தொழிலதிபர் அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் பவர் குழுமத்தின் ஒரு நிறுவனம் சம்பந்தப்பட்ட ரூ. 68 கோடி மதிப்பிலான போலி வங்கி உத்திரவாத மோசடி வழக்கில், அமலாக்கத்துறை (ED) நேற்று அமர் நாத் தத்தா என்பவரை கைது செய்துள்ளது. இவரை, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ் கைது செய்த அமலாக்கத்துறை, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறது.
பின்னணி என்ன..?: சூரிய சக்தி திட்டங்களை நிர்வகிக்கும் மத்திய அரசின் நிறுவனமான இந்திய சூரிய சக்தி கழகத்திடம் (SECI), ரிலையன்ஸ் பவர் நிறுவனத்தின் துணை நிறுவனமான ரிலையன்ஸ் என்யூ பிஇஎஸ்எஸ் லிமிடெட் என்ற நிறுவனம் ஒரு போலியான வங்கி உத்திரவாதத்தைச் சமர்ப்பித்தது. இதுதான் இந்த வழக்குக்கான அடிப்படை. இந்த உத்திரவாதத்தின் மதிப்பு ரூ.68.2 கோடி ஆகும்.

இந்த மோசடி வழக்கில், ஏற்கனவே ரிலையன்ஸ் பவர் நிறுவனத்தின் முன்னாள் நிதி அதிகாரி (CFO) அசோக் குமார் பால் மற்றும் ஒடிசாவைச் சேர்ந்த பிஸ்வால் டிரேடிலிங்க் என்ற நிறுவனத்தின் உரிமையாளர் பார்த்த சாரதி பிஸ்வால் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த பிஸ்வால் டிரேடிலிங்க் என்ற நிறுவனம்தான், தொழில் நிறுவனங்களுக்கு போலியான வங்கி உத்திரவாதங்களை கமிஷன் வாங்கிக்கொண்டு தயார் செய்து கொடுக்கும் வேலையைச் செய்து வந்தது என்று அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது.
போலி பெயரில் வங்கி உத்திரவாதம் : இந்த மோசடி பற்றி டெல்லி காவல்துறையின் பொருளாதாரக் குற்றப்பிரிவு (EOW) நவம்பர் 2024-ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்ததன் அடிப்படையில் அமலாக்கத்துறை விசாரணைக்கு வந்தது. ரிலையன்ஸ் என்யூ பிஇஎஸ்எஸ் லிமிடெட் நிறுவனம் சமர்ப்பித்த வங்கி உத்திரவாதம், பிலிப்பைன்ஸில் உள்ள ஃபர்ஸ்ட் ரேண்ட் வங்கி மூலம் வழங்கப்பட்டதாக காட்டப்பட்டது. ஆனால், உண்மையில் அந்த வங்கிக்கு பிலிப்பைன்ஸில் கிளையே இல்லை என்பது விசாரணையில் தெரியவந்தது.
மேலும், மோசடி செய்த பிஸ்வால் நிறுவனம், நாட்டின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கியின் (SBI) மின்னஞ்சல் முகவரியைப் போலவே தோன்றும் s-bi.co.in என்ற போலியான மின்னஞ்சல் முகவரியை உருவாக்கி, தாங்கள் உண்மையிலேயே பெரிய வங்கி மூலம் தகவல் அனுப்புவது போல் நம்ப வைத்ததாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
ரிலையன்ஸ் தரப்பின் விளக்கம் : இந்த விவகாரத்தில் தாங்களே பாதிக்கப்பட்டவர்கள் என்று ரிலையன்ஸ் பவர் நிறுவனம் ஏற்கனவே தெரிவித்துள்ளது. இது ஒரு மோசடி, போலியான ஆவணங்கள் உருவாக்கப்பட்ட செயல் என்று கூறி, சம்பந்தப்பட்ட 3-வது மூன்றாவது நபர் மீது தாங்களே அக்டோபர் 2024-ல் டெல்லி காவல்துறையில் புகார் அளித்ததாகவும் நிறுவனம் விளக்கம் கொடுத்துள்ளது.
முன்னதாக, அனில் அம்பானி, ரிலையன்ஸ் பவர் நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் இருந்து விலகி மூன்றரை ஆண்டுகள் ஆகிவிட்டதாகவும், இந்த வழக்கில் அவருக்கு எந்தச் சம்பந்தமும் இல்லை என்றும் ரிலையன்ஸ் குழுமம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!

3 வாரத்தில் சின்னாபின்னமான துபாய் ரியல் எஸ்டேட்.. தள்ளுபடி விற்பனை ஆரம்பம்.. இந்த ஏரியாவில் தடாலடி விலை சரிவு



Click it and Unblock the Notifications