தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு இந்தியாவில் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் ஓய்வு கால நிதி பாதுகாப்பை உறுதி செய்கிறது. சம்பளத்திற்காக வேலைக்கு செல்லக்கூடிய நபர்களுக்கு இபிஎப்ஓ அமைப்பில் பிஎப் கணக்கு தொடங்கப்பட்டு வேலைக்கு செல்லக்கூடிய நபர் மற்றும் அவரை வேலை வாங்கும் நிறுவனம் சார்பாக மாதம் தோறும் ஒரு குறிப்பிட்ட தொகை வரவு வைக்கப்படுகிறது.
பிஎப் கணக்கில் இருக்கக்கூடிய பணத்திற்கு அரசு வட்டியும் வழங்குகிறது. எனவே இந்த நபர்கள் ஓய்வு பெறும்போது பிஎப் கணக்கில் இருக்கக்கூடிய தொகை அவர்களுக்கான நிதி பாதுகாப்பை வழங்கும் .ஆனால் நாடு முழுவதும் பல பிஎப் கணக்குகள் நீண்ட காலமாக செயல்படாமலே உள்ளன. இந்த கணக்குகளில் இருக்கக்கூடிய பணத்தை உரியவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதில் இபிஎப்ஓ அமைப்பு கவனமாக இருக்கிறது.

செயல்படாமல் இருக்கக்கூடிய பிஎப் கணக்குகளை செயல்படுத்தவும் இபிஎப் உறுப்பினர்கள் தங்களுடைய டெபாசிட் பணத்தை பாதுகாப்பாக மீட்டெடுக்கவும் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. பல்வேறு ஊழியர்களும் வேலை மாறுவது அல்லது பழைய கணக்கு தொடர்பான தகவல்களை இழந்தது , வேலையை விட்டே நின்றது உள்ளிட்டவை காரணமாக தங்களுடைய பிஎப் கணக்குகளை செயலற்ற நிலையில் வைத்திருக்கிறார்கள் .இந்த கணக்குகளில் உள்ள வைப்பு தொகைகள் நீண்ட காலத்திற்கு பயன்படுத்தப்படாமல் இருப்பதால் அந்த கணக்கு வைத்திருப்பவர் மற்றும் அவருடைய குடும்பத்தினர் இதில் கிடைக்கக்கூடிய சலுகைகளை பெற முடியாமல் போகிறது.

இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது இபிஎப்ஓ அமைப்பு. எனவே ஒரு புதிய டிஜிட்டல் களம் ஒன்றை உருவாக்குவதாக இபிஎப்ஓ அமைப்பு அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. இந்த தளம் பழைய மற்றும் செயலற்ற பிஎப் கணக்குகளை எளிதில் அடையாளம் கண்டு உரிய நபர்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான ஒரு ஊடகமாக செயல்பட போகிறது.
எனவே பிஎப் கணக்கு வைத்திருப்பவர்கள் தங்களுடைய கேஒய்சி-ஐ புதுப்பிக்கவும் அவர்களின் பணத்தை பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்யவும் இது உதவும். எனவே செயலற்ற பிஎப் கணக்குகளில் கேஒய்சி புதுப்பிக்கப்படவில்லை என்றால் அந்த கணக்குகளில் இருந்து பணத்தை எடுப்பது கடினமானதாக இருக்கும் என தெரிவித்திருக்கிறது.
பிஎப் கணக்கு வைத்திருந்த நபர் இறந்துவிட்டார் அல்லது வேலையில் இருந்தே நின்று விட்டார், அதனால் பல காலமாக கணக்கு செயல்படாமலே இருக்கிறது எனும் போது இந்த டிஜிட்டல் தளத்தின் மூலம் கேஒய்சி தகவல்களை சரி பார்த்து பிஎப் கணக்கில் இருக்கும் பணத்தையும் அதன் மூலம் கிடைக்கும் சலுகைகளையும் எளிதாக பெற முடியும்.
இறந்த நபரின் நாமினிகள் அல்லது வாரிசுகள் அந்த பிஎப் கணக்கில் இருக்கும் பணத்தை எளிதாக எடுத்து பயன்படுத்த இது உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த டிஜிட்டல் தளம் உருவாக்கப்பட்ட உடன் அதற்கான அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் கேஒய்சி அப்டேட் செய்து செயலற்ற கணக்குகளில் இருக்கும் பணத்தை உரியவரிடன் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!



Click it and Unblock the Notifications