இந்திய பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் பங்குச்சந்தையில் முதலீட்டு அளவு சாதனை அளவை எட்டி பலரையும் வியக்க வைத்துள்ளது.
தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரை பங்குச் சந்தையில் ஏற்ற இறக்கம் இருந்தபோதிலும், ரீடைல் முதலீட்டாளர்கள் அதைக் கண்டுகொள்ளாமல் முதலீடு செய்துள்ளனர்.

இந்திய முதலீட்டு நிதி சங்கம் (AMFI) வெளியிட்டுள்ள தகவல்களின்படி, கடந்த மே மாதம் மியூச்சுவல் ஃபண்டுகளிஸ் முதலீட்டாளர்கள் சுமார் ரூ.34,700 கோடி (அதாவது $4.2 பில்லியன்) நிதியை முதலீடாகப் பெற்றுள்ளனர். இதன் மூலம் இந்திய மியூச்சுவல் பண்ட் துறையில் தொடர்ச்சியாக 39வது மாதமாக முதலீடு அதிகரித்து வருகிறது.
பாரம்பரிய முதலீடுகளான ஃபிக்ஸட் டெபாசிட் (Fixed Deposit) மற்றும் கடன் பத்திரங்கள் (Bonds) போன்றவற்றை விட பங்குச் சந்தையில் கிடைக்கும் லாபம் அதிகமாக இருப்பதால், தனிநபர் ரீடைல் முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையை நோக்கி அதிகம் வருகின்றனர்.
தேர்தலுக்குப் பிறகு நிலையான அரசாங்கம் அமைவதில் உள்ள சந்தேகம் பங்குச் சந்தையில் ஏற்ற இறக்கத்தை அதிகரித்த போதும், இந்த முதலீடு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் மோடி தலைமையில் கூட்டணி முறையில் ஆட்சி அமைந்த பின்பு இன்று பங்குச்சந்தை நிலையான வர்த்தகத்தைப் பதிவு செய்துள்ளது.
மே மாத தரவுகள் படி மாதாந்திர தொடர் முதலீட்டுத் திட்டங்கள் (Monthly Recurring Investment - SIP) சில்லறை முதலீட்டாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான முதலீட்டு முறையாக இருந்து வருகிறது. இதன் மூலம், கடந்த மாதம் பங்குச் சந்தையில் சுமார் 2.5 பில்லியன் டாலர் முதலீடு குவிந்துள்ளது.
இந்தியாவில் குடும்பங்களின் சேமிப்பு குறைந்து வருவதாக சமீபத்திய தகவல்கள் வெளியாகி வந்தாலும், திட்டமிட்ட முதலீட்டுத் திட்டங்களில் மக்களின் முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன என்று இந்திய முதலீட்டு நிதி சங்கத்தின் தலைமை செயல் அதிகாரி வெங்கட் சலாசனி தெரிவித்தார்.
மே மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட ஹெச்.டி.எஃப்.சி உற்பத்தி நிதி (HDFC Manufacturing Fund) ரூ.9,500 கோடிக்கும் மேற்பட்ட சப்ஸ்கிரிப்ஷன்களை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications