உண்மையா போலியா? வாழ்க்கையில் இந்தக் கேள்வி எல்லா சமாச்சாரங்களிலும் எழுந்து நிற்கும். இது இப்போது தொழில்நிறுவனங்களில் அதிகமாக கேட்கப்படுகிறது. ஊழியர்கள் தங்களது பணி அனுபவம், சம்பள விவரம் பற்றி தவறான தகவல்களைத் தந்ததற்காக சுமார் 8% ஊழியர்கள் மோசடி குற்றச்சாட்டில் சிக்கும் ஆபத்தில் உள்ளனர் என்று ஒரு இன்டக்ரேட்டடு ஐடன்டிட்டி தளமான IDfy இன் பேக்கிரவுண்டு செக்கிங் பற்றிய சமீபத்திய அறிக்கை கூறுகிறது.
கடந்த ஆண்டில் இந்திய நிறுவனங்கள் முழுவதும் 2.5 மில்லியன் பேக்கிரவுண்டு செக்கிங் அறிக்கை தாக்கல் செய்யப்ட்டுள்ளது. ஊழியர்கள் ஒரு நிறுவனத்தில் சேரும் போது,தங்களது பயோடேட்டாவில் தரும் விவரங்கள் பற்றி அவர்களை வேலைக்கு சேர்த்த நிறுவனங்கள் பேக் கிரவுண்டு செக்கிங் செய்யும்.

பேக் கிரவுண்டு செக்கிங் என்பது ஊழியர்களின் முகவரி, தகுதி, அனுபவம், குற்றப் பதிவுகளுக்கான சரிபார்ப்பு ஆகியவை அடங்கும். IDfy இந்த சோதனைகளைச் செய்து, சிவப்பு, மஞ்சள், பச்சை ஆகிய மூன்று நிலைகளில் செக்கிங்கை வகைப்படுத்துகிறது.
இதில் நிறுவனங்கள் கவலைப்பட ஒரு காரணம் உள்ளது. தொலைநிலைப் பணியின் விளைவாகவும், தனிப்பட்ட நிதி அழுத்தங்கள், வேலையில் செய்ய வேண்டிய பொறுப்புகளின் விளைவாகவும், ஊழியர்களின் மோசடிகள் அதிகரித்து வருவதை நாங்கள் காண்கிறோம் என்கிறார் டெலாய்ட் இந்தியாவின் நிதி ஆலோசனையின் கூட்டாளர்-தடயவியல், ஜெயந்த் சரண்.
தனிப்பட்ட ஆதாயத்துக்காக அல்லது ஒருவரின் வணிகம் அல்லது தொழிலை மேம்படுத்துவதற்காக இதுபோன்ற மோசடிகளில் ஊழியர்கள் ஈடுபடுகின்றனர் எனத் தெரிய வந்துள்ளது. வங்கி, நிதிச் சேவைகள் மற்றும் காப்பீடு, இ-காமர்ஸ் போன்ற தொழில்களில் இந்த மோசடிகள் அதிகம் காணப்படுகின்றன.
வங்கி, நிதிச் சேவைகள் மற்றும் காப்பீடு ஆகிய துறைகளில் நடத்தப்பட்ட பேக் கிரவுண்டு செக்கிங்களில் அதிக எண்ணிக்கையிலான சிவப்பு வகுத்தல்கள் கண்டறியப்பட்டுள்ளன. பொதுவாக கடன் தரும் நிறுவனங்கள் தான் ஊழியர்களின் இதுபோன்ற 75 சதவீத மோசடியை எதிர்கொள்கின்றனர்.
எனவே நிறுவனங்களில் நம்பகமான ஊழியர்களுக்கு பெரிய தொகையைக் கையாளும் பொறுப்பைத் தரவேண்டும். ஆள் எடுத்தல் மற்றும் பணித்தேர்வு துறையில் 15.48 சதவீதம் முகவரி சரிபார்ப்பில் பிழை இருப்பதை காணமுடிகிறது. 14.62 சதவீதம் பேரின் பணி அனுபவம் தவறாக இருக்கிறது.
ஈ-காமர்ஸைப் பொறுத்தவரை, தாற்காலிகத் தொழிலாளர்களை பணியமர்த்தும்போது இதுபோன்ற சிரமங்கள் ஏற்படுகிறது. முகவரிச் சரிபார்ப்புகளில் 15.25% மோசடி கண்டறிதல் பெரும் சிக்கலாக இருக்கிறது. பலர் தொலைதூர இடங்களிலிருந்து நகரங்களுக்கு வருகிறார்கள். அப்படிப்பட்டவர்களின் முகவரி உள்ளிட்ட தகவல்களை செக் செய்வது மிகவும் சிரமம்.
அதேசமயத்தில் வெறும் 10,000-12,000 ரூபாய் செலவழித்தால் போதும். போலி அனுபவக் கடிதங்கள், ஊதியச் சீட்டுகள் , ஊதிய உயர்வு கடிதம் ஆகியவற்றை நீங்கள் பெறலாம் என்று ஐடிஃபை நிறுவனம் கூறுகிறது. எனவே பேக் கிரவுண்டு செக்கிங்கில் நல்ல அனுபவம் வாய்ந்த நிபுணர்களை வைத்து சோதிக்காதவரை நீங்கள் இதுபோன்ற மோசடிகளைக் கண்டறிவது மிகவும் கடினம்.
இதுபற்றி ஐடிஃபையின் சிஇஓ மற்றும் இணை நிறுவனர் அசோக் ஹரிஹரன் கூறுகையில் ஆபத்து எப்போதும் நிலையானது அல்ல, எப்போதும் உருவாகிக்கொண்டே இருக்கும் என்பதை தலைவர்கள் அறிந்திருக்க வேண்டும். எனவே நிறுவனத்தில் உள்ள மூத்த தலைவர்கள் ஊழியர்களின் மோசடி போக்குகளை கண்டுபிடிக்க வேண்டும்; தற்போதுள்ள பேக்கிரவுண்டு வெரிஃபிகேஷன் செயல்முறைகள் பழமையானதாகவும் பயனற்றதாகவும் இருக்கிறது.
ஊழியர்களின் மோசடி அபாயத்தை அவ்வப்போது மறுமதிப்பீடு செய்வதையும், மூத்த பணியமர்த்துபவர்கள் மற்றும் முக்கியப் பணிகளில் இருப்பவர்கள் குறித்தும் அவ்வப்போது பின்னணிச் சரிபார்ப்புகளைச் செய்ய வேண்டும் என்பதையும் இது குறிக்கிறது.
நிறுவனங்களை ஒட்டுமொத்தமாக பாதிக்கக்கூடிய கூறுகள் தொடர்பான இடர்களை அடையாளம் காண ஆர்டிபிசியல் இன்டலிஜென்ஸின் அதிகளவில் பலன் தருகிறது. மோசடியைக் கண்டறிந்து தடுக்க டேட்டா, குரல் மற்றும் முக அங்கீகாரம் ஆகியவற்றில் மெஷின் லேர்னிங் மற்றும் ஆர்டிபிசியல் இன்டலிஜென்ஸின் பயன்பாடுகளையும் பயன்படுத்தலாம். ஆட்சேர்ப்பு, பேக் கிரவுண்டு செக்கிங், கேஒய்சி சரிபார்ப்பு ஆகியவற்றுக்கு இதை பயன்படுத்தலாம்.
Story written by: I.jayachandran
More From GoodReturns

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!



Click it and Unblock the Notifications