நாட்டின் 2வது பெரிய தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனமான ஏர்டெல் நிறுவனத்தின் தலைவர் சுனில் பார்தி மிட்டல். பிரபல தொழிலதிபரும், கோடீஸ்வரருமான இவரை பற்றி அறியாதவர்கள் இருக்க வாய்ப்பில்லை, அப்படியே இருந்தாலும் சொற்பமான அளவில் இருக்கக்கூடும்.
நாட்டில் 35 கோடிக்கும் அதிகமான மக்கள் இவரது ஏர்டெல் நெட்வொர்க்கை தான் பயன்படுத்தி வருகின்றனர். அதே சமயம் சுனில் பார்தி மிட்டலின் மகளும், கவின் பார்தி மிட்டலின் சகோதரியுமான ஈஷா பார்தி பாஸ்ரிச்சா பற்றி பலரும் அறிந்திருக்கவாய்ப்பில்லை.

புலிக்கு பிறந்தது பூனையாகாது என்ற பழமொழி உண்டு, அது யாருக்கு பொருந்துதோ இல்லையோ ஈஷா பார்தி பாஸ்ரிச்சாவுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். தந்தையை போல் மகளும் வர்த்தகத்தில் கலக்கி வருகிறார்.
ஈஷா பார்தி பாஸ்ரிச்சா ஒரு லைஃப் ஸ்டைல் முதலீட்டாளராக உள்ளார். பேஷன் பிராண்டான ரோக்சாண்டா மற்றும் தொழில்நுட்ப அழகு வர்த்தக நிறுவனமான பியூட்டி ஸ்டாக் போன்ற பல பிராண்டுகளில் ஈஷா பார்தி முதலீடு செய்துள்ளார்.
ஈஷா பார்தி பாஸ்ரிச்சா ஸ்காட்லாந்தில் பிறந்தாலும் இந்தியாவில் வளர்ந்தவர். அவர் தனது குழந்தை பருவத்தில் ஸ்காட்லாந்தில் தாத்தா பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்தார். இங்கிலாந்தில் உள்ள செல்டென்ஹாம் பெண்கள் கல்லூரியில் ஈஷா பார்தி பாஸ்ரிச்சா படித்தார்.
மேலும், பாத் பல்கலைக்கழகத்தில் அரசியல், இத்தாலியன் மற்றும் பிரஞ்சு ஆகிய மொழிகளில் பட்டம் பெற்றார். 2009ல் லண்டனை சேர்ந்த இந்திய வம்சாவளி தொழிலதிபர் ஷரன் பாஸ்ரிச்சாவுக்கும் ஈஷா பார்திக்கும் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.
ஷரன் பாஸ்ரிச்சா என்னிஸ்மோர் என்ற லைஃப் ஸ்டைல் ஹாஸ்பிடாலிட்டி நிறுவனத்தை நடத்தி வருகிறார். ஷரன் பாஸ்ரிச்சா- ஈஷா பார்தி தம்பதியினருக்கு 2 குழந்தைகள் (ஆண் 1, பெண் 1) உள்ளனர்.
வர்த்தகத்தில் எவ்வளவு பிசியாக இருந்தாலும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களில் ஈஷா பார்தி ஆக்டிவாக இருந்து வருகிறார். தனது பர்சனல் மற்றும் தொழில் சார்ந்த படங்களை அவற்றில் அடிக்கடி பகிர்ந்து கொள்கிறார். இன்ஸ்டாகிராமில் இவருக்கு 27 ஆயிரம் பாலோயர்கள் உள்ளனர். பார்தி அறக்கட்டளையின் அறங்காவலர் குழுவின் உறுப்பினராகவும் உள்ளார்.


Click it and Unblock the Notifications