2024 பொது தேர்தல் ஜூன் 1 ஆம் தேதி உடன் முடிந்து இத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அதே நாளில் தேர்தல் முடிவுகளும் வெளியாக உள்ள நிலையில் பங்குச்சந்தை அதிகப்படியான தடுமாற்றத்தை எதிர்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் மக்களவைத் தேர்தல் முடிவில் ஆளும் கட்சியான பாஜக 290-300 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைத் தக்கவைக்கும் என்று கருதி, அடுத்த ஓராண்டில் முதலீட்டாளர்களைப் பணக்காரர்களாக்கக்கூடிய 21 பங்குகளின் பட்டியலை பிலிப் கேபிடல் என்ற தரகு நிறுவனம் அளித்துள்ளது.

பொதுவாக ஆட்சி மாற்றத்தின் போதும், புதிய ஆட்சி அமையும் போதும் முதலீட்டுச் சந்தையில் தடுமாற்றம் ஏற்படும். இதில் முக்கியமாக பிஜேபி 10 ஆண்டுகள் ஆட்சி செய்த நிலையில் பங்குச்சந்தை வரலாற்று உச்சத்தில் உள்ளது. இப்படியிருக்கும் போதும் ஆட்சி மாற்றம் என்றால் பங்குச்சந்தை 30 சதவீதம் வரையில் சரிய வாய்ப்புகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் அடுத்த ஒரு வருடத்தில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு லாபத்தை அள்ளித்தரப்போகும் 21 பங்குகளைப் பட்டியலிடப்பட்டு உள்ளது பிலிப் கேபிடல் நிறுவனம்.
21 பங்குகளை பட்டியலிட பிலிப் கேபிடல் அடிப்படையாக எடுத்துக்கொண்ட ஒரு விஷயம் தேர்தல் முடிவுகள், 2024 பொது தேர்தலில் பாஜகவுக்கு 290-300 இடங்களையும், NDA கூட்டணிக்கு 330-340 இடங்களையும் பெற்றுள்ளது என்ற கணிப்பின் அடிப்படையில் இந்த பங்குகள் பட்டியலிடப்பட்டு உள்ளது.
"கணிப்பின்படி நடந்தால், பங்குகள், நிறுவனத்தின் வருவாய்கள் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றில் சாதகமான மற்றும் நீண்ட கால நிலையான வளர்ச்சிக்கு அடித்தளமிடப்படும். பிஜேபி அரசின் கொள்கைகள் தொடர்ந்து செயல்படுத்தப்படும்". இதன் மூலம் ஆட்டோமேஷன், EV, பாதுகாப்பு, ரயில்வே, தளவாடங்கள், துறைமுகங்கள், சாலைகள், ரியல் எஸ்டேட், உலோகங்கள், சிமெண்ட், எனர்ஜி மற்றும் நிதி ஆகிய துறையில் பாசிட்டிவ் ஆன வளர்ச்சியைப் பதிவு செய்யும் என பிலிப் கேபிடல் தெரிவித்துள்ளார்.
பிஜேபி வெற்றி கணிப்பின்படி பிலிப் கேபிடல் அடுத்த 1 வருடத்தில் அதிகம் லாபம் தரும் பங்குகள் பட்டியலில் உள்ள நிறுவனங்களின் லிஸ்ட்: SBI, BoB, கனரா வங்கி, PFC, REC, ஸ்ரீராம் ஃபைனான்ஸ், முத்தூட் ஃபைனான்ஸ், அல்ட்ராடெக், சீமென்ஸ், ஹீரோ மோட்டோகார்ப், TVS மோட்டார், டிவி'ஸ் லேப்ஸ், சின்ஜீன், APL அப்போலோ, ஜிண்டால் SAW, IGL, ஆர்த்தி இண்டஸ்ட்ரீஸ், வினாதி ஆர்கானிக்ஸ், பிரஜ், கோகல்தா எக்ஸ்போர்ட் மற்றும் SP அப்பாரல்.
இதே பிஜேபி வெற்றி கணிப்பின் படி அடுத்த 3 வருடத்தில் அதிகம் லாபம் தரும் பங்குகள் பட்டியில் உள்ள நிறுவனங்களின் லிஸ்ட்: எச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, எஸ்பிஐ, கோடக் வங்கி, பஜாஜ் ஃபைனான்ஸ், சுந்தரம் ஃபைனான்ஸ், எம்ஏஎஸ் பைனான்சியல், இன்ஃபோசிஸ், எச்சிஎல் டெக், பெர்சிஸ்டண்ட், கேபிஐடி டெக், ரேட்கெய்ன், ரிலையன்ஸ், கெயில், அம்புஜா சிமெண்ட்ஸ், ஜேகே சிமெண்ட், எல்&டி, பார்தி ஏர்டெல், சன் பார்மா, டிவி'ஸ் லேப்ஸ், சின்ஜீன், கோல் இந்தியா, ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், ஜிண்டால் ஸ்டெயின்லெஸ், மாருதி, பாரத் ஃபோர்ஜ், அசோக் லேலண்ட், கான்கார், என்சிசி, பிஎன்சி இன்ஃப்ரா, கேட்வே டிஸ்ட்ரிபார்க்ஸ், எஸ்ஆர்எஃப், ஆர்த்தி இண்டஸ்ட்ரீஸ், நவின் ஃப்ளூரின், பிஐ இண்டஸ்ட்ரீஸ், கோரமண்டல், தனுகா அக்ரிடெக்.
இதேபோல் ப்ளூம்பெர்க் மோடியின் கட்சி எவ்வளவு சிட்டுக்களில் வெற்றிபெற்றால், எவ்வளவு வளர்ச்சி அடையும், சரியும் என்பதை 32 அசர்ட் மேனேஜர்ஸ், டீலர்கள், முதலீட்டாளர்கள் ஆகியோர் ஒன்றாக இணைந்து ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டு உள்ளனது. மேலும் இந்த ஆய்வின் முடிவில் மோடியின் வெற்றியும், தோல்வியும், பங்குச்சந்தை மட்டும் அல்லாமல் ரூபாய் மதிப்பையும் அதிகம் பாதிக்கும் என கணித்துள்ளனர்.
Stock market reaction: மோடி தலைமையிலான கூட்டணி 272 சீட்டுகளுக்குக் குறைவான இடத்தில் வெற்றிபெற்றால் பங்குச்சந்தை 10 சதவீதம் வரையில் சரியும்.
272 இடங்களுக்கு அதிகமாகவும், 303 இடங்களுக்குக் குறைவாகவும் வெற்றிபெற்றால் 2 சதவீதம் வரையில் குறையும்.
இதுவே 303 சீட்டுகளுக்கு அதிகமாக இடத்தில் மோடி தலைமையிலான NDA கூட்டணி வெற்றிபெற்றால் பங்குச்சந்தை 4 சதவீதம் வரையில் உயரும்.
பிஜேபி தலைவர்கள் கூறுவது போல் மோடி தலைமையிலான NDA கூட்டணி 400 சீட்டுகளில் வெற்றிபெற்றால் நிஃப்டி 8 சதவீதம் வரையில் உயரும் என ப்ளூம்பெர்க் செய்த கள ஆய்வில் கணிக்கப்பட்டு உள்ளது.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications