மும்பை: இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரராக இருப்பவர் முகேஷ் அம்பானி. இவருடைய சகோதரர் தான் அனில் அம்பானி. ரிலையன்ஸ் குழுமத்தில் ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்த ஒரு நபராக இருந்தார் . இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரராகவும் திகழ்ந்தார். ஆனால் தொழிலில் நஷ்டம் அடைந்து அவர் திவால் நிலைக்கு சென்றார் .
அனில் அம்பானி: அனில் அம்பானிக்கு சொந்தமான நிறுவனங்கள் பெரும் சரிவில் இருந்து மீண்டு படிப்படியாக வளர்ச்சி பாதையை நோக்கி திரும்பி வருகின்றன. இந்த சூழலில் திடீரென அனில் அம்பானிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அனில் அம்பானி வீடு மற்றும் அவருக்கு சொந்தமான நிறுவனங்கள் அதன் அலுவலகங்கள் என 50க்கும் அதிகமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

கடன் மோசடி: யெஸ் வங்கியில் கடன் வாங்கி மோசடி செய்ததாக அனில் அம்பானி மற்றும் அவருடைய நிறுவனங்கள் மீது சிபிஐ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது. இதன் அடிப்படையில் தான் தற்போது அமலாக்கத்துறை சோதனை நடத்தப்படுகிறது. கடந்த 2017ஆம் ஆண்டு முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் யெஸ் வங்கியில் அனில் அம்பானிக்கு சொந்தமான நிறுவனங்களுக்கு 3 ஆயிரம் கோடி ரூபாய் கடனாக வழங்கி இருக்கிறது .
லஞ்சம் கொடுத்ததாக புகார்: இந்த கடன் தொகையை வாங்கிய நோக்கத்திற்காக பயன்படுத்தாமல் மற்ற ஷெல் நிறுவனங்களுக்கும் , நிறுவனத்தின் மற்ற அமைப்புகளுக்கும் மாற்றி விட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. செபி, பேங்க் ஆஃப் பரோடா என பல அமைப்புகள் மோசடி நிகழ்ந்ததை உறுதி செய்து புகார் அளித்துள்ளன. அதன் படி அமலாக்கத்துறையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில் யெஸ் வங்கியின் அதிகாரிகள் மற்றும் அதன் பிரமோட்டோர்களுக்கு அனில் அம்பானி லஞ்சம் கொடுக்கப்பட்டதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் கண்டறியப்பட்டு இருக்கிறதாம்.
கடன் வழங்கியதில் மோசடி: மேலும் அனில் அம்பானி மற்றும் அவருடைய நிறுவனங்களுக்கு யெஸ் வங்கியில் கடன் ஒப்புதல் வழங்குவதற்கான நடைமுறைகளில் பல்வேறு மோசடிகள் நடந்திருப்பதை அதிகாரிகள் கண்டறிந்துள்ளன. மோசமான நிதி நிலைமையில் இருக்கக்கூடிய நிறுவனத்திற்கு எப்படி இவ்வளவு பெரிய கடன் தொகையை வழங்கினார்கள் என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அனில் அம்பானி தரப்பில் இதற்காக யெஸ் வங்கி பிரமோட்டர்களுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
மோசடியாளரா அனில் அம்பானி?: அனில் அம்பானி மற்றும் அவருடைய நிறுவனங்கள் மட்டுமில்லாமல் 25 நபர்களும் அமலாக்கத்துறையின் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். சில வாரங்களுக்கு முன்னர் தான் எஸ்பிஐ வங்கி அனில் அம்பானி கடன் வாங்கி மோசடி செய்துவிட்டார் என கூறி அவரை மோசடியாளர் என அறிவித்தது. இந்நிலையில் யெஸ் வங்கியில் கடன் வாங்க லஞ்சம் கொடுத்தது, கடனை முறைகேடாக பயன்படுத்தியது என்பன உள்ளிட்ட புகாரில் அனில் அம்பானி சிக்கி இருக்கிறார்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?



Click it and Unblock the Notifications