மத்தியப் பிரதேச மாநிலத்தில் தெருவோரத்தில் முட்டை விற்று ஒருவர் பிழைப்பு நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் அவருடைய பெயரில் நடந்த ரூ. 50 கோடி மதிப்பிலான பரிவர்த்தனைக்கு விவரம் கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதை பார்த்த அந்த வியாபாரிக்கு ஒன்றுமே புரியவில்லை. ஏனெனில் தினமும் கிடைக்கும் பணத்தை வைத்து இந்த வியாபாரி குடும்பத்தை நடத்தி வந்துள்ளார். இவர் ரூ.50 கோடி மதிப்பிலான பரிவர்த்தனையை செய்யவே இல்லை. அதன் பின்னர் தான் இது மோசடிக்காரர்களின் வலை என்பது தெரியவந்தது.
மோசடி எப்படி நடந்தது?: மோசடிக்காரர்கள் முதலில் முட்டை வியாபாரியின் பெயரில் பெறப்பட்ட பான் கார்டு, ஆதார் கார்டு போன்ற முக்கியமான அடையாள ஆவணங்களின் விவரங்களை திருடியுள்ளனர். இந்த விவரங்களை வைத்துக்கொண்டு டெல்லியில் "பிரின்ஸ் என்டர்பிரைசஸ்" என்ற ஒரு போலியான நிறுவனத்தையே தொடங்கியுள்ளனர். இந்த நிறுவனத்தை 2022-ஆம் ஆண்டு டிசம்பர் 7-ஆம் தேதி அன்று பதிவு செய்தது போல காண்பித்துள்ளனர். அதோடு அங்கு லெதர், மரம் மற்றும் இரும்பு போன்றவற்றை அவர் விற்பனை செய்வதாக காண்பித்துள்ளனர்.

ஆனால் பிரின்ஸ் சுமன் என்ற பெயரைக் கொண்ட முட்டை வியாபாரிக்கு தனது பெயரில் தொடங்கப்பட்ட நிறுவனம் குறித்து ஒன்றுமே தெரியாது. 2023-ஆம் ஆண்டின் மார்ச் 20-ஆம் தேதி அன்று வருமான வரி சட்டம் 1961 பிரிவு 133 (6)-இன் கீழ் வருமானவரித் துறையிடமிருந்து நோட்டீஸ் வந்திருந்தது.
இது 2022 முதல் 2023-ஆம் நிதியாண்டில் அவர் 49.24 கோடி மதிப்பிலான பரிவர்த்தனையை மேற்கொண்டதாக கூறி வந்திருந்தது. அதில் அவர் வங்கி அறிக்கைகள் மற்றும் பிற ரசீதுகளை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. அரசுக்கு இதன் மூலம் சரக்கு மற்றும் சேவை வரியாக ரூ.6 கோடி செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
பிரின்ஸ் சுமனுக்கு இவ்வளவு பெரிய பரிவர்த்தனை நடந்திருப்பதை பார்த்து பதற்றம் ஏற்பட்டது. உடனே வழக்கறிஞர்கள் மற்றும் அரசு அலுவலகங்களை நோக்கி விரைந்தார். வழக்கறிஞர் ஒருவர் அவருடைய பான் கார்டு மற்றும் ஆதார் கார்டை பயன்படுத்தி 2022-ஆம் ஆண்டு டிசம்பர் 7-ஆம் தேதி அன்று டெல்லியில் ஒரு நிறுவனம் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று அவரிடம் கூறினார்.
அப்போது பிரின்ஸ் சுமன் "தான் ஒரு தள்ளுவண்டி கடையில் முட்டை வியாபாரம் செய்து வருவதாகவும், டெல்லியில் நிறுவனத்தை தொடங்குவது இருக்கட்டும்.. நான் டெல்லிக்குச் சென்றதே இல்லை" என்று கூறியுள்ளார்.
மோசடிக்காரர்கள் பிரின்ஸ் என்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு ஜிஎஸ்டி நம்பர் பெற்றுள்ளனர். அதோடு கோடிக்கணக்கிலான பரிவர்த்தனைகளை மேற்கொண்டுள்ளனர். மோசடி நபர்கள் பின்னர் அந்த நிறுவனத்தை மூடியுள்ளனர். இந்நிலையில் அப்பாவி முட்டை வியாபாரி புதிதாக தனக்கு வந்த பிரச்சினையை தீர்க்க அலைந்து திரிந்து வருகிறார். தற்போது அவர் பத்தாரியா காவல் நிலையம், சைபர் செல் மற்றும் நரசிங்பூரில் உள்ள வருமான வரி அதிகாரிகளிடமும் சென்று புகார் அளித்துள்ளார்.
அதேபோல மற்றொரு வழக்கில் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஜூஸ் விற்பனையாளர் ஒருவருக்கு 7.5 கோடி செலுத்த சொல்லி வருமான வரி அறிவிப்பு வந்திருந்தது. இந்த அறிவிப்பை கண்டு அதிர்ச்சி அடைந்த ரஹீஸ் என்ற ஜூஸ் விற்பனையாளர் தனது பெயரில் 2020 முதல் 2021-ஆம் ஆண்டில் கோடிக்கணக்கான பரிவர்த்தனைகள் செய்யப்பட்டிருப்பதை கண்டுபிடித்தார். அதன் பின்னர் முட்டை வியாபாரியை போலவே இவரும் ஐடி அதிகாரிகளை அணுகியுள்ளார்.
சமீபகாலமாக லட்சக்கணக்கான ரூபாயை மக்களிடம் ஏமாற்றி வந்த கும்பல் தற்போது ஒரு நிறுவனத்தையே தொடங்கும் அளவிற்கு துணிந்து விட்டனர். எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்து வருகிறோம். எனவே உங்களுடைய தனிப்பட்ட தகவல்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். வங்கி விவரங்கள், அக்கவுண்ட் நம்பர் போன்றவற்றை யாரேனும் கேட்டால் அது மோசடியாக இருக்கலாம் என்பதை உணர்ந்து நடந்து கொள்ளுங்கள்.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications