டெல்லி: சமீபகாலமாக சைபர் குற்றவாளிகள் பல பிரச்சனைகளை ஆன்லைன் பரிவர்தனைகளில் ஏற்படுத்தி வருகின்றனர். கவனமாக இருந்தாலும், உங்கள் கணக்கிலிருந்து பணத்தைத் திருடுவதற்கான புதிய வழிகளையும் கண்டுபிடித்து கொண்டிருக்கின்றனர். அதற்கு சான்றாக பொறியியல் பட்டதாரி ஒருவர் 36 லட்சத்தை இந்த மோசடி கும்பலில் சிக்கி இழந்துள்ளார்.
இது போன்ற மோசடி கும்பல்கள், நீங்கள் செலவுகளே செய்யாமல் இருந்தாலும் கூட உங்கள் அக்கௌன்ட் இல் இருந்து பணம் எடுக்கும் வித்தைகளை அறிந்தவர்கள். இந்த மோசடிகளை பற்றி அறியாதவர்ளை ஏமாற்றுவது எளிது. ஆனால் படித்த நபர்களும் இந்த மோசடிகளில் சிக்கி பணத்தை இழக்கிறார்கள் என்பது ஆச்சரியமாக இருக்கிறது சிந்திக்கக்கூடியதாகவும் உள்ளது.

இந்த இணைய மோசடி நெட்வொர்க் என்பது உங்கள் கணக்கிலிருந்து பணத்தை எடுப்பது மற்றும் உங்கள் கணக்கை காலி செய்வதற்காக உங்களிடமிருந்து OTPகளைப் பெறுவது ஒரு ஸ்டைல். அல்லது அவர்கள் உங்களுக்கு மெசேஜ்களை அனுப்பி அதில் உள்ள லிங்கை கிளிக் செய்யும்படி கேட்கலாம். இது இன்னொரு ஸ்டைல்.
ஆனால், புது விதமான மோசடி கும்பல், ஒன்று உங்கள் கணக்கில் இருந்து திருட பங்குச் சந்தை முதலீடுகள் போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துகின்றனர். இந்த சைபர் க்ரைம் திருடர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள். அவ்வாறு பணம் திருடும் மோசடி கும்பலிடம் சிக்கி ரூபாய் 36 லட்சத்தை இழந்த பொறியியல் பட்டதாரி ஒருவர் கவனம் பெற்றுள்ளார்.
தும்கூரின் திப்பட்டூரைச் சேர்ந்த பொறியாளர் லிகித் பட்டீல், பங்குச் சந்தையைப் பற்றி அறியாதவர். சைபர் குற்றவாளிகளால் ஏமாற்றப்பட்டு 36 லட்சத்தை இவர் தொலைத்துள்ளார் .லிகித் இன்ஸ்டாகிராமில் ஒரு லிங்கை பார்த்துள்ளார். அந்த லிங்க் மூலம் பங்குச் சந்தை முதலீடுகள் குறித்த வழிகாட்டுதலை வழங்குவதாகக் கூறும் வாட்ஸ்ஆப் குழு ஒன்றில் சேர்ந்துள்ளார்.
இந்தக் குழுவில், எந்தப் பங்குகளில் முதலீடு செய்ய வேண்டும், எப்போது நுழைய வேண்டும் அல்லது வெளியேற வேண்டும் என்பது பற்றிய தகவல்கள் வாட்ஸ்ஆப் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. வாட்ஸ்ஆப் இல் சேர்ந்த பிறகு, லிகித் குழுவின் உறுப்பினருடன் தனிப்பட்ட முறையில் சாட் செய்ய தொடங்கியுள்ளார்.
லிகித்துக்கு பங்குச் சந்தை பற்றித் தெரியாது என்பதைத் தெரிந்து கொண்ட சைபர் க்ரைம் குற்றவாளி, படிப்படியாக லட்சக்கணக்கான ரூபாயை லிகித் மூலம் குற்றவாளியின் கணக்கில் டெபாசிட் செய்ய வைத்துள்ளார். பின்னர், லிகித் சந்தேகமடைந்து பணத்தைத் திரும்பக் கேட்டபோது, குற்றவாளி மறுத்து பேசியுள்ளார். சந்தேகமடைந்த லிகித், தான் சேர்ந்த வாட்ஸ்அப் குழுவின் நிறுவனத்திடம் தனது பணத்தைத் திருப்பித் தருமாறு கோரினார்.
ஆனால் அந்த நிறுவனத்திடம் இருந்து அதற்கான பதில் எதுவும் வரவில்லை, தான் ஒரு மோசடியில் சிக்கி பணத்தை இழந்ததை உணர்ந்த லிகித் காவல் நிலையம் சென்றார். இதேபோல், பலர் இதுபோன்ற மோசடிகளுக்கு பலியாகிய பின்னர் தங்கள் இழப்புகளை காவல்துறையிடம் தெரிவிக்கின்றனர்.
தொலைந்த பணத்தை மீட்பது கடினமாக இருக்கலாம், குறிப்பாக ஆன்லைன் பரிவர்த்தனைகளை கையாளும் போது நிதி விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை இந்த சம்பவம் எடுத்துக்காட்டுகிறது. மேலும் இது போல் ஆன்லைன் பரிவர்த்தனைகள் மூலம் பணத்தை இழந்தால் 7 நாட்களுக்குள் காவல் துறையை அணுகி வழக்கு பதிவு செய்ய வேண்டும்
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications