பொதுத் தேர்தலின் வாக்குப்பதிவு முடிந்த பின்பு வெளியான எக்சிட் போல் முடிவுகள் பங்குசந்தை வர்த்தகத்தில் நேரடியாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளிக்கிழமை வெளியான எக்சிட் போல் முடிவுகளின் தாக்கம் திங்கட்கிழமை வர்த்தகத்தில் இருக்கும் என ஏற்கனவே கணிக்கப்பட்டது என்றாலும் இன்று காலை பதிவான உயர்வு ஒரு வரலாற்று நிகழ்வாகும்.
திங்கட்கிழமை வர்த்தகத்தில் காலை வர்த்தகம் துவங்குவதற்கு முன்பு நடந்த ஃப்ரி மார்கெட் வர்த்தகத்தில் சென்செக்ஸ் 2600 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 3.55 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்து பங்குச்சந்தை முதலீட்டாளர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இதைத் தொடர்ந்து வர்த்தகம் துவங்கி பின் கணிசமாகச் சரிந்தாலும் 2000 புள்ளிகள் உயர்வில் வர்த்தகமாகி வருகிறது. இன்று காலை 9.49 மணிநேரத்தில் சென்செக்ஸ் குறியீடு 1769.67 புள்ளிகள் உயர்ந்து 75,730.98 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. இதேபோல் நிஃப்டி குறியீடு 578.40 புள்ளிகள் உயர்ந்து 23,109.10 புள்ளிகளை எட்டியுள்ளது.
இன்று காலை வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு அதிகப்படியாக 76,738.89 புள்ளிகளையும், நிஃப்டி குறியீடு 23,338.70 புள்ளிகள் என்ற வரலாற்று உச்ச அளவீட்டைத் தொட்டு உள்ளது.
இந்திய பங்குச்சந்தை கடந்த வாரம் முழுவதும், தேர்தல் எதிரொலியாலும், தேர்தல் முடிவுகள் எப்படியிருக்கும் என்பதில் நிலவிய நிச்சயமற்ற தன்மைகள் மற்றும் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்களால் (எஃப்ஐஐக்கள்) குறிப்பிடத்தக்க விற்பனையால் அதிகளவிலான சரிவையும், தடுமாற்றத்தையும் சந்தித்தன.
ஆனால், இது அனைத்தும் எக்சிட் போல் கருத்துக் கணிப்பிற்குப் பின்பு பிஜேபி வெற்றிக்குச் சாதகமாக இருக்கும் காரணத்தால் திங்களன்று சந்தையில் சாதகமான வர்த்தக சூழ்நிலை நிலவுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள வாய்ப்பு அதிகம் என்பதை எக்சிட் போல் கருத்துக்கணிப்புகள் கூறியுள்ள நிலையில், முதலீட்டாளர்களுக்கு மிகவும் சாதகமான சூழ்நிலை உருவாகியுள்ளது. இதன் வெளிப்பாடே இந்தியப் பங்குச்சந்தை திங்களன்று தடாலடியாக உயர்ந்தது.
வெளிநாட்டு தரகு நிறுவனமான Jefferies கருத்துப்படி, உண்மையான மக்களவைத் தேர்தல் முடிவுகளில், தற்போது வெளியாகியுள்ள எக்சிட் போல் கருத்துக்கணிப்புகள் பிரதிபலிக்கும் என்றால், அது நாட்டின் கேபெக்ஸ் பங்குகளுக்கு ஜாக்பாட் ஆக இருக்கும் என அறிவித்துள்ளது.
லோக்சபா தேர்தல் முடிவுகள் ஜூன் 4ம் தேதி அறிவிக்கப்படும்.
மேலும் Jefferies நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், பிஜேபி மீண்டும் ஆட்சி அமைத்து, 3வது முறையாக பிரதமர் ஆனால் பங்குச்சந்தையில் மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் பங்குகளை சுற்றியுள்ள அச்சம் குறைந்து, மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் பங்குகள் மந்த நிலையில் இருந்து வளர்ச்சி பாதைக்கு திரும்பும்.
ஏற்கனவே லார்ஜ்கேப் பங்குகள் வளர்ச்சி பாதையில் இருக்கும் வேளையில், மோடியின் 3வது ஆட்சியில் capex-க்கு தொடர்ந்து முதலீடுகள் குவிந்தால் தொடர்ந்து இப்பங்குகள் உயர துவங்கும். மேலும் அன்னிய முதலீட்டாளர்கள் லார்ஜ்கேப் பங்குகளில் அதிகப்படியாக முதலீடு செய்ய வாய்ப்புகள் அதிகம் எனவும் தெரிவித்துள்ளது.
More From GoodReturns

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!



Click it and Unblock the Notifications