உலகின் பணக்கார கோவில்களின் முதலிடத்தில் இருக்கும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD), திருப்பதி ஏழுமலையான் மீது பக்தர்களின் பக்தி மற்றும் தாராள மனதின் காரணமாக 2023 ஆம் ஆண்டில் மட்டும், சுமார் ரூ.773 கோடி மதிப்பிலான 1,031 கிலோ தங்கத்தைக் காணிக்கையாகப் பெற்றுள்ளது.
இது தவிர, இந்த ஆண்டு மட்டும் கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ரூ.1,161 கோடி ஃபிக்ஸட் டெபாசிட் செய்துள்ளது TTD. சரி திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் வருமானம் எப்படி எல்லாம் வருகிறது தெரியுமா..?

திருமலை திருப்பதி தேவஸ்தானம் 2024-2025 ஆம் ஆண்டிற்கான மொத்தம் ரூ.5,141.74 கோடி பட்ஜெட்டுக்கு TTD நிர்வாக குழு ஒப்புதல் அளித்துள்ளது. ஆண்டு பட்ஜெட் ரூ.5,000 கோடியைத் தாண்டியது இதுவே முதல்முறையாகும்.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் வருமானம் எப்படி வருகிறது?
திருமலை திருப்பதி தேவஸ்தானம் 2024-2025 ஆம் நிதியாண்டில் பிரசாத விற்பனை மூலம் ரூ.600 கோடியும், தரிசன டிக்கெட் விற்பனை மூலம் ரூ.338 கோடியும் எதிர்பார்க்கிறது.
ஊழியர்களுக்கான கடன்கள் மற்றும் முன்தொகை, earnest money deposit (EMD), பாதுகாப்பு டெபாசிட்கள் போன்றவற்றின் மூலம் ரூ.246.39 கோடியும், பிற மூலதன வருமானத்தின் மூலம் ரூ.129 கோடியும், ஆர்ஜித சேவா டிக்கெட் விற்பனை மூலம் ரூ.150 கோடியும், திருமண மண்டபம் மற்றும் தங்கும் வசதி வருமானமாக ரூ.147 கோடியும் எதிர்பார்க்கிறது.
மேலும், பல்வேறு டிரஸ்ட் வருமானம் மூலம் ரூ.85 கோடியும், வாடகை, மின்சாரம் மற்றும் பிற வருமானம் மூலம் ரூ.60 கோடியும், சுங்க கட்டணங்கள் போன்ற பல்வேறு வழிகளில் ரூ.74.5 கோடியும், பப்ளிகேஷன் மூலம் ரூ.35.25 கோடியும் சம்பாதிக்கத் திட்டமிட்டுள்ளது.
குறிப்பாக, இந்த ஆண்டு ஹுண்டி வருமானம் ரூ.1611 கோடி இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. வருமானம் என்று இருந்தால் செலவுகள் என இருக்கத்தானே செய்யும், அப்படி திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் முக்கியமான செலவுகள் என்னென்ன தெரியுமா..
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் செலவுகள் என்ன?
கூடுதல் வருமானத்தை ஈட்டுவது மட்டுமல்லாமல், சேவையிலும் சிறந்து விளங்க முயல்கிறது TTD. இதற்காக, ஊழியர் சம்பளம் மற்றும் பிற செலவுகளுக்காக ரூ.1,733 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது, இந்த ஆண்டுக்கான மொத்த ஹுண்டி வருமானத்தை விட ரூ.122 கோடி அதிகம்.
பொருட்கள் கொள்முதல், ரிசர்வ் மற்றும் பிற முதலீடுகளுக்காக ரூ.750 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், பொறியியல் பணிகளுக்காக ரூ.350 கோடி, ஸ்ரீநிவாச சேது பணிகளுக்காக ரூ.53 கோடி, ஸ்விம்ஸ் மருத்துவமனையில் மேற்கொள்ளப்படும் பொறியியல் பணிகளுக்காகவும், ஸ்விம்ஸ் மருத்துவமனைக்கு மானியமாகவும் ரூ.60 கோடி வீதம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதோடு பராமரிப்பு பணிகளுக்காக ரூ.190 கோடி, வசதி மேலாண்மை சேவைகளுக்காக ரூ.80 கோடி, பல்வேறு நிறுவனங்களுக்கு மானியம் வழங்குவதற்காக ரூ.113.5 கோடி, இந்து தர்ம பிரச்சார பரிஷத் நிறுவனத்திற்கு 108.5 கோடி ரூபாய், மின்சார செலவுக்காக 62 கோடி ரூபாய், மாநில அரசுக்காக 50 கோடி ரூபாய் ஆகியவை முக்கிய செலவுகளாக உள்ளது.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!



Click it and Unblock the Notifications