இந்தியாவின் மிகப்பெரிய டிஜிட்டல் கல்வி சேவை நிறுவனமான பைஜூஸ் நிறுவனம் 9,000 கோடி ரூபாய் அளவுக்கு அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தை (FEMA) மீறி நிதி பரிமாற்றம் செய்துள்ளதாக அமலாக்கத் துறை கண்டறிந்துள்ளது என்று தகவல் வெளியானது.
பைஜூஸ் நிறுவனம் மற்றும் அதன் நிர்வாகக் குழு கடந்த சில மாதங்களாகப் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு வரும் வேளையில் தற்போது புதிய பிரச்சனையாக FEMA விதிகளை மீறியதாக ஈடி வெளியிட்டு உள்ளது. ஏற்கனவே ஊழியர்கள் பணிநீக்கம், பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்குச் சம்பளத்தை முழுமையாக அளிக்காதது எனப் பல நிர்வாகப் பிரச்சனைகளையும் எதிர்கொண்டு வருகிறது.

அமலாக்கத் துறையின் அறிவிப்பு இன்னும் பைஜூஸ் நிறுவனத்திற்கு அனுப்பப்படவில்லை, ஆனால் இது தொடர்பாக விரைவில் ஒரு அறிக்கையை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இதேபோல் அமலாக்கத் துறையிடம் இருந்து எந்த அறிவிப்பும் வரவில்லை, மேலும் 9,000 கோடி ரூபாய் அளவுக்கு அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தை (FEMA) மீறியதாக வந்த செய்திகளையும் பைஜூஸ் மறுத்துள்ளது. அமலாக்கத் துறையிடம் இருந்து இதுவரையில் எந்த அறிக்கையும் பெறவில்லை என்றும் பைஜூஸ் சார்பில் விளக்கம் கொடுத்துள்ளது.
2011 மற்றும் 2023 க்கு இடையில் பைஜூஸ் நிறுவனத்தில் செய்யப்பட்ட முதலீடுகளை அமலாக்கத் துறை ஆராய்ந்து வருகிறது. பைஜூஸ் ஸ்டார்ட்அப் நிறுவனம் பெறப்பட்ட முதலீடுகள் மற்றும் வெளிநாடுகளுக்கு நிதி பரிமாற்றம் குறித்த அந்நியச் செலாவணி விதிகளை மீறியதாகக் கூறப்படும் விசாரணையின் ஒரு பகுதியாக, ஏப்ரல் மாதம் பைஜூஸ் நிறுவனத்திற்கு சொந்தமான பல இடங்களில் அமலாக்க துறை சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
மேலும் பைஜூஸ் நிறுவனம் தற்போது கார்ப்பரேட் விவகார அமைச்சகம் (எம்சிஏ) மற்றும் ஜிஎஸ்டி உளவுத்துறை இயக்குநரகம் (டிஜிஜிஐ) கண்காணிப்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications