ஒவ்வொரு நிறுவனமும் தங்களது தயாரிப்புகளின் விற்பனையை அதிகரிக்க பல புதுப்புது சலுகைகளை அறிவித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக மிடில் கிளாஸ் மற்றும் லோயர் மிடில் கிளாஸ் மக்களை கவரும் வகையில் அதிகப்படியான சலுகைகளை அறிவிக்கப்படுகிறது.
குலாப்ஜாமூன் பாக்கெட் ஒன்று வாங்கினால் மற்றொரு பாக்கெட் இலவசம்... பாசுமதி அரிசி பாக்கெட்டுக்கு 50 சதவீதம் அதிரடி தள்ளுபடி... மூன்று டிரஸ் வாங்கினால் அதன் சராசரி விலைக்கு கூடுதலாக இரண்டு டிரஸ் இலவசம்... ஒரு டிவி வாங்கினால் அதற்கு டிடிஎச் இணைப்பு ஓராண்டுக்கு இலவசம்... 100 கிராம் விலையில் 150 கிராம் டூத்பேஸ்ட்டை வாங்கிக்கோங்க... என்று இப்படியெல்லாம் சலுகைப்பட்டியல்கள் நீண்டுகொண்டே இருப்பதை விளம்பரங்களில் பொதுமக்கள் பார்த்திருக்கக்கூடும்.

மக்களுக்கு எப்போதுமே இலவசம் என்றால் அது ஒரு கொசுறுவாக இருந்தாலும் போதும். இந்த சைக்காலஜியை தயாரிப்பு நிறுவனங்கள் நன்றாகவே உணர்ந்து வைத்துள்ளன. எனவே இது போன்ற கவர்ச்சி விளம்பரங்களை நம்பி சலுகை உள்ள பொருட்களை தேடிப்பார்த்து வாங்கிச் செல்கின்றனர்.
அப்படியொரு பிரபல சிப்ஸ் கம்பெனியான லேஸ், வழக்கமான விலைக்கு 25 சதவீதம் கூடுதலாக சிப்ஸ் இருக்குமென்று பாக்கெட்டிலேயே அச்சிட்டு விற்பனை செய்தது. அதை நம்பி பாக்கெட்டை வாங்கித் திறந்து பார்த்தால் அதில் வெறும் இரண்டே சிப்ஸ் துண்டுகள் இருந்ததைப் பார்த்த கஸ்டமர் கடும் அதிர்ச்சியடைந்த சம்பவம் நடந்துள்ளது. சிப்ஸை விற்ற கடைக்காரரோ இதுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கைவிரித்துவிட்டார்.
ஏற்கெனவே லேஸ் சிப்ஸ் பாக்கெட் பெரிதாக வாடிக்கையாளர்களுக்கு காட்ட அதிகப்படிடயான காற்று நிரப்பப்பட்டு இருக்கும். பிரித்துப் பார்த்தால் ஒரு கையளவுகூட இருக்காது என்றெல்லாம் கேலி செய்யப்பட்டு உள்ளது. ஆனால் இந்த மேட்டர் ரொம்பவே ஓவர் பாஸ் என்கின்றனர் வாடிக்கையாளர்கள்.
ஒரு கஸ்டமர் ஸ்நாக்ஸ் சாப்பிடுவதற்காக ஒரு லேஸ் சிப்ஸ் பாக்கெட்டை வாங்கியுள்ளார். அதில் 25 சதவீதம் கூடுதல் என்று அச்சிடப்பட்டிருந்தது. வழக்கத்தைக் காட்டிலும் பாக்கெட் எடை லேசாக இருந்ததால் அதை பிரிக்கும்போது விடியோ எடுத்துள்ளோர். திறந்து பார்த்தபோது அதில் வெறும் ரெண்டே சிப்ஸ் மட்டுமே இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இந்த விடியோ இப்போது சமுகதளங்களில் வைரலாகி வருகிறது.
வீடியோவில் அந்த கஸ்டமர் என்னங்க இது வெறும் ரெண்டே சிப்ஸ் தான் இருக்கிறது. இதற்கு 5 ரூபாய் விலையா என்று புலம்புவது கேட்கிறது.
இந்த டகால்டியை உணர்த்துவதற்காக தனது சோசியல் மீடியா பதிவில் லேஸ் இந்தியா மற்றும் பெப்சிகோ நிறுவனங்களை டேக் செய்திருந்தார்.
தனது பதிவில் டியர் @Lays_India @PepsiCoIndia எனது இன்றைய ஸ்நாக் டைம் எதிர்பாராதவிதமாக ஆகிவிட்டது. 5 ரூபாய் விலை கொண்ட கிளாசிக் சால்டடு பேக்கை ஆர்வத்துடன் பிரித்தபோது அதில் வெறும் ரெண்டே சிப்ஸ்கள் மட்டுமே இருந்தன. இது என்ன புதிய ஸ்டாண்டர்டா? ஒரு நம்பிக்கையான கஸ்டமருக்கு இது மிகப் பெரிய ஏமாற்றமாகும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்தப் பதிவுக்கு ஏகப்பட்ட கமெண்ட்கள் குவிந்து வருகின்றன. சிலர் வேடிக்கையாக முழுக்க காற்று நிறைந்த பாக்கெட்டில் இரண்டு சிப்ஸ்கள் இருந்தது ஒரு அதிர்ஷ்டம்தான்... என்றும் வாவ்! அதில் சிப்ஸாவது இருந்ததே... நான் நினைத்தேன் அதில் வாசம் நிறைந்த காற்று மட்டுமே இருந்திருக்கும் என நினைத்தேன். நீங்கள் அதிர்ஷ்டசாலிதான்! என்றும்
நக்கல்களும் நையாண்டிகளும் குவிகின்றன.
அது சரி நீங்கள் எப்படி பாக்கெட்டை பிரிப்பதை விடியோ எடுத்தீர்கள் என்ற கேள்வி எழுந்தபோது அந்த கஸ்டமர், உண்மையில் பாக்கெட்டின் எடை மிகக் குறைவாக இருந்தது. முதலில் அதில் ஒன்றுமே இருக்காது, வெறும் பவுடர்தான் இருக்கும் என்று தான் நினைத்தேன் என்றார்.
வேடிக்கையின் உச்சகட்டமாக ஒரு பதிவர், அந்த கம்பெனி தந்த பிராமிஸ் படி கூடுதல் 25 சதவீதத்தை மட்டுமே நிரப்பியிருப்பார்கள். ஆனால் பாக்கெட்டின் அசல் எடையை மறந்திருக்கலாம் என்று போட்டுத் தாக்கிவிட்டார்.
கடந்த பல காலமாகவே இதுபோன்று பிராண்டு கம்பெனிகளின் பாக்கெட்களில் அடைக்கப்படும் பொருட்களின் அளவுக்கும் அதிலுள்ள விளம்பரத்துக்கும் தொடர்பே இல்லையென்று கூறி எக்கச்சக்கமான மீம்களை போட்டு கழுவிக்கழுவி ஊற்றுகின்றனர்.
இந்த நிலைமையில் இப்போது மீம்ஸ் தாக்குதலுக்கு லேஸ் நிறுவனமும் ஆளாகியுள்ளது. இதை யாரிடம் போய் சொல்வது, தனக்கு லேஸ் சிப்ஸ் கம்பெனி என்ன நிவாரணம் தரப்போகிறது என்று அந்த கஸ்டமர் கேள்விக்குறியுடன் காத்திருக்கிறார்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications