உலகை அச்சுறுத்திய கொரோனா வைரஸ் பரவல், இந்திய கல்வி அமைப்பில் பெரிய மாற்றம் ஏற்படுவதற்கு காரணமாக அமைந்தது. கொரோனா காலத்தில், இணைய வழி கல்வி வழங்கும் கல்வி தொழில்நுட்ப (Ed-tech)ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் எழுச்சி கற்பித்தல் என்பதை மிகப்பெரிய சந்தையாக மாற்றியிருக்கிறது.
இந்தியாவில் பிரபலமான Ed-tech ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் ஒன்று அன்அகாடமி. இந்த நிறுவனத்தின் ஆரம்பம் கொஞ்சம் வித்தியாசமானது. நண்பர்களின் கூட்டு முயற்சியால் ஒரு யூடியூப் சேனல் Ed-tech நிறுவனமாக மாற்றப்பட்டது.

2015ல் கவுரவ் முன்ஜால், ஹேமேஷ் சிங் மற்றும் ரோமன் சைனி ஆகியோரால் அன்அகாடமி தொடங்கப்பட்டது. கவுரவ் முன்ஜாலின் யூடியூப் சேனல் ஹேமேஷ் சிங் மற்றும் ரோமன் சைனியின் கூட்டு முயற்சியால் கல்வி தொழில்நுட்ப நிறுவனமாக மாற்றப்பட்டது.
தற்போது நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை தொழில்நுட்ப அதிகாரியுமான ஹேமேஷ் சிங், நேரு நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆ.ப் டெக்னாலஜியில் பி.டெக். முடித்தவர். மேலும் அன்அகாடமியை நிறுவுவதற்கு முன் ஃப்ளாட்சாட் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக பணியாற்றினார்.
2022ம் ஆண்டு நிலவரப்படி, அன்அகாடமியின் மதிப்பு சுமார் ரூ.26,000 கோடியாக இருந்தது. கடந்த ஆண்டில் அன்அகாடமியின் தலைமை நிர்வாக அதிகாரியான கவுரவ் முஞ்சால் ரூ.1.58 கோடி ஊதியம் பெற்று இருந்தார்.
ஹேமேஷ் சிங் ரூ.1.19 கோடியும், மூன்றாவது இணை நிறுவனரான ரோமன் சைனி ரூ.88 லட்சமும் சம்பளம் பெற்றனர். இருப்பினும் 2023ம் ஆண்டில் மந்தநிலை மற்றும் பணிநீக்கங்கள் காரணமாக நிறுவனர்களுக்கு 25 சதவீதம் ஊதிய குறைப்பு அறிவிக்கப்பட்டது.
யூடியூப் வாயிலாக யு.பி.எஸ்.சி. தேர்வுகளுக்கு தயாராகும் ஆயிரக்கணக்கான ஐ.ஏ.எஸ். ஆர்வலர்களுக்கு அன்அகாடமி மிகவும் உதவியாக உள்ளது. இந்நிறுவனத்தின் நோக்கம் கல்வியை ஜனநாயகப்படுத்துவது மற்றும் பொருளாதார பின்னணியை பொருட்படுத்தாமல் அனைவருக்கும் தரமான கல்வி கிடைக்க செய்வது.
மாணவர்கள் சிறந்த கல்வியாளர்களுடன் தொடர்பு கொள்ளவும், நேரலை வகுப்புகளில் கலந்து கொள்ளவும் மற்றும் பெரிய அளவிலான ஆய்வு புத்தகங்களின் நூலகத்தை அணுகவும் ஒரு தளத்தை வழங்குகிறது. அன்அகாடமியின் வெற்றி, கல்வித்துறையை மாற்றியமைப்பதில் தொழில்நுட்பம் மற்றும் புதுமையின் சக்திக்கு ஒரு ஆதாரம்.
More From GoodReturns

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

டிசிஎஸ் நாசிக் அலுவலகத்தில் நடந்தது என்ன? மஃப்டியில் வேலை செய்த மகளிர் போலீஸின் ஷாக் ரிப்போர்ட் !!



Click it and Unblock the Notifications