம் முட்டுக்கட்டை போடும் வகையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வருகை அமைந்துவிடக் கூடாது என்பதே சர்வதேச தொழிலாளர் அமைப்பின் வாதம். பெண்கள் வேலை வாய்ப்பு இழந்து மீண்டும் வீட்டிற்கு செல்லும் சூழல் ஏற்பட்டால் இத்தனை ஆண்டுகளாக ஏற்பட்டு வந்து முன்னேற்றம் தடைபடும் என அதில் கூறப்பட்டிருக்கிறது.
எனவே ஏஐ தொழில்நுட்பம் பெண்களின் முன்னேற்றத்திற்கு தடை போடுவதாக இருக்க கூடாது, பணியிடங்களில் பாலின இடைவெளியை ஏற்படுத்தக் கூடாது என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. உலகளவில் கூகுள், மைக்ரோசாப்ட், அமேசான் போன்ற பெரிய டெக் நிறுவனங்கள் கூட அதிக ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கியுள்ளன. ஆனால் நிறுவனங்கள் தரப்பில் பொதுவாக எத்தனை ஆண்கள், பெண்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்ற தரவுகள் வெளியிடப்படுவதில்லை.
More From GoodReturns

இரவோடு இரவாக நடந்த டீலிங்.. பென்டகன் உடன் கைகோர்த்த OpenAI.. சாம் ஆல்ட்மேன் டிவீட்..!!

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

துபாய் எடுத்த முடிவிலால் இந்தியாவுக்கு புது பிரச்சனை..!!

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!



Click it and Unblock the Notifications