55 வயதை கடந்த EPFO உறுப்பினர்களுக்கு குட் நியூஸ்! இனி மாதத் தவணையில் PF பணத்தை எடுக்கலாம்!

தற்போதைய விலைவாசி உயர்வால் ஒவ்வொரு மாதமும் வரும் செலவுகளை எதிர்கொள்ள முடியாமல் பணி புரியும் ஊழியர்கள் திண்டாடி வருகின்றனர். இவர்களுக்கே இந்த நிலைமை என்றால் வேலையில் இருந்து ஓய்வு பெற்று வீட்டில் இருக்கும் நபர்களை சிந்தித்துப் பாருங்கள். இது போன்ற நபர்களுக்கு ஏற்படும் நிதி நெருக்கடியை கருத்தில் கொண்டு ஈபிஎஃப்ஓ அமைப்பு PF தொகையை சிஸ்டமேட்டிக் வித்டிராவல் பிளான் (SWP) மூலம் எடுக்கும் வசதியை முன்மொழிந்துள்ளது. இந்த வசதி குறிப்பாக ஓய்வு பெறும் உறுப்பினர்களுக்கு பெருமளவில் உதவும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

சிஸ்டமேட்டிக் வித்டிராவல் பிளான் என்றால் என்ன?: இதை ஒரு சின்ன உதாரணத்தோடு பார்ப்போம். இப்போது உங்களிடம் ரூ. 5 லட்சம் PF சேமிப்பு இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். இதை சிஸ்டமேட்டிக் வித்ட்ராவல் பிளான் மூலம் மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையாக எடுத்துக் கொள்ளலாம். ஒவ்வொரு மாதமும் நீங்கள் தேர்ந்தெடுத்த தொகையின் அடிப்படையில் உங்கள் வங்கி கணக்கிற்கு பணம் வந்துவிடும். ஆனால் அதற்கு உங்களிடம் சேமிப்பு இருக்க வேண்டும். மாதாந்திர அடிப்படையில், வருடாந்திர அடிப்படையில் அல்லது காலாண்டுக்கு ஒரு முறை எனை எப்படி வேண்டுமானாலும் பணத்தை எடுக்கலாம்

55 வயதை கடந்த EPFO உறுப்பினர்களுக்கு குட் நியூஸ்! இனி மாதத் தவணையில் PF பணத்தை எடுக்கலாம்!

எப்போது நடைமுறைக்கு வருகிறது?: இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள செய்தியின் படி இந்த திட்டம் அடுத்த 2 மாதங்களுக்குள் செயல்பாட்டுக்கு வரும் வாய்ப்புள்ளது. இதை சட்டப்பூர்வமாக நடைமுறைப்படுத்த மத்திய தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு துறையின் ஒப்புதல் தேவை. இந்த செயல்முறை எல்லாம் முடிந்த பிறகு இந்த திட்டம் பயன்பாட்டிற்கு வர வாய்ப்புள்ளது.

Also Read

SWP எவ்வாறு செயல்படும்?: SWP மூலம் தகுதியுள்ள ஒவ்வொரு ஓய்வூதியதாரரும் தங்களுடைய PF சேமிப்பை மொத்தமாக எடுக்காமல் தவணை முறையில் பிரித்து எடுத்துக் கொள்ளலாம். எடுத்த தொகை போக கணக்கில் மீதம் இருக்கும் தொகைக்கு தொடர்ந்து வட்டி வந்து கொண்டே இருக்கும். ஓய்வு பெற்றவர்கள் தங்களுடைய சேமிப்பை எடுத்து ஒரே முறையாக செலவழித்து விடாமல் அதன் பிறகு வரும் அன்றாட செலவுகளை எதிர்கொள்வதற்காகவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

யாருக்கெல்லாம் பயனளிக்கும்?: ரூ. 5 லட்சத்திற்கும் அதிகமாக PF சேமிப்பு வைத்துள்ள சுமார் 6.32 லட்சம் உறுப்பினர்கள் இந்த திட்டத்தின் மூலம் பயனடைய வாய்ப்புள்ளது. இதுவரையில் EPFO அமைப்பு சுமார் 32 லட்சம் கோடி நிதியை நிர்வகித்து வருகிறது. மேலும் 8 கோடிக்கும் அதிகமான உறுப்பினர்கள் பங்களிப்பு செய்து வருகின்றனர்.

தற்போதைய முன்மொழிவின் அடிப்படையில் பார்க்கும்போது ஓய்வூதியதாரர்களுக்கு இந்த சிஸ்டமேட்டிக் வித் டிராவல் பிளானுக்கு ஒப்புதல் கிடைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. வேலை இழந்த ஊழியர்களுக்கும் இதன் மூலம் பலன் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்த ஆண்டு நாளொன்றுக்கு 642 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளன. 2025-ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 579-ஆக இருந்தது. மார்ச் மாதம் அதிகபட்சமாக 50,404 ஊழியர்கள் வேலை இழந்துள்ளனர். மே மாதத்தில் 34,684 பேர் வேலை இழந்துள்ளனர். வேலைய இழப்பு, திருமணம், குழந்தைகளின் கல்வி என சில விதிமுறைகளுக்குட்பட்டு 75% பிஎப் தொகையை எடுக்கும் வசதி இருக்கிறது. இருந்தாலும் வேலை இழக்கும் ஊழியர்களுக்கும் SWP பிளான் மூலம் பணம் கிடைக்குமா என்ற விவரங்கள் இனிவரும் நாட்களில் வெளியாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+