எக்ஸிட் போல் முடிவுகளுக்கும் இன்றைய வாக்கு எண்ணிக்கைக்கும் பெரிய வித்தியாசம் இருக்கும் வேளையில், இனி வரும் காலத்தில் எக்ஸிட் போல்-ஐ நம்பக்கூடாது என முடிவுக்குப் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் தள்ளப்பட்டு உள்ளனர்.
தற்போது 3ஆம் சுற்று வாக்கு எண்ணிக்கை பல மாநிலங்களில் துவங்கியிருக்கும் வேளையில் NDA கூட்டணி 288 இடங்களிலும், இந்தியா கூட்டணி 231 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது. இதில் 1000 வாக்குகள் வித்தியாசத்தில் பிஜேபி சுமார் 60-85 இடத்தில் முன்னிலையில் உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் பிஜேபி தலைமையிலான என்டிஏ கூட்டணி இந்த தேர்தலில் வெற்றி வாய்ப்புகளைத் தக்க வைத்துக்கொள்ளுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. இதேவேளையில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு பிஜேபி பெரும்பான்மை உடன் ஆட்சி அமைக்க வேண்டும் இல்லையெனில் உள்நாட்டு முதலீட்டாளர்கள் முதல் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வரையில் அதிகளவிலான பங்குகளை விற்பனை செய்யப்படும் என முன்கூட்டியே கணிக்கப்பட்டு இருந்த நிலையில் இன்று சொல்லி வைத்தார் போல் நடந்துள்ளது.
தேர்தல் முடிவுகள் அப்டேட் ஆகிக்கொண்டு இருக்கும் வேளையில் சுமார் 11.15 மணியளவில் மும்பை பங்குச்சந்தையில் தடாலடியாக சரிந்தது. யாரும் எதிர்ப்பாக்காத வகையில் சென்செக்ஸ் 4100 புள்ளிகள் வரையில் சரிந்து இந்திய பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் சுமார் ரூ.26 லட்சம் கோடி வரையிலான இழப்பைச் சந்தித்தனர்.
இதன் மூலம் முந்தைய நாள் முடிவின் போது கிட்டத்தட்ட ரூ.426 லட்சம் கோடியாக இருந்த மும்பை பங்குச்சந்தையில் (BSE) பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சந்தை மூலதனம் (mcap) கிட்டத்தட்ட ரூ.400 லட்சம் கோடியாக சரிந்ததுள்ளது.
ஆனால் 12.30 மணி அளவில் சென்செக்ஸ் குறியீடு 6000 புள்ளிகள் வரையில் சரிந்து மும்பை பங்குச்சந்தையின் மொத்த சந்தை மதிப்பு 36 லட்சம் கோடி ரூபாய் வரையில் சரிந்துள்ளது.

மோடி தலைமையிலான NDA கூட்டணி தோல்வி அடைந்தால் என்ன ஆகும் எனண ஏற்கனவே கணிக்கப்பட்டது போல் சென்செக்ஸ் குறியீட்டின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் நுகர்வோர் மற்றும் பார்மா துறை பங்கள் மட்டும் உயர்ந்துள்ளது. 30 நிறுவனங்கள் பட்டியலில் ஹிந்துஸ்தான் யூனிலீவர், சன் பார்மா, நெஸ்லே, ஏசியன் பெயின்ட்ஸ், ஹெச்சிஎல் டெக், டிசிஎஸ் ஆகியவை மட்டும் உயர்வில் உள்ளது.
தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில், முதலீட்டாளர்கள் கவலைப்படத் தொடங்கினர். எக்ஸிட் போல் முடிவுகளில் கணிக்கப்பட்டதை விட தேர்தல் முடிவுகள் கடுமையாக இருக்கும் காரணத்தால், பங்கு விலைகள் கீழே இறங்கத் தொடங்கின. மேலும், உலகளாவிய சந்தைகளில் நிலவும் தடுமாற்றமும் இந்திய பங்குச்சந்தையை பாதித்தது.
இந்த வீழ்ச்சியால் அனைத்து துறை பங்குகளும் பாதிக்கப்பட்டன. ஐடி, நிதி, உற்பத்தி உள்ளிட்ட முக்கிய துறைகளின் பங்குகள் கடுமையாகச் சரிந்தன. சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நிறுவனங்களின் பங்குகள் பெரும்பாலும் அதிக பாதிப்பைச் சந்தித்து வருகிறது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications