சென்னை: பெண் குழந்தைகளுக்கான முதலீட்டுத் திட்டம் என்றாலே முதலில் நம் நினைவுக்கு வருவது சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டம் தான். இந்த திட்டம் பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்கான நீண்ட கால முதலீடுகளில் பிரபலமான தேர்வாக உள்ளது. இதனால் பலரும் தங்கள் பெண் குழந்தைகளுக்காக, இந்தத் திட்டத்தில் மட்டுமே முதலீடு செய்கின்றனர். ஆனால் பெண் குழந்தைகளுக்கு ஏற்ற வேறு சில திட்டங்களைப் பற்றியும் ஆராய்வது மிக முக்கியமாகும். எனவே, உங்களுக்கு உதவும் வகையில் பெண் குழந்தைகளுக்கு ஏற்ற சில முதலீடு திட்டங்களைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
ஓய்வூதியத்திற்காக சேமிக்க வேண்டும் என்று வரும்போது, நாம் பிற முதலீட்டு விருப்பங்களைப் பற்றி அடிக்கடி தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டுகிறோம். ஆனால், இந்த விழிப்புணர்வின் அடிப்படையில் பார்க்கும்போது, குழந்தைகளுக்கு குறிப்பாக பெண் குழந்தைகளுக்கான முதலீட்டு முடிவுகளை எடுக்கும் போது, நாம் பெரும்பாலும் இது போன்ற அவசர உணர்வையும், விழிப்புணர்வையும் கொண்டிருப்பதில்லை.

அதன் அடிப்படையில் சுகன்யா சம்ருதி யோஜனா திட்டம் மட்டுமே பலரின் விருப்பத்தேர்வாக உள்ளது. உங்கள் மகளுக்கு நீங்கள் வேறு எதில் முதலீடு செய்வது அல்லது வேறு எந்த சேமிப்பில் கவனம் செலுத்தலாம் என்பது குறித்து பார்ப்போம்.
தங்க நகை சேமிப்பு: கடந்த ஆறு ஆண்டுகளில் தங்கம் சுமார் 10 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் இந்த ஆண்டு சுமார் ரூ. 10,000 வரை 10 கிராம் பவுனுக்கான விலை அதிகரித்துள்ளது. இதன் அடிப்படையில் பார்க்கும்போது, பெற்றோர் தங்கள் மகளுக்கு தங்கத்தில் சேமிக்கலாம். பொருளாதார நிச்சயமற்றத் தன்மை, புவிசார் பதட்டங்களுக்கு மத்தியில் தங்கம் திறந்த முதலீடாகப் பார்க்கப்படுகிறது. இதனால் ஒருவர் தங்கத்தில் சேமிப்பது சிறந்த பலன்களைப் பெற்றுத் தரும்.
நிலம் வாங்குதல்: நீங்கள் உங்கள் மகளின் திருமணத்திற்காக சேமிக்க நினைத்தால், ஒரு நிலத்தை வாங்கி வைக்கலாம். இதன் மூலம் உங்கள் மகள் வளர்ந்த பிறகு அந்த நிலத்தை விற்று, நீங்கள் அவரின் திருமண செலவிற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். மண்ணில் முதலீட்டைப் போடுவதும், பொன்னில் முதலீட்டைப் போடுவதும் சிறந்தத் தேர்வாகவே உள்ளது.
பிக்சட் டெபாசிட்கள்: பிக்சட் டெபாசிட்களும் அதிகம் விரும்பப்படும் நீட நாள் சேமிப்பு வகைகளில் ஒன்று. இந்தியாவில் சேமிக்கப்படும் முதலீடுகளில் மிகவும் பிரபலமானது இந்த FDகள். அதுவும் தற்போது பேங்குகளும், NBFC நிறுவனங்களும், FDகளுக்கு அதிக வட்டி விகிதத்தை வழங்கி வருகிறது. இதன் அடிப்படையில் உங்கள் மகளுக்கு சேமிக்க நினைத்தால், நீங்கள் FDகளைத் தேர்வு செய்வது சிறந்த பலன்களைத் தரும்.
மியூச்சுவல் ஃபண்ட்: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள், அதிக லாபத்தை பெற்று தரும். ஆனால் சந்தை ஏற்ற இறக்கங்கள் போன்றவற்றை கவனத்தில் கொள்வது அவசியம். ஃபண்டின் வகை, கடந்த காலத்தில் ஃபண்டின் செயல் திறன் எவ்வாறு இருந்தது என்பது குறித்து ஆராய்ந்த பிறகு, ஒரு நல்ல ஃபாண்ட் ஹவுஸில் முதலீடு செய்வது சிறந்த லாபத்தை பெற்று தர உதவியாக இருக்கும்.
குறிப்பு: முதலீடு செய்வதற்கு முன் உங்கள் நிதி ஆலோசகரை, அணுகி சுய விருப்பத்துடன் முதலீடு செய்யவும்.
More From GoodReturns

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?

தங்கம் விலையேற இதுதான் காரணமா? 23 மாதங்களாக தொடரும் வேட்டை!அமெரிக்காவையே ஓரங்கட்டிய நாடுகள்? ஏன்?

தங்கம், வெள்ளி விலையில் நடந்த திடீர் மாற்றம்: நகை வாங்க இது நல்ல நேரமா?

தங்கம் விலையில் அதிரடி திருப்பம்! டிரம்ப் கொடுத்த போர் நிறுத்த ட்விஸ்ட்! அடுத்து என்ன நடக்கும்?

குறைந்த விலையில் தங்கம் வாங்க ஆசையா?18K vs 22K - அட்சய திருதியையில் எது வாங்குவது புத்திசாலித்தனம்?

ரூ.666 இருந்தால் போதும் ரூ.1 கோடி இலக்கை எட்டலாம்…!! அட இவ்வளவு ஈஸியான வழி இருக்கா?

தங்கம், வெள்ளி விலை லைவ் அப்டேட்ஸ்: இனி வரும் நாட்களில் விலை ஏறுமா? இறங்குமா?

கோவையில் இன்று தங்கம் விலை அதிரடி சரிவு; இந்த நிலை அப்படியே நீடிக்குமா?

கோவையில் இன்று தங்கம் விலை அதிரடி உயர்வு: சாமானிய மக்கள் அதிர்ச்சி!!

கோயம்புத்தூரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன? இன்று தங்கம் வாங்கலாமா?

மதுரை மக்களே தங்கம் வாங்குற பிளான் இருக்கா? உங்களுக்கு தான் இந்த செய்தி



Click it and Unblock the Notifications