இந்திய மிடில் கிளாஸ் மக்களின் நுகர்வை அதிகரிக்கும் விதமாக மத்திய அரசு ஜிஎஸ்டி வரிமுறையில் பெரிய அளவிலான சீர்திருத்தத்தை கொண்டு வந்திருக்கிறது. இதன் மூலம் நாம் வீட்டில் அன்றாடம் உபயோகப்படுத்தும் பல்வேறு பொருட்களின் விலை குறைகிறது.
செப்.22 முதல் அமல்: சிறிய ரக வாகனங்களின் விலை குறைகிறது, மருத்துவ காப்பீடு திட்டங்களுக்கான ஜிஎஸ்டி முழுவதுமாக ரத்து செய்யப்பட்டு இருப்பதால் அதற்காக நாம் செலுத்தும் கட்டணமும் குறைகிறது. இது தவிர டிவி, ரெஃப்ரிஜிரேட்டர் போன்ற சாதனங்களுக்கான வரி விகிதமும் குறைக்கப்பட்டு இருப்பதால் அவற்றின் விலையும் இந்தியாவில் செப்டம்பர் 22ஆம் தேதிக்கு பிறகு பெருமளவில் குறைய இருக்கிறது.

மிடில் கிளாஸ் மக்களுக்கு லாபம்: பண்டிகை காலத்தை ஒட்டி இந்தியாவில் மக்களுடைய நுகர்வு போக்கு அதிகமாக இருக்கும் இது தவிர போனஸ் வரவு , சேமிப்பை எடுப்பது என மக்களிடையே பணப்புழக்கமும் அதிகமாக இருக்கும் என்பதால் சரியான நேரத்தில் திட்டமிட்டு அரசு ஜிஎஸ்டி வரி சீர்த்திருத்தத்தை கொண்டு வந்திருக்கிறது. இந்த ஜிஎஸ்டி வரி சீர்த்திருத்தம் மிடில் கிளாஸ் மக்களுக்கு கணிசமான லாபத்தை தருவதாக அமைந்திருக்கிறது.
எவ்வளவு சேமிப்பு: ஒரு சராசரி மிடில் கிளாஸ் குடும்பம் ஆண்டுக்கு 12 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டுகிறது என வைத்துக்கொள்வோம் இந்த குடும்பம் உணவு, கல்வி, காப்பீடு போன்றவற்றுக்காக ஆண்டுக்கு 6 லட்சம் ரூபாயை செலவிடுகிறார்கள் என வைத்துக் கொள்வோம். இவர்கள் இனி இந்த 6 லட்சம் ரூபாயில் 45,000 ரூபாய் வரை சேமிக்க முடியும் என்கிறார் கிளியர் டேக்ஸின் தலைமை செயல் அதிகாரியாக இருக்கக்கூடிய ஆர்சித் குப்தா.
பெரிய தொகை சேமிப்பு: இந்த ஜிஎஸ்டி வரி குறைப்பு என்பது இந்த 6 லட்சம் ரூபாயில் ஆண்டுக்கு 45 ரூபாய் வரை சேமிப்பைத் தரும் என கூறும் அவர் அண்மையில் மத்திய அரசு ஆண்டுக்கு 12 லட்சம் ரூபாய் வரையில் வருமானம் ஈட்டும் நபர்களுக்கு எந்தவித வருமான வரியும் இல்லை என்ற வகையில் புதிய வருமான வரி கணக்கு தாக்கல் நடைமுறையில் பெரிய மாற்றத்தை அறிவித்தது. எனவே இந்த இரண்டையும் நாம் ஒருங்கிணைத்து பார்க்கும்போது ஆண்டுக்கு 12 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டக் கூடிய ஒரு சராசரி மிடில் கிளாஸ் குடும்பம் ஜிஎஸ்டி வரி திருத்தம் மற்றும் வருமான வரி விலக்கு ஆகிய இரண்டையும் சேர்த்து மொத்தமாக 1.25 லட்சம் ரூபாய் வரை சேமிக்க முடியும் என தெரிவிக்கிறார்.
முதலீடாக மாறும்:இந்த 1.25 லட்சம் ரூபாய் என்பது அரசுக்கு செல்லாமல் நேரடியாக மக்களின் கைகளிலேயே புழங்க போகிறது என கூறும் குப்தா, மக்கள் நிச்சயமாக இந்த தொகையை கைகளில் வைத்திருக்க மாட்டார்கள் இதனை கொண்டு ஏதேனும் பொருட்களை வாங்குவார்கள் சிலர் முதலீடு கூட மேற்கொள்வார்கள், எனவே இந்த பணம் மக்களுக்கு சேமிப்பாகவோ அல்லது பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு வருமானமாகவும் மாறப்போகிறது என கூறுகிறார்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications