தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்டங்களுக்கே உரிய சுற்றுலா தளங்கள் இருக்கின்றன. அவற்றை முறையாக மேம்படுத்தினால் சுற்றுலா துறை மேம்பட்டு அது சார்ந்த வாழ்வாதாரங்கள் வளர்ச்சி பெறும். தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் சுற்றுலா துறையை மேம்படுத்துவதற்கு முடிவு செய்து இருக்கிறது.
சிப்காட்: தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான சிப்காட் நிறுவனம் முதன்முறையாக சுற்றுலாத்துறை சம்பந்தப்பட்ட திட்டங்களையும் கையில் எடுக்க இருக்கிறது. சிப்காட்டை பொருத்தவரை வழக்கமாக தொழில் பூங்காக்களை கட்டமைப்பது மேலாண்மை செய்வது என தொழில் சார்ந்த உற்பத்தி துறை சார்ந்த பணிகளை தான் மேற்கொள்ளும். முதன்முறையாக இந்த நிறுவனம் சுற்றுலா துறையிலும் கால் பதிக்க இருக்கிறது.

சுற்றுலாவை மேம்படுத்த திட்டம்: விரைவில் சிப்காட் நிறுவனம் தமிழ்நாட்டில் நான்கு மாவட்டங்களில் சுற்றுலாத்துறை சம்பந்தப்பட்ட கட்டமைப்புகளை கொண்டு வர இருக்கிறது. இதன்படி கள்ளக்குறிச்சி ,கன்னியாகுமரி, தூத்துக்குடி, ஈரோடு ஆகிய நான்கு மாவட்டங்களிலும் சுற்றுலா துறையை மேம்படுத்துவதற்கான கட்டமைப்புகளை சிப்காட் அமைப்பு கொண்டு வர இருக்கிறது. இந்த நான்கு மாவட்டங்களிலும் தங்கும் விடுதிகள் ,சொகுசு விடுதிகள் மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டு பூங்காக்கள், பொழுதுபோக்கு பூங்காக்களை கட்டமைப்பது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
செப்.15க்குள் விண்ணப்பிக்கலாம்: இதில் ஆர்வமுள்ள முதலீட்டாளர்கள் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் சிப்காட் இணையதளம் வாயிலாக விண்ணப்பம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சிப்காட் நிறுவனம் இதற்கான நிலங்களை கையகப்படுத்தி இருக்கிறது, தங்கும் விடுதிகள், பொழுதுபோக்கு பூங்காக்கள் உள்ளிட்டவற்றை கட்ட ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
தொழிற்பூங்காக்கள்: சிப்காட்டை பொருத்தவரை தமிழ்நாட்டில் நான்கு பிரிவுகளில் தொழிற் பூங்காக்களை வெற்றிகரமாக அமைத்து செயல்படுத்தி வருகிறது. சிறுசேரி ,ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம் ,இருங்காட்டுக்கோட்டை, நெமிலி, திருமுடிவாக்கம் ,கும்முடிபூண்டி ,நெப்பேடு ,சூளகிரி , பெருந்துறை, ஓசூர், ராணிப்பேட்டை, மணப்பாறை ,கடலூர் ,கங்கைகொண்டான் என பல்வேறு இடங்களிலும் தொழிற் பூங்காக்களை செயல்படுத்தி வருகிறது.

4 மாவட்டங்களில் திட்டம்: தற்போது சுற்றுலா துறையிலும் கால் பதிக்க இருக்கக்கூடிய சிப்காட் நிறுவனம் அந்தந்த மாவட்ட சுற்றுலா துறையோடு இணைந்து எந்த பகுதிகளில் இந்த பொழுதுபோக்கு பூங்காக்கள் உள்ளிட்டவற்றை அமைத்தால் சுற்றுலாப் பயணிகளுக்கு வசதியாக இருக்கும் என்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறது .கன்னியாகுமரி மாவட்டத்தில் வடக்கு தாமரைக் குளம் .ஈரோடு மாவட்டத்தில் தாளவாடி .கள்ளக்குறிச்சியில் கரியாலூர். தூத்துக்குடியில் மேல விட்டான் ஆகிய நான்கு பகுதிகளிலும் சுற்றுலாத்துறை சம்பந்தப்பட்ட கட்டமைப்புகள் வரை இருக்கின்றன .
பொழுதுபோக்கு பூங்காக்கள்: இங்கே நிலம் உள்ளிட்டவை கட்டுமான பணிகளுக்கு தயாராக இருப்பதாக தெரிவித்திருக்கும் சிப்காட் நிறுவனம் இந்தப் பகுதியில் உணவகங்கள் , தங்கும் விடுதிகள் மற்றும் பொழுதுபோக்கு பூங்காக்களை அமைக்க விரும்புவோர் விண்ணப்பம் செய்யலாம் என அறிவித்திருக்கிறது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!

3 வாரத்தில் சின்னாபின்னமான துபாய் ரியல் எஸ்டேட்.. தள்ளுபடி விற்பனை ஆரம்பம்.. இந்த ஏரியாவில் தடாலடி விலை சரிவு



Click it and Unblock the Notifications