மோசடி எல்லா தொழிலிலும் நடைபெறுகிறது. கொஞ்சம் சுதாரிப்பாக இல்லாவிட்டால் அவ்வளவுதான் இதுதான் சமயம் என்று பிராடு நபர்கள் நம்மை நன்றாக சொம்பு அடித்து விடுவார்கள். எனவே எப்போதும் தொழிலில் கொஞ்சம் உஷாராகவே இருக்க வேண்டும்.
வருமான வரி ஏய்ப்பு போலவே இப்போது ஜிஎஸ்டி வரியிலும் கோடிக்கணக்கான ரூபாய்கள் மோசடி நடைபெறுகிறது. உண்மையான பொருட்கள் அல்லது சேவைகள் வழங்கப்படாமலோ அல்லது ஜிஎஸ்டி செலுத்தாமலோ, வணிகர்கள் மற்றும் வாடிக்கையாளர்களை ஏமாற்றுவதற்காக மோசடி செய்பவர்களால் போலி ஜிஎஸ்டி பில் தயாரிக்கப்படுகிறது. இது அடிப்படையில் வரி ஏய்ப்பு போன்ற பல்வேறு மோசடி காரணங்களுக்காக இவ்வாறு செய்யப்படுகிறது.

கடந்த 2017 ஆம் ஆண்டு சரக்கு மற்றும் சேவை வரிகள் என்ற ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்பட்டது. வாட், சர்வீஸ் டாக்ஸ் போன்ற பல அடுக்கு நேரடி வரிவிதிப்பை தவிர்ப்பதுதான் இந்த ஜிஎஸ்டியின் நோக்கமாகும்.
ஜிஎஸ்டியின் கீழ் பதிவு செய்யப்பட்ட எல்லா தொழில்களும் ஒரு இன்வாய்ஸை வழங்க வேண்டும்.
அந்த இன்வாய்ஸில் செல்லத்தக்க GSTIN, அதன் பிரேக்அப்பில் GST, Central GST மற்றும் State GST தரப்பட வேண்டும். இருப்பினும் எல்லா புதிய திட்டங்களைப் போலவே மோசடி நபர்கள் ஜிஎஸ்டி அமைப்பையும் தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்கின்றனர். போலியான ஜிஎஸ்டி இன்வாய்ஸ்கள் அதிகாரிகளுக்கு பெரும் தலைவலியாக ஆகிவிட்டது.
குறிப்பாக சிறிய தொழில்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு மிகப் பெரிய பிரச்னையை ஏற்படுத்திவிடும். வரி பெயரில் வாடிக்கையாளர்கள் செலுத்தும் பணத்தை போலியாக மோசடி நபர்கள் உருவாக்கி விடுகின்றனர். இந்த போலி இன்வாய்ஸ்கள் மூலம் நடைபெறும் வரிமோசடி பல கோடி ரூபாயைத் தாண்டும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஒரு இன்வாய்ஸ் சரியானதா அல்லது போலியானதா என்பதை அறிய மத்திய அரசின் ஜிஎஸ்டி போர்ட்டலில் பார்க்கலாம். ஜிஎஸ்டியின் www.gst.gov.in என்ற வெப்சைட்டில் இன்வாய்சின் வேலிடிட்டியை சரி பார்க்க முடியும்.
அதில் Search Taxpayer என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து Search by GSTIN/UIN என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். நம்பரை என்டர் செய்து காப்சாவை அளித்து Search ஆப்ஷனை கிளிக் செய்யவும். அதில் சரியான எண் இருந்தால் காண்பிக்கும் இல்லையென்றால் இன்வாய்ஸ் போலி என்பதை அறியலாம்.
இன்வாய்சில் உள்ள ஆபிஸ் பிராண்டிங் மற்றும் லோகோ, பேமெண்ட் அறிவுரை, முந்தைய பேமெண்ட் ஹிஸ்டரி போன்றவற்றை சரி பார்க்கலாம். தவறுகளை தடுப்பதற்கு மோசடி தடுப்பு சாப்ட்வேர்களை பயன்படுத்தலாம். எப்போதும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
அரசின் ஜிஎஸ்டி போர்ட்டலில் Services tab>>Payments>>Track Payment Status என்று கிளிக் செய்தால் கண்டுபிடித்துவிடலாம். பேமெண்ட் ஸ்டேட்டஸை பார்க்க நீங்கள் லாகின் செய்யவேண்டும். பின்னர் உங்களது CPIN மற்றும் GSTINஐ என்டர் செய்யவும். உங்களது ஜிஎஸ்டி பேமன்ட் ஸ்டேட்டஸையும் சரி பார்க்கலாம்.
போலியான ஜிஎஸ்டி இன்வாய்ஸ் பற்றி புகார் செய்வதற்கு ஜிஎஸ்டி போர்ட்டலில் நுழைந்து CBEC Mitra Helpdesk வை கிளிக் செய்யவும். பின்னர் 'Raise Web Ticket' என்பதை கிளிக் செய்யவும்.
இதுதவிர [email protected] என்ற இமெயிலுக்கு மெயில்கள் மூலமும் புகார் செய்யலாம்.


Click it and Unblock the Notifications