சென்னை: இன்றைய டிஜிட்டல் யுகத்தில், மெயில் (mail) தகவல் தொடர்புக்கு முதன்மையான வழியாக மாறியுள்ளது. பணபரிவர்த்தனைகள் தொடர்பான தகவல்களையும் வங்கிகள் மெயில் வழியாகவே பகிர்ந்து கொள்கின்றன. மெயில் அதிகம் பயன்படுத்தப்படுவதன் காரணமாக, இந்த வசதியான தளம் மோசடி செய்பவர்களுக்கும் களம் அமைத்து விடுகிறது. இதுபோன்ற தகவல் தொடர்பு தளங்களில், மோசடி செய்து பணம் பறிப்பதைத் தடுக்க அவற்றை பாதுகாப்பாக பயன்படுத்துவது முக்கியம். அதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை விவரிக்கிறது இந்தப் பதிவு.
அனுப்புபவரின் முகவரியை சரிபார்க்கவும்: எந்தவொரு மெயில்-ஐ திறப்பதற்கு முன்பும், அனுப்புபவரின் முகவரியை கவனமாக சரிபார்க்க வேண்டும். உங்கள் வங்கி போன்ற அதிகாரப்பூர்வ மெயில் ஐடியில் இருந்து மெயில் வந்திருப்பது போல் தோற்றமளிக்கும் ஐடியில் இருந்து வந்திருந்தால் எச்சரிக்கையாக இருங்கள். தவறாக எழுதப்பட்ட டொமைன் பெயர்கள் அல்லது சந்தேகத்திற்கிடமான பெயர்கள் இருந்தால், அவை போலியானதாக இருக்கலாம். இவை உண்மையிலேயே வங்கியில் இருந்து வந்தது போல தோற்றமளிக்கலாம். எனவே உங்கள் வங்கியின் மெயில் ஐடியை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். எப்பொழுதெல்லாம் உங்களுக்கு மெயில் அனுப்பப்படுகிறதோ, அப்பொழுதெல்லாம் அவற்றைச் சரி பாருங்கள்.

அவசரத்திலும் ஜாக்கிரதை: பெரும்பாலும் மோசடி செய்பவர்கள் ஏமாற்ற நினைக்கும் நபர்களிடம் அவசர உணர்வை உருவாக்குகிறார்கள். உதாரணமாக உடனடியாக அக்கவுண்ட் நம்பர், பின் நம்பர் போன்ற தகவல்களை அனுப்புமாறு கேட்கின்றனர். இதனை பார்க்கும் மக்களும் அவை உண்மையிலேயே வங்கியில் இருந்து அனுப்பப்பட்டது என்று நினைத்து அவர்களுக்கு பதில் அளித்து விடுகின்றனர்.
இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம்: உங்கள் மெயிலில் முறையானதாகத் தோன்றும் மோசடி இணையதளங்களுக்கான இணைப்புகளை வைத்து மோசடிக்காரர்கள், உங்களுக்கு மெயில் அனுப்பலாம். எனவே எப்போதும் உங்கள் வங்கியின் இணையதளங்களை பயன்படுத்த வேண்டும் என்றால் அதிகாரப்பூர்வ ஆப்-ஐ ப்ளே ஸ்டோரில் இருந்து டவுன்லோட் செய்து பயன்படுத்துங்கள்.
சாப்ட்வேர் அப்டேட்களை செய்யுங்கள்: உங்களுடைய OS, வெப் பிரவுசர் போன்றவற்றை புதுப்பித்து வைத்திருங்கள். ஏனெனில் டெவலப்பர்கள் தொடர்ந்து பாதுகாப்பு அம்சங்களை வெளியிடுகின்றனர். சைபர் கிரிமினல்கள் காலாவதியான அல்லது அவுடேட்டட் சாப்ட்வேர்களில் மட்டுமே மோசடி சம்பவங்களுக்குப் பயன்படுத்துகின்றனர்.
உங்கள் வைஃபையைப் பாதுகாக்கவும்: அங்கீகரிக்கப்படாத அணுகலைத் தடுக்க, உங்கள் வைஃபை நெட்வொர்க்கிற்கு ஸ்ட்ராங் பாஸ்வோர்ட்களைப் பயன்படுத்தவும். பாதுகாப்பான ஆன்லைன் வங்கி மற்றும் மெயில் பயன்பாட்டிற்கு பாதுகாப்பான Wi-Fi இணைப்பு முக்கியமானது.
பிஷிங் லிங்குகள்: உங்களுக்கு மெயில் அனுப்பும்போது, அதில் பிஷிங் லிங்குகளை வைத்து அனுப்பி விடுவார்கள். அதாவது இந்த லிங்குகளை கிளிக் செய்து உங்களுடைய தகவல்களை என்டர் செய்வதனால், உங்களுடைய அனைத்து சுய விவரங்களும் திருடப்படுகின்றன. எனவே, மெயில் மூலம் எந்த விதமான லிங்க் அனுப்பப்பட்டாலும், அது உண்மைதானா.. என்பதை ஒன்றுக்கு இரண்டு முறை சரி பார்த்துக் கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications