2024 ஆம் ஆண்டு நடுக்கும் பொதுத்தேர்தலுக்கு ஒரு முன்னோட்டமாகப் பார்க்கப்படும் இந்த 5 மாநில தேர்தல் முடிவுகள், பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கும் மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. தெலுங்கானா, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மிசோரம் மாநிலத்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நவம்பர் 7-ந் தேதி முதல் நவம்பர் 30-ந் தேதி வரை பல்வேறு கட்டங்களாக நடைபெற்றது.
இந்த நிலையில் இன்று காலை முதல் தெலுங்கானா, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 4 மாநிலத்திற்காக வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் வேளையில், மிசோரம் வாக்கு எண்ணிக்கை நாளை ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. இன்று காலையில் தபால் ஓட்டு, வீட்டில் இருந்தே போடப்படும் வாக்குகளைக் கணக்கிடும் பணிகள் முடித்துவிட்டுத் தற்போது வாக்கு இயந்திர கணக்கீடு துவங்கப்பட்டது.

தெலுங்கானா, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 4 மாநிலத்தின் தேர்தல் முடிவுகள் மிகவும் முக்கியமாகப் பார்க்கப்படும் வேளையில் பிரபல பங்குச்சந்தை முதலீட்டு வல்லுனரான பிஆர் சுந்தர் தனது டிவிட்டரில் பங்குச்சந்தை மற்றும் தேர்தல் முடிவுகள் குறித்தும் முக்கியமான பதிவைச் செய்துள்ளார்.
பிஆர்.சுந்தர் தனது X பதிவில் 5 மாநில தேர்தலில் பிஜேபி வெற்றி அடைந்தால் பங்குச்சந்தை உயரும், இதுவே காங்கிரஸ் வெற்றி அடைந்தால் பங்குச்சந்தை 2 மடங்கு உயரும் எனத் தெரிவித்துள்ளார். பிஆர்.சுந்தர் தனது X பக்கத்தில் டிசம்பர் 1 ஆம் தேதி செய்த இந்தப் பதிவு சுமார் 5 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களை ஈர்த்து, 5400 பேர் லைக் செய்துள்ளனர். இதேபோல் பல காரசாரமான விவாதமும் நடந்துள்ளது.
பலர் காங்கிரஸ் வெற்றி அடைந்தால் பங்குச்சந்தை சரியும் என்றும், இன்னும் சிலர் யார் வெற்றி அடைந்தாலும் இந்திய பங்குச்சந்தை கட்டாயம் சரியும் எனவும், பிஜேபி வெற்றி அடைந்தால் தான் பங்குச்சந்தை முதலீடுகள் 2 மடங்கு உயரும் எனவும் கமெண்ட் பதிவிட்டு உள்ளனர்.
இதில் Techsa எனப் பெயர் கொண்ட ஒரு கணக்கில் இருந்து காங்கிரஸ் வெற்றிபெற்று எந்த வருடம் பங்குச்சந்தை உயர்ந்தது எனச் சொல்ல முடியுமா எனக் கேள்வி கேட்டார். அதற்குப் பிஆர். சுந்தர் 2009ல் வெற்றியின் போது நிஃப்டி 20 சதவீதம் வரையில் உயர்ந்தது எனத் தெரிவித்தார்.
11 மணி நிலவரத்தின் படி தெலுங்கானாவில் மொத்தம் 119 தொகுதிகளில் காங்கிரஸ் 62 இடங்களில் முன்னிலையிலும், மத்திய பிரதேசத்தில் மொத்தம் 230 தொகுதிகளில் பிஜேபி 156 இடங்களில் முன்னிலையிலும், ராஜஸ்தானில் மொத்தம் 199 தொகுதிகளில் பிஜேபி 109 இடங்களில் முன்னிலையிலும், சட்டிஸ்கரில் மொத்தம் 90 தொகுதிகளில் பிஜேபி 57 இடங்களில் முன்னிலையிலும் உள்ளது.
4 மாநிலத்தில் 3 மாநிலத்தில் பிஜேபி முன்னிலையில் உள்ளது, தெலுங்கானாவில் ஆட்சியில் இருக்கும் பிஆர்எஸ் கட்சி பின்னடைவை சந்தித்து வருகிறது, இதனால் ஆட்சி மாற்றத்திற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
More From GoodReturns

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை



Click it and Unblock the Notifications