மற்றொரு ஆன்லைன் மோசடி வழக்கில் சிக்கி உடுப்பியைச் சேர்ந்த 80 வயதான முதியவர் ஒருவர் தனது சேமிப்பு கணக்கில் இருந்த 3 லட்சம் ரூபாயை இழந்துள்ளார். இதற்கு முன்னர் நாம் பார்த்த மோசடி சம்பவங்களில் தெரியாத நபர்களிடம் இருந்து அழைப்பு வந்து.. அதன் பிறகு மோசடிக்காரர்களின் வலையில் சிக்கிய பலரின் கதைகளைப் பார்த்தோம். ஆனால் இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட முதியவர் தாமாகவே சென்று மோசடிக்காரர்களின் வலையில் விழுந்துள்ளார்.
பாதிக்கப்பட்ட முதியவர் தனது சேமிப்பு கணக்கில் இருந்த 3 லட்ச ரூபாயை எடுப்பதற்காக கூகுளில் வங்கி மேலாளரின் கான்டக்ட் நம்பரை தேடியுள்ளார். அப்போதுதான் இந்தச் சம்பவம் அரங்கேறியுள்ளது. பிரம்மவரில் வசிக்கும் பாதிக்கப்பட்ட முதியவர் கனரா பேங்க்கில் கணக்கு வைத்துள்ளார். இவர் தனது சேமிப்பு கணக்கில் இருந்து பணத்தை எடுக்க முயன்றுள்ளார். முதியவர் தான் பணம் எடுக்கப் போவது குறித்த விவரங்களை வங்கிக்கு முன் கூட்டியே தெரிவிக்க வேண்டும் என்பதற்காக கூகுளில் மேனேஜரின் நம்பரை தேடியுள்ளார்.

அப்போது கூகுளில் அவருக்கு நிறைய ரிசல்ட்ஸ் வந்துள்ளது. அதில் தான் கணக்கு வைத்திருக்கும் வங்கியின் பிரான்ச் மேனேஜர் நம்பர் என்று நினைத்து ஒரு நம்பரை கண்டுபிடித்துள்ளார் மேலும் அந்த நம்பர் உண்மையானது என்று நினைத்து அதற்கு உடனடியாக டயலும் செய்தார். அந்த அழைப்பை எடுத்த மற்றொரு நபர்.. முதலில் காலை துண்டித்துள்ளார்.
சிறிது நேரத்திற்கு பிறகு அழைப்பாளர் பிரான்ச் மேனேஜரை போல காண்பித்துக் கொண்டு பாதிக்கப்பட்ட முதியவரை மீண்டும் தொடர்பு கொண்டதாக கூறப்படுகிறது. அழைப்பு விடுத்தது மட்டுமல்லாமல் பாதிக்கப்பட்ட முதியவருக்கு வீடியோ காலும் செய்துள்ளார். ஹிந்தியில் பேசிய அந்த நபர் பாதிக்கப்பட்டவரை பணம் எடுக்கும் கோரிக்கையை தொடர ஒரு லிங்கை கிளிக் செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார். உடனே அந்த முதியவரும் இது ஒரு அதிகாரப்பூர்வ செயல்முறை என்று நினைத்துக் கொண்டு மோசடிக்காரர்கள் சொன்ன விஷயங்களுக்கெல்லாம் இணங்கியுள்ளார்.
அதன்படி அவர்கள் அனுப்பிய லிங்கையும் கிளிக் செய்துள்ளார். அவர் கிளிக் செய்த உடனேயே அவருக்கே தெரியாமல் அந்த லிங்க் அவரை ஒரு தீங்கிழைக்கும் இணையதளத்திற்கு அழைத்துச் சென்றுள்ளது. அந்த இணையதளத்திற்குச் சென்ற சில நிமிடங்களிலேயே பாதிக்கப்பட்டவரின் வங்கி கணக்கில் இருந்து ரூ. 3 லட்சம் எடுக்கப்பட்டது.
நான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பாதிக்கப்பட்ட முதியவர் உடனடியாக உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர்கள் ஐடி சட்டத்தின் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆன்லைனில் கான்டக்ட் நம்பரை தேடி மக்கள் பணத்தை இழந்த செய்தி இது முதல் முறையல்ல. சில வாரங்களுக்கு முன்பு இதே போன்ற சம்பவம் ஒன்று நடந்தது. ஸ்ரேயா மித்ரா என்ற இன்ஸ்டாகிராம் பயனர் ஹோட்டல் முன்பதிவு செய்ய முயன்ற போது மோசடிக்காரர்களிடம் சிக்கி 93,000 ரூபாயை இழந்தார்.
எனவே கூகுளில் தேடும் போது நீங்கள் தேடும் ரிசல்ட்களின் உண்மை தன்மை குறித்து ஆராய்ச்சி செய்யுங்கள். அதோடு ஹோட்டல்கள் அல்லது பிற விஷயங்களுக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்யும்போது அதிக தொகையை செலுத்தச் சொன்னால் யோசித்து முடிவெடுங்கள்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications