சென்னை: பக்ரீத் பண்டிகையை (Eid al-Adha) முன்னிட்டு, இந்திய பங்குச்சந்தை (BSE & NSE) ஜூன் 17, 2024 செயல்படாது. இதன் மூலம் வார இறுதி விடுமுறை உடன் திங்கட்கிழமையும் சேர்த்து மொத்தம் 3 நாட்கள் பங்குச்சந்தை தொடர் விடுமுறையாக உள்ளது.
இந்த 3 நாள் விடுமுறை பங்குசந்தை முதலீட்டாளர்களின் ஸ்டிரெஸ்-க்கு விடுமுறை அளிக்கப்படுவதால் மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இன்று பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பங்குச்சந்தை விடுமுறை அட்டவணை 2024ன் படி இன்று பங்கு (equity), டெரவேட்டிவ் (derivatives), கடன் பத்திரங்கள் (SLB) உள்ளிட்ட அனைத்து பிரிவுகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியப் பங்குச்சந்தையில் பங்கு வர்த்தகம் நாளை (ஜூன் 18, செவ்வாய்க்கிழமை) மீண்டும் தொடங்கும். அதேபோல், இந்தியப் பல்பொருள் சரக்கு சந்தை (MCX) காலை வர்த்தக நேரத்தில் இயங்காது. மாலை வர்த்தகம் மட்டும் இயங்கும், அதாவது மாலை 5:00 மணி முதல் இரவு 11:55 மணி வரை இயங்கும்.
2024 ஆம் ஆண்டுக்கான பங்குச்சந்தை விடுமுறை அட்டவணையின்படி, ஜூன் மாதத்தில் இன்று (ஜூன் 17) மட்டுமே விடுமுறை உள்ளது. அடுத்த விடுமுறை ஜூலை 17 ஆம் தேதி முஹர்ரம் பண்டிகைக்காக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு மொத்தம் 15 நாட்கள் பங்குச்சந்தை விடுமுறை உள்ளது.
முஹர்ரம் (ஜூலை 17), சுதந்திர தினம் (ஆகஸ்ட் 15), மகாத்மா காந்தி ஜெயந்தி (அக்டோபர் 2), தீபாவளி (நவம்பர் 1), குருநானக் ஜெயந்தி (நவம்பர் 15), கிறிஸ்துமஸ் (டிசம்பர் 25) ஆகிய பண்டிகைகள் மற்றும் விழாக்களுக்காக இந்த ஆண்டு பங்குச்சந்தை விடுமுறைகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை (ஜூன் 14) முடிந்த பங்குச்சந்தை வர்த்தகத்தில், சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 50 குறியீடுகள் உயர்வுடன் முடிவடைந்தன. ஆட்டோமொபைல், நுகர்பொருள் மற்றும் நிதி நிறுவனப் பங்குகளின் அதிகரிப்பால் இந்த உயர்வு பதிவானது.
மும்பை பங்குச்சந்தை (BSE) சென்செக்ஸ் குறியீடு 181.87 புள்ளிகள் (0.24%) உயர்ந்து 76,992.77 என்ற புள்ளியில் நிறைவடைந்தது. தேசிய பங்குச்சந்தை (NSE) நிஃப்டி 50 குறியீடு 66.70 புள்ளிகள் (0.29%) உயர்ந்து 23,465.60 என்ற புள்ளியில் நிறைவடைந்தது. வெள்ளிக்கிழமை வர்த்தகத்தின் போது, நிஃப்டி 50 குறியீடு 23,490.40 என்ற புதிய உச்சத்தைத் தொட்டது குறிப்பிடத்தக்கது.
நிஃப்டி மிட்கேப் 100 (Nifty Midcap 100) 1.05 சதவீதமும், நிஃப்டி ஸ்மால்கேப் 100 (Nifty SmallCap 100) 0.8 சதவீதமும் உயர்ந்து முன்னணி நிறுவனப் பங்குகளைவிடச் சிறப்பாகச் செயல்பட்டன.
More From GoodReturns

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!



Click it and Unblock the Notifications