விஜய் ஜன நாயகன் திரைப்படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்பது விஜய் ரசிகர்களுக்கு பெரும் கேள்வியாக இருக்கும் வேளையில், இந்திய திரையுலகில் இதுவரை இல்லாத அளவுக்கு பிரம்மாண்டமான பாக்ஸ் ஆபிஸ் மோதல் நடக்க உள்ளது.
மார்ச் 19ஆம் தேதி அன்று இரண்டு மெகா படங்கள் திரையரங்கை அசத்த வருகிறது. ரன்வீர் சிங் நடிப்பில் 'துரந்தர்: தி ரிவென்ஜ்' மற்றும் யஷ் நடிப்பில் 'டாக்சிக்: எ ஃபேரிடேல் ஃபார் அடெல்ட்ஸ்' ஆகிய இரு பிரம்மாண்ட படங்கள் ஒரே நாளில் திரையரங்குகளில் வெளியாகின்றன.

இதற்கு முன் தீபாவளி, கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை நாட்களில் பல முக்கிய மற்றும் பெரிய நட்சத்திரங்களின் படங்கள் மோதியிருந்தாலும், 1000 ரூபாய் கோடி வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படும் இரண்டு படங்கள் ஒரே நாளில் வெளியாவது இதுவே முதல் முறை.
துரந்தர் 2: ரன்வீர் சிங்கின் நம்பிக்கை
'துரந்தர்: தி ரிவென்ஜ்' என்பது 2025இல் வெளியான 'துரந்தர்' படத்தின் சீக்வல். ரன்வீர் சிங் நடிப்பில் வெளியான முதல் பகுதி உலகளவில் ரூ.1300 கோடி வசூல் செய்து, அதிக வசூல் செய்த பாலிவுட் படங்களில் இரண்டாவது இடத்தை பிடித்தது. இந்த நிலையில் துரந்தர் படத்தின் சீக்வல் துரந்தர்: தி ரிவென்ஜ் என்ற பெயரிலை வெளியாகும் காரணத்தால் இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பல தரப்பினரும் இது முதல் பகுதியை விட பெரிய வெற்றியை பெறும் எனக் கணிக்கின்றனர்.
டாக்சிக்: யஷின் KGFக்குப் பின் பிரம்மாண்டம்
யஷ் நடிப்பில் வெளியான KGF 2 பாகங்கள் இந்தியா முழுவதும் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது மட்டும் அல்லாமல் கன்னட திரையுலகிற்கு புதிய பரிமானத்தை கொடுத்தது. இந்த நிலையில் யஷ் கேஜிஎப் படங்களுக்கு பின்பு மிகப்பெரிய நம்பிக்கையுடன் நடித்துள்ள படம் டாக்சிக்.
KGF படங்கள் உலகளவில் ரூ.1500 கோடி வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் யஷ்-க்கு கன்னடம், தென்னிந்திய திரையுலகை தாண்டி இந்தியா முழுவதும் பெரும் ரசிகர்கள் பட்டாளம் கிடைத்தது. இதன் வாயிகா டாக்சிக் படமும் பான்-இந்தியா படமாக உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த படம் பெண் இயக்குனரான கிது மோகன்தாஸ் இயக்கியுள்ளார், மேலும் யஷுடன் ஐந்து முன்னணி நடிகைகள் இணைந்திருப்பது இந்த படத்திற்கு தனி ஈர்ப்பை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. முக்கியமாக இப்படம் ஆங்கிலத்திலும் தயாரிக்கப்பட்டு உள்ளது.
ஒரே நாளில் 2 ரூ.1000 கோடி படங்கள்
இரு படங்களும் 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்யும் திறன் கொண்டு இருக்கும் வேளையில், இரு திரைப்படத்தின் தயாரிப்பாளர்களும் விட்டுக்கொடுக்காமல் தங்கள் ரிலீஸ் தேதியை மாற்ற மறுத்துள்ளதால், இந்திய திரையுலகில் பெரும் மோதல் உருவாகியுள்ளது.
வர்த்தக வட்டார மதிப்பீடுகள் மற்றும் PROCAT சினிமா அளவீட்டு கருவியின் படி, இரு படங்களும் வெற்றி படங்களாக அமைந்தால், மொத்தமாக 10 கோடி மக்கள் திரையரங்குகளுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது ரண்வீரின் முந்தைய படமான துரந்தர் மற்றும் யஷின் KGF Chapter 2 ஆகியவை இந்தியாவில் தலா 4 கோடி பார்வையாளர்களை ஈர்த்த நிலையில், தற்போது 10 கோடி என்ற அளவீட்டை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கணிப்பு நனவாகுமானால், அதிக பார்வையாளர்களை ஈர்க்கும் படமாக பாஹுபலி 2-ஐயும் முந்திவிடும். இது இந்திய சினிமாவின் மிகப்பெரிய திருவிழாவாக அமையும்.
இவ்விரு திரைப்படங்கள் ஓரே நேரத்தில் வெளியாகும் காரணத்தால் திரையரங்குகளுக்கு மார்ச் மாதம் ஜாக்பாட் என்றால் மிகையில்லை. குறிப்பாக இந்தியாவின் மிகப்பெரிய திரையரங்க உரிமையாளராக இருக்கும் பிவிஆர்-க்கு இது ஜாக்பாட் என்று தான் சொல்ல வேண்டும்.


Click it and Unblock the Notifications