உலகின் டாப் 10 பொருளாதார நாடுகளில் இந்தியாவின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும் வேளையில் உள்நாட்டு முதலீடுகளும் சரி, வெளிநாட்டு முதலீடுகளும் சரி சிறப்பான வர்த்தகச் சூழ்நிலை உள்ளது. இந்த நிலையில் உள்நாட்டு நிறுவனங்கள் பெரும்பாலும் முதலீடும் செய்யும் இடங்களைத் தாண்டி தற்போது புதிய பாதையில் செல்ல துவங்கியுள்ளது.
பொதுவாக இந்தியாவின் முன்னணி வர்த்தகச் சாம்ராஜ்ஜியங்கள் தென்னிந்திய மாநிலங்கள், வட இந்தியாவில் குஜராத், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம் ஆகியவை மாநிலங்களில் தான் அதிகம் முதலீடு செய்யும். இந்த நிலையில் கடந்த 3 மாதத்தில் பல புதிய மற்றும் பெரும் முதலீடுகள் கிழக்கு இந்திய மாநிலங்களுக்கு நகரத் துவங்கியுள்ளது.

இதில் முக்கியமாகச் சமீபத்திய JSW மற்றும் டாடா குழுமத்தின் முதலீடுகள் மிகப்பெரிய அட்டிராக்ஷனாக மாறியுள்ளது என்றால் மிகையில்லை. இந்த மாற்றம் புதிய முதலீட்டுப் பார்வையும், பிற பெரிய வர்த்தகக் குழுமங்களையும் ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது என்றால் மிகையில்லை. தற்போது JSW குழுமம் ஒடிசாவிலும், டாடா குழுமம் அசாம் மாநிலத்திலும் பெரும் தொகையை முதலீடு செய்ய உள்ளது.
JSW எலக்ட்ரிக் வாகன முதலீடு: JSW குழுமம் ஒடிசா மாநிலத்தில் கட்டாக் மற்றும் பாரதீப் பகுதிகளில் எலக்ட்ரிக் வாகனம் (EV) மற்றும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான பேட்டரி உற்பத்தி தொழிற்சாலையைத் திட்டத்தை அமைக்க ஒடிசா அரசாங்கத்துடன் ரூ.40,000 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் பிப்ரவரி 10ஆம் தேதி கையெழுத்திட்டது.
இரண்டு தொழிற்சாலை: எலக்ட்ரிக் வாகனம் மற்றும் அதன் பேட்டரி உற்பத்தி வளாகத்திற்காகக் கட்டாக்கில் ரூ.25,000 கோடி முதலீடு செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மீதமுள்ள ரூ.15,000 கோடியை பிரதீப்பில் உள்ள EV உதிரிப்பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைக்காக முதலீடு செய்யப்படும்.
4 மெகா தொழிற்சாலை திட்டம்: இதைத் தொடர்ந்து JSW குழுமம் பிப்ரவரி 15 ஆம் தேதி சுமார் 65,000 கோடி ரூபாய் முதலீட்டில் ஒடிசாவின் ஜகத்சிங்பூரில் ஸ்டீல் ஆலை, மின் உற்பத்தி நிலையம், துறைமுக வசதி மற்றும் சிமென்ட் ஆலையை அமைக்க உள்ளதாக வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
ஸ்டீல் ஆலை: JSW குழுமம் புதிதாக அமைக்க உள்ள ஸ்டீல் ஆலை வருடத்திற்குச் சுமார் 13.2 மில்லியன் டன் ஸ்டீல் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது மற்றும் 30,000 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
துறைமுகம் மற்றும் ஜெட்டி திட்டம்: இதைத் தொடர்ந்து JSW குழுமம் உருவாக்கும் துறைமுகம் மற்றும் ஜெட்டி திட்டம் மூலம் வருடம் 52 மில்லியன் டன் சரக்குகளைக் கையாளும் எனத் தெரிகிறது.
சிமென்ட் ஆலை: சிமென்ட் ஆலை 10 மில்லியன் டன் சிமெண்ட் உற்பத்தி செய்ய முடியும், அதே நேரத்தில் இரும்பு தாது-வின் ஸ்லரி போக்குவரத்து அமைப்பு ஆண்டுக்கு 30 மில்லியன் டன்களைக் கையாளும் திறன் கொண்டிருக்கும்.
டாடா குழுமம்: அசாமில் உள்ள கவுகாத்தி பல்கலைக்கழகத்தில் டிஜிட்டல் இந்தியா-வின் எதிர்காலத் திறன் உச்சி மாநாட்டில் பேசிய ராஜீவ் சந்திரசேகர், அசாமில் விரைவில் ரூ.25,000 கோடி மதிப்பிலான செமிகண்டக்டர் பேக்கேஜிங் ஆலை டாடா எலக்ட்ரானிக்ஸ் தொடங்க உள்ளது எனத் தெரிவித்தார்.
மத்திய அரசு: அசாமில் செமிகண்டக்டர் அலை அமைப்பது குறித்த டாடா குழுமத்தின் விண்ணப்பம் தற்போது இது மதிப்பீடு செய்யப்பட உள்ளது என ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்தார்.
அசாம் முதல்வர் ஹிமந்தா: டாடா எலக்ட்ரானிக்ஸ் சுமார் ரூ.40,000 கோடி முதலீட்டில் மாநிலத்தில் செமிகண்டக்டர் அவுட்சோர்ஸ் செமிகண்டக்டர் அசெம்பிளி மற்றும் டெஸ்ட் (OSAT) அமைப்பதற்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பித்துள்ளதாக அசாம் முதல்வர் ஹிமந்தா சர்மா கூறிய இரண்டு மாதங்களுக்குப் பிறகு ராஜீவ் சந்திரசேகர் இதுகுறித்துப் பேசியுள்ளார்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications