UPI-இல் பணம் எடுக்கும் வசதியை டிசம்பரில் அறிமுகம் செய்யும் EPFO! இனி பிஎஃப் பணம் எடுக்க நோ டென்ஷன்!

EPFO அமைப்பு யூபிஐ மூலம் பணம் எடுக்கும் வசதியை அறிமுகம் செய்ய இருப்பது பலரும் அறிந்த தகவல். இந்த புதிய வசதி தற்போது இறுதி கட்டத்தில் இருப்பதாகவும், வருகின்ற டிசம்பர் மாத இறுதிக்குள் செயல்பாட்டிற்கு வரும் என்றும் பைனான்சியல் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. விரைவில் அறிமுகப்படுத்தப்படவிருக்கும் யூபிஐ வசதியின் மூலம் EPF உறுப்பினர்கள் தங்களுடைய PF பணத்தை ஒரு சில நிமிடங்களில் எடுத்து பயன்படுத்தலாம். மேலும் தங்களுடைய பிஎஃப் அக்கவுண்டில் எவ்வளவு பேலன்ஸ் இருக்கிறது என்பதையும் சரி பார்க்கலாம்.

பிஎஃப் உறுப்பினர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பு யூபிஐ மூலம் பணம் எடுக்கும் வசதி. தற்போது இந்த புதிய அம்சத்தின் அனைத்து சோதனைகளும் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளன. டெஸ்டிங் ப்ராசஸ் முடிந்து.. தொழில்நுட்பக் கோளாறுகள் சரி செய்யப்பட்டிருப்பதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

UPI-இல் பணம் எடுக்கும் வசதியை டிசம்பரில் அறிமுகம் செய்யும் EPFO! இனி பிஎஃப் பணம் எடுக்க நோ டென்ஷன்!

யூபிஐ மூலம் எவ்வளவு பணத்தை எடுக்கலாம்?: உறுப்பினர்கள் தங்களுடைய PF பணத்தில் 75% சதவீதம் வரை எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் இதற்கான வரம்பு எவ்வளவு என்பது குறித்து எந்த தகவலும் இன்று வரையில் அறிவிக்கப்படவில்லை. நவம்பர் 19-ஆம் தேதி அன்று நடைபெற்ற வாரியக் கூட்டத்தில் ஈபிஎஃப் அமைப்பு அக்கவுண்டில் குறைந்தபட்சமாக 10 சதவீதம் பேலன்ஸ் இருந்தால் போதும் என்ற முன்மொழிவுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதற்கு முன்னர் வரை குறைந்தபட்சமாக 25 சதவீத பேலன்ஸ் இருக்க வேண்டும் என்ற விதிமுறை இருந்தது. இது குறித்தும் இன்னும் அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

Also Read

இதற்கு முன்னர் வரை பிஎஃப் பணத்தை எடுப்பது என்பது அவ்வளவு எளிதான விஷயமாக இருந்ததில்லை. ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.. பிறகு 10 முதல் 20 நாட்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. ஆனால் இப்போது வரவிருக்கும் யூபிஐ வசதி மூலம் உறுப்பினர்கள் சீக்கிரத்தில் தங்களுடைய பிஎப் பங்களிப்பை எடுத்து பயன்படுத்தலாம்.

தங்கள் பணி ஆண்டுகளில் ஏதேனும் பணத் தேவை இருந்தால் அதை பூர்த்தி செய்யும் வகையில் PF சேமிப்பில் இருந்து பணம் எடுக்கவும்.. EPFO அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு முன்பு வரை 3 முறை பணம் எடுக்கும் விதிமுறை இருந்தது. ஆனால் இப்போது கல்விக்காக நீங்கள் 10 முறையும், திருமண செலவுகளுக்காக 5 முறையும் பணம் எடுக்கலாம்.

EPFO அமைப்பு தொடர்ந்து உறுப்பினர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்து கொண்டே இருக்கிறது. அதன் அடிப்படையில் யுபிஐ சேவைக்கு அடுத்தபடியாக வாட்ஸாப் சேவையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் உறுப்பினர்கள் தங்களுடைய PF பேலன்ஸை தெரிந்து கொள்ளலாம். பாஸ்புக்கை டவுன்லோட் செய்யலாம், கடைசி ஐந்து பரிவர்த்தனை விவரங்களை பார்க்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+