திங்கட்கிழமை வர்த்தக உயர்வுக்கு எக்ஸிட் போல் பெரும் பலமாக இருந்த நிலையில், இன்று பங்குச்சந்தை சரிவுக்கு நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் முக்கிய காரணமாக உள்ளது. எக்ஸிட் போல் முடிவுகளுக்கும், முதல் மற்றும் 2ஆம் கட்ட வாக்கு எண்ணிக்கைக்கும் பெரிய வித்தியாசம் இருக்கும் காரணத்தால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிகளவிலான பங்குகளை விற்பனை செய்யத் துவங்கியுள்ளனர்.
இதில் முக்கியமாக நரேந்திர மோடி போட்டியிட்ட வாரணாசி தொகுதியில் பின்னடைவு ஏற்பட்டு உள்ளது என்று தேர்தல் ஆணையத்தின் முதல் மற்றும் இரண்டாம் கட்டத்தில் வாக்கு எண்ணிக்கையில் தரவுகள் காட்டும் வேளையில் பங்குச்சந்தையால் இதை ஏற்றுக்கொள்ள முடியாமல் திணறுகிறது.

வாரணாசி தொகுதியில் காங்கிரஸ் மாநில தலைவரான அஜய் ராய் 14489 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார். நரேந்திர மோடி 9583 வாக்குகள் பெற்று பின்னடைவில் உள்ளார். இருவருக்கும் கிட்டத்தட்ட 5 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் உள்ளனர். இது பங்குச்சந்தையில் நேரடியாக எதிரொலித்துள்ளது, ஆனால் அடுத்த சில நிமிடத்தில் மோடி 619 வாக்குகள் உடன் முன்னிலை வகித்தார்.
திங்கட்கிழமை வர்த்தகத்தில் காலை வர்த்தகம் துவங்கும் போதே 2000 புள்ளிகளுக்கு அதிகமாகத் துவங்கிய நிலையில், செவ்வாய்க்கிழமை தலைகீழாக 2000 புள்ளிகள் சரிவுடன் துவங்கியது. மேலும் மோடி முன்னிலை வகிக்கத் துவங்கிய உடனும், 272-க்கு 176 இடத்தில் NDA கூட்டணி முன்னிலை வகித்த நிலையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயரத் துவங்கியது.
சென்செக்ஸ் குறியீடு 1,600 புள்ளிகளுக்கு மேல் குறைந்து,ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் முன்னணி வங்கி பங்குகளால் அதிகளவில் பாதித்துள்ளது. காலை 10:20 மணி நிலவரப்படி, பிஎஸ்இ சென்செக்ஸ் 1459 புள்ளிகள் அல்லது 1.89% குறைந்து 75,000.61 ஆக இருந்தது. நிஃப்டி 50 குறியீடு 453.90 புள்ளிகள் அல்லது 1.95% குறைந்து 22,810 புள்ளிகளில் வர்த்தகமானது. இந்தியா VIX இன் வால்டிலிட்டி இன்டெக்ஸ் 20% உயர்ந்து 25 ஆக அதிகரித்தது.
இதற்கிடையில், பிஎஸ்இயில் அனைத்து பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சந்தை மூலதனம் ரூ.8.78 லட்சம் கோடி குறைந்து ரூ.417.13 லட்சம் கோடியாக உள்ளது.
சென்செக்ஸ் குறியீட்டில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கி மட்டும் சுமார் 565 புள்ளிகள் சரிவுக்கு பங்களித்தன, அதே நேரத்தில் எல்&டி, எஸ்பிஐ, ஐடிசி, என்டிபிசி மற்றும் பவர் கிரிட் ஆகியவை குறியீட்டை மோசமான நிலைக்கு இழுத்துச் சென்றது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!



Click it and Unblock the Notifications