சென்னை: பல கோடி மக்கள் பயன் பெறும் வகையில் உள்ள மத்திய அரசின் பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டம் பற்றியும் அதன் பலன்கள் மற்றும் முக்கியத்துவம் ஆகியவற்றை இந்த பதிவில் பார்ப்போம்.
2015 ஆம் ஆண்டு, ஏப்ரல் 8 ஆம் தேதி பிரதமர் மோடி அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது தான் இந்த பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டம். இந்த திட்டத்தின் மூலம் தொழில் தொடங்க விரும்பும் அனைவரும் நிதியுதவி பெற முடியும். அந்த வகையில் சுமார் ரூ. 10 லட்சம் வரை இந்த திட்டத்தின் கீழ் கடன் பெறலாம். எந்தவித அடமானமும் இன்றி இந்த பிரதான் மந்திரி முத்ரா திட்டத்தின் கீழ் கடன் பெற முடியும். ஆனால் இந்தத் திட்டத்தினை பெரிய கார்ப்பரேட் நிறுவனமோ அல்லது விவசாயம் சார்ந்த தொழில் செய்பவர்களோ பயன்படுத்த முடியாது.

மேலும் மத்திய அரசு இந்த திட்டத்தினை அனைவருக்கும் பயன்பெறும் வகையில் வழங்கியதற்கு முக்கிய காரணம் சாமானிய மக்களும் பெரிய தொழில் முனைவோராக மாற வேண்டும் என்பதற்காகத்தான். வேலை வாய்ப்பை பெற காத்திருக்காமல் தாமாக முன்வந்து தொழில் செய்யும் நபராக மாற்றக்கூடிய இத்திட்டத்தினை அனைத்து வணிகர்களும் தங்களது தொழில் சிறிய தொழிலாக இருந்தாலும் அதனை மேம்படுத்த இந்த நிதியுதவியை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த திட்டத்தின் மூலம் மூன்று வகைகளில் கடன் கொடுக்கப்படுகிறது.
அவை சிஷு(Shishu), கிஷோர், தருண் என மூன்று வகைகளாக உள்ளன. சிஷு திட்டத்தின் மூலம் ரூபாய் 50,000 வரை கடன் பெற முடியும். கிஷோர் திட்டத்தின் மூலம் ரூபாய் 5,000 முதல் ரூ.5 லட்சம் வரை கடன் பெற முடியும். தருண் திட்டத்தின் மூலம் ரூபாய் 5 லட்சம் முதல் 10 லட்சம் வரை கடன் பெற முடியும். இந்த பிரதான் மந்திரி முத்ரா திட்டத்தின் கீழ் லோன் பெற நீங்கள் வணிக வங்கிகள், தனியார் வங்கிகள், பொதுத்துறை வங்கிகள், கிராமப்புற வங்கிகள் மற்றும் வங்கி சாராத நிதி நிறுவனங்களுக்கு சென்று பெற முடியும்.
வேறு எங்கு கடன் கேட்டாலும் ஏதாவது பொருளையோ அல்லது பத்திரத்தையோ கொடுத்து கடன் வாங்கும் காலத்தில், இந்த திட்டத்தின் மூலம் நீங்கள் எந்தவிதமான அடமானமும் இல்லாமல் கடன் பெற முடியும். இதற்கு நீங்கள் தக்க ஆவணங்களோடு இணைத்து தந்தால் போதுமானது, சான்றாக எதிர்காலத்தில் வரும் வருமான கணிப்புகள் தொடர்பான சில ஆவணங்களை வங்கிகளில் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் லோன் வாங்க நீங்கள் குறிப்பிட்ட வங்கிகளுக்கு சென்று விண்ணப்ப படிவங்களை பெற வேண்டும். அந்த விண்ணப்பத்தினை தக்க ஆவணங்களோடு பூர்த்தி செய்து, வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும். குறிப்பாக அடையாள சான்று, போட்டோ, நேட்டிவிட்டி சான்றுகள் மற்றும் உங்கள் தொழிலுக்கு வாங்கிய இயந்திரம் அல்லது உபகரணங்கள் ஆகியவற்றின் ரசீதுகள் உள்ளிட்ட சான்றுகளை சேர்த்து சமர்ப்பிக்க வேண்டும். மேலும் வங்கிகள் இதனை சரிபார்த்து ஒரு மாதத்திற்குள் கடன் வழங்கப்படும்.
பலன்கள்: இந்த பிரதான் மந்திரி முத்ரா திட்டத்தின் சிறப்பம்சம், நீங்கள் வாங்கிய மொத்த கடன் தொகைக்கும், வட்டி செலுத்த தேவையில்லை. மாறாக, முத்ரா கார்டு மூலம் நீங்கள் எவ்வளவு தொகை செலவழித்து உள்ளீர்களோ.. அந்தத் தொகைக்கு மட்டும் வட்டி செலுத்தினால் போதுமானது.
யாரெல்லாம் கடன் பெற தகுதியுடையவர்கள்?: முத்ரா திட்டத்தின் கீழ் கடன் பெற இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். இதற்கு முன் அவர்கள் ஏதேனும் கடன், வங்கிகளில் வாங்கி இருந்தால், அவற்றை சரிவர செலுத்தி இருக்க வேண்டும். கடன் பெறும் நபர் 18 வயதை பூர்த்தி செய்து இருக்க வேண்டும். விவசாயம் மற்றும் கார்ப்பரேட் தொழில் முனைவோர்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் கடன் பெற இயலாது.
ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை: முத்ரா திட்டத்தின் கீழ் கடன் பெற அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும். அதில் சிஷு, கிஷோர், தருண் என மூன்று வகையான லோன்கள் இருக்கும். அதில் உங்களுக்கு தேவையான லோன் என்ன என்பதை புரிந்து ஏதேனும் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். இப்பொழுது வெப்சைட் வேறு பக்கத்திற்கு உங்களை அழைத்துச் செல்லும். அங்கு இருக்கும் விண்ணப்பத்தை டவுன்லோட் செய்ய வேண்டும். அதன் பின் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்ய வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தோடு தேவைப்படும் மற்ற ஆவணங்களான ஆதார் கார்டு, பான் கார்டு, பாஸ்போர்ட், போட்டோ மற்றும் இதர தேவைப்படும் ஆவணங்கள் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு பக்கத்தில் இருக்கும் முத்ரா திட்டத்தை வழங்கும் வங்கிகளுக்கு சென்று கொடுக்கவும்.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications